இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனக் குறிக்கப்பெறுகின்றது. சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள் எனக் என்பர். தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.
பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன.
- பாட்டு என்பது பத்துப்பாட்டையும்,
- தொகை என்பது எட்டுத்தொகையையும்
குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர்.
இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன.
பாடத்தலைப்புகள்(toc)
சங்க இலக்கியம்
- சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381.
- இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862.
- புறத்திணைப்பாடல்கள் 519.
- சங்கப்புலவர் எண்ணிக்கை 473.
- பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49.
இவர்களுள்,
- 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் ஒரே பாடலால் உலப்புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனாரும் உண்டு:
- 235 பாடல்களைப் பாடி முதலிடத்தைப் பெறும் கபிலரும் உண்டு.
அரசர், வணிகர், மருத்துவர், கணியர் போன்று சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரும் நல்லிசைப்புலவராய் விளங்கினர். பெண்பாற் புலவர்களும் தனிச்சிறப்புப் பெற்றிருந்தனர். இயற்பெயரன்றி, பாடலில் இடம்பெற்ற தொடர்களால் பெயர் பெற்ற கவிஞர்களும் உண்டு.
- சங்ககாலப் புலவர்களைச் 'சான்றோர்' எனச் சுட்டுவது தமிழ் மரபு.
பதினெண்மேல்கணக்கு
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத் தொகையில் எட்டு நூல்களும் உள்ளன. மொத்தம் பதினெட்டு நூல்களின் தொகுப்பு "பதினெண்மேல்கணக்கு" என்று வழங்கப்படுகிறது. இவற்றை "மேல்கணக்கு நூல்கள்” என்று கூறும் வழக்கமும் உண்டு.
எட்டுத்தொகை
எட்டு தொகுப்பு நூல்கள் ஒரே காலத்தனவாய் உள்ளன. இவற்றை கூட்டி நூல்களை எட்டுத்தொகை என இயம்புவது மரபு.
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை,
அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.
'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு)அகம்புறம் என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை" (code-box)
என்னும் பழம்பாடல் பதிற்றுப்பத்தும் எட்டுத்தொகை நூல்களைச் சுட்டுகின்றது.
- இவற்றுள் புறநானூறும் புறப்பொருள் பற்றிய நூல்களாகும்.
- பரிபாடல் அகப்புறப்பாடல்களைக் கொண்ட நூல்.
- எஞ்சியவை அகப்பொருள் நூல்களாம்.
அகப்பொருள் பற்றிய நூல்களிலிருந்து பழந்தமிழ் மக்களின் அகவாழ்க்கை முறையினையும், புறப்பொருள் நூல்களிலிருந்து புறவாழ்க்கை முறையினையும் தெளிவாகக் காணலாம்.
மேலும், சங்க காலப் பாடல்கள் பலவும் பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு இலக்கியங்களாய்த் திகழ்கின்றன.
எட்டுத்தொகை எத்தனை வகைபடும்?
எட்டுத்தொகை வகைகள்
அவை,
- நற்றிணை,
- குறுந்தொகை,
- ஐங்குறுநூறு,
- பதிற்றுப்பத்து,
- பரிபாடல்,
- கலித்தொகை,
- அகநானூறு,
- புறநானூறு
எனப்படும்.
எட்டுத்தொகை வகைகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
பொருள் | பாடல் | பாக்கள் | கிடைத்தவை | அடி அளவு | ஆசிரியர்கள் | தொகுத்தவர் | தொகுப்பித்தவர் | வாழ்த்தப் பெற்றவர்/வாழ்த்தியவர் |
அகம் (5) | ஐங்குறுநூறு | 500 அகவற்பா | 498 | 3-6 |
5 |
புறத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | சிவன்/பாரதம் பாடிய பெருந்தேவன் |
குறுந்தொகை | 400 | 400 | 4-8 |
205 |
உப்பூரிக்குடி கிழார் | பூரிக்கோ | முருகன்/பாரதம் பாடிய பெருந்தேவன | |
நற்றிணை | 400 | 400 | 9-12 |
275 |
- |
பன்னாடு தந்த மாறன் வழுதி |
திருமால்/பாரதம் பாடிய பெருந்தேவன் | |
அகநானூறு | 400 | 400 | 13-31 |
145 |
மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மனார் |
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி | சிவன்/பாரதம் பாடிய பெருந்தேவன் | |
கலித்தொகை | 150 கலி | 150 |
5 |
நல்லந்துவனார் | - |
சிவன்/நல்லந்துவனார் | ||
புறம்(2) | புறநானூறு | 400 அகவற்பா | 398 |
4-40 |
160 |
- |
- |
சிவன்/பாரதம் பாடிய பெருந்தேவன் |
பதிற்றுப்பத்து | 100 |
100 |
4-40 | 10 |
தெரியவில்லை | தெரியவில்லை | சிவன் | |
அகமும் புறமும் (1) | பரிபாடல் | 70 பரிபாடல் | 22 |
25-40 |
13 |
- |
- |
- |
இவையனைத்தும் பல புலவர்கள் பல காலத்திற் பாடிய பாட்டுக்களின் தொகையாகும்.
