[OLD SYLLABUS] TNPSC Group Group 4 and VAO General Tamil (Archived)

⚠️ பழைய பாடத்திட்டம் (Old Syllabus)

Tamil: இந்தப் பக்கம் உங்கள் குறிப்பிற்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இது TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான பழைய பொதுத் தமிழ் பாடத்திட்டம் ஆகும். தற்போதைய தேர்வுத் தயாரிப்பிற்கு, தயவுசெய்து சமீபத்திய திருத்தப்பட்ட பாடத்திட்டத்தைப் பின்பற்றவும்.


English: This page is maintained for archival purposes only. This is the OLD TNPSC Group 2 & 2A General Tamil syllabus. For current exam preparation, please refer to the latest revised syllabus to ensure you are studying the correct topics.

புதிய பாடத்திட்டத்தை இங்கே காணவும் (View New Syllabus)

⚠️ This is the OLD TNPSC syllabus. Click here to view the Latest Revised Syllabus


Click to view Old Syllabus Content

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம்  

பொதுத்தமிழ் கீழ் மூன்று பிரிவுகள் உள்ளது. அவை ,
  1. இலக்கணம், 
  2. இலக்கியம், 
  3. தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் 
ஆகும். 

TNPSC General Tamil Study Material in Tamil- பொதுத்தமிழ்

இவை அனைத்தும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்து விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

Part - 1 பகுதி 'அ' இலக்கணம்

  1. பொருத்துதல்
  2. தொடரும் தொடர்பும் அறிதல்
  3. பிரித்தெழுதுக
  4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
  6. பிழை திருத்தம்
  7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
  9. ஓரெழுத்து ஒருமொழியின் உரிய பொருளைக் கண்டறிதல்
  10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
  11. வேர்ச்சொல்லை கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்
  12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
  13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
  14. பெயர்சொல்லின் வகையறிதல்
  15. இலக்கணக் குறிப்பறிதல்
  16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
  17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
  18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
  19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
  20. மோனை, எதுகை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
  21. பழமொழிகள்

Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம்

  1.  திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்ஊக்கமுடைமைஈகை, தெரிந்து செயல்வகை , இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
  2. அறநூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள். 
  3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள். 
  4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்
  5. சிலப்பதிகாரம், மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள். 
  6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம்- தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்
  7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம் - தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள். 
  8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள். 
  9. நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள். 
  10. சமய முன்னோடிகள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார். எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் 

  1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். 
  2. மரபுக் கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள். 
  3.  புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள் 
  4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள். 
  5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்
  6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் பொருத்துதல். 
  7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள். 
  8. தமிழின் தொன்மை - தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள். 
  9.  உரைநடை - மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் - மொழி நடை தொடர்பான செய்திகள். 
  10. உவே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள். 
  11. தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள். 
  12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள். 
  13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் - அம்பேத்கர் - காமராசர் - ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் சமுதாயத் தொண்டு. 
  14. தமிழகம் ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
  15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும். 
  16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
  17.  தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார். 
  18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் தொடர்பான செய்திகள். 
  19.  உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள். 
  20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார். திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள். 
  21. நூலகம் பற்றிய செய்திகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.