அகநூல் (5)
- ஐங்குறுநூறு
- குறுந்தொகை
- நற்றிணை
- அகநானூறு
- கலித்தொகை
புறம் நூல் (2)
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
அகமும் புறமும் (1)
- பரிபாடல்
எட்டுத்தொகை நூலின் சிறப்புகள்:
- எட்டுத் தொகை நூல்களில் அடி அளவில் சிறியது ஐங்குறுநூறு.
- எட்டுத் தொகை நூல்களில் அடி அளவில் பெரியது அகநானூறு.
பத்துப்பாட்டு
பத்துப்பாட்டில் பத்து நூல்கள் உள்ளன.
பத்துப்பாட்டு எத்தனை வகைபடும்?
பத்துப்பாட்டு வகைகள்
அவை,
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- பெரும் பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை
- குறிஞ்சிப் பாட்டு
- முல்லைப் பாட்டு
- பட்டினப்பாலை
- நெடுநல்வாடை
- மதுரைக் காஞ்சி
எனப்படும்.
பத்துப்பாட்டு வகைகள் | ||||
---|---|---|---|---|
பொருள் | பாட்டு | பாடிய புலவர்கள் | பாட்டுடைத் தலைவன் | அடி அளவு |
ஆற்றுப்படை | திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | முருகன் | 317 ஆசிரியப்பா |
பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் | கரிகாலன் |
248 ஆசிரியப்பா | |
சிறுபாணாற்றுப்படை | நத்தத்தனார் | நல்லியக்கோடன் | 269 ஆசிரியப்பா | |
பெரும்பாணாற்றுப்படை | உருத்திரங்கண்ணனார் | இளந்திரையன் | 500 ஆசிரியப்பா | |
மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை | பெருங்கௌசிகனார் | நன்னன் சேய் நன்னன் | 583 ஆசிரியப்பா | |
அகம் (3) | குறிஞ்சிப்பாட்டு | கபிலர் |
ஆரிய அரசன் பிருகத்தன் | 261 ஆசிரியப்பா |
முல்லைப்பாட்டு | நம்பூதனார் | நெடுஞ்செழியன் | 103 அகவல் | |
பட்டினப்பாலை | உருத்திரங்கண்ணனார் | கரிகாலன் | 301 அகவல் | |
புறம் (2) | நெடுநல்வாடை | நக்கீரர் |
பாண்டியன் நெடுஞ்செழியன் | 188 அகவல் |
மதுரைக் காஞ்சி | மாங்குடி மருதனார் | பாண்டியன் நெடுஞ்செழியன் | 782 ஆசிரியப்பா |
ஆற்றுப்படை என்றால் என்ன?
ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
ஆற்றுப்படை நூல்கள் யாவை?
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை
பத்துப்பாட்டின் சிறப்புகள் :
- பாணாற்றுப்படை நூல்களில் சிறியது சிறுபாணாற்றுப் படை
- ஆற்றுப்படை நூல்களில் அதிக அடி அளவு மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை.
- பெருங்குறிஞ்சி எனப் போற்றப்படும் நூல் குறிஞ்சிப்பாட்டு.
- பத்துப் பாட்டில் குறைந்த அடியளவுடையது முல்லைப் பாட்டு.
- பத்துப்பாட்டு நூல்களிலே பெரிய பாடல்வரிகள் கொண்டது - மதுரைக் காஞ்சி.
- பத்துப்பாட்டு நூல்களுள் புறத்திணையின் பெயரால் அமைந்த ஒரே நூல் மதுரைக் காஞ்சி.
பதினெண்கீழ்க்கணக்கு
சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு "பதினெண்கீழ்க்கணக்கு" என்று வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் :
- பதினெண் என்றால் பதினெட்டு என்று பொருள்.
இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
அறநூல் -11:
- நாலடியார் - சமண முனிவர்கள்
- நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
- இன்னா நாற்பது - கபிலர்
- இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
- திரிகடுகம் - நல்லாதனார்
- ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார்
- பழமொழி நானூறு - முன்றுறையரையனார்
- சிறுபஞ்சமூலம் - காரியாசான்
- ஏலாதி - கணிமேதாவியார்
- முதுமொழிக் காஞ்சி - மதுரைக் கூடலூர்கிழார்
- திருக்குறள் - திருவள்ளுவர்
அகநூல் - 6
புறநூல் -1
களவழி நாற்பது - பொய்கையார்
சங்க இலக்கியப் பாடல்கள் தம் பாடுபொருள்களாலும், திணை, துறை, மரபு முதலியவற்றாலும் சிறப்புற்று விளங்குகின்றன. ஐந்திணையொழுக்கம்,இயற்கையைப்போற்றும் பாங்கு, மனிதநெறி கூறும் பான்மை போன்றன தமிழிலக்கியங்களில் விரவியுள்ளன. உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி உள்ளிட்ட உத்திகளைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ள விதமும் போற்றத்தக்கது. நம்மொழியின்கண் அமைந்த செவ்வியல் கவிதைகளை ஆழ, அகலக்கற்று இன்புறுவோம்.
Puraththinai marapin pirathana amsaggal
பதிலளிநீக்குPlease share your valuable comments