தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எழுத்துகளின் பெயர் பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.
பெயர் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
எழுத்துகளின் பெயர் என்றால் என்ன?
எழுத்துக்களின் பெயர்கள் அகர முதல் ஔகாரம் ஈறாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களையும் உயிர் என்னும் ககர முதல் னகரம் ஈறாக உள்ள பதினெட்டு எழுத்துக்களையும் மெய் என்றும் அறிவுடையோர் கூறினர்.
- உயிர் - உயிர் போன்ற உயிரைச் சார்ந்து இயங்கவல்லது
-
மெய் - மெய் (உடம்பு) போன்று உயிரைச் சார்ந்து இயங்கவல்லது.
உயிர்
அகரம் முதல் ஓளகாரம் வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் என்றும்,
மெய்
க் முதல் ன் வரையுள்ள பதினெட்டு எழுத்துகளும்
மெய் என்றும் பெயர் பெறும், என்று நன்னூல் எழுத்துகளுக்குப் பெயரிட்டு அழைக்கிறது.
குறில்
உயிர் எழுத்துகளுள் அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துகளும் குறில் எனப்பெயர் பெறும்.
நெடில்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு எழுத்துகளும்
நெடில் எழுத்துகள் எனப்பெயர் பெறும்.
சுட்டு
அ, இ, உ என்னும் மூன்று எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வந்து சுட்டுப் பொருளை
உணர்த்துவதால் அவை
சுட்டெழுத்துகள் எனப் பெயரிடப்பட்டன.
வினா
எ,யா என்னும் இரண்டெழுத்துகளும் மொழிக்கு முதலிலும் ஆ, ஓ என்னும் எழுத்துகள்
இரண்டும் மொழிக்கு இறுதியிலும் ஏ என்னும் எழுத்து மொழிக்கு முதல் மற்றும் இறுதி
ஆகிய இரண்டு இடங்களிலும் வினாப் பொருளை உணர்த்தி வருமென்பதால் அவை
வினா எழுத்துகள்
எனப் பெயர் பெற்றன.
இடுகுறிப்பெயர்
ஒரு காரணமும் இல்லாமல், தொன்றுதொட்டு ஆன்றோரால் வழங்கி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர்கள் எனப்படும்.
இடுகுறிப் பெயர்கள் சான்று: எடுத்துக்காட்டு - மண், நாய், கோழி, மரம்.
கல், கலம், கன்னல்
காரணப்பெயர்
காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள்காரணப் பெயர்கள் எனப்படும்.காரணப் பெயர்கள் சான்று: எடுத்துக்காட்டு (எ.கா.) பறவை (பறத்தல்), வளையல், செங்கல், முக்காலி (மூன்று கால்கள்),கரும்பலகை.
இன எழுத்துகள்
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.
இன எழுத்துகள் சான்று:
- (ங்,க்) (ஞ்,ச்) (ட்,ண்) (த்,ந்) (ம்,ப்) (ற்,ன்) ஆகியவை இன எழுத்துக்கள்.
- (எகா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்
இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
மயங்கொலி எழுத்துகள்
உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
ஆனால் இடையே பொருள் வேறுபாடு உண்டு.
இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
(ண, ன, ந),(ல, ழ, ள),(ர, ற) ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
மயங்கொலிப் பிழைகள்
TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்
1. வளையல் எவ்வகை பெயர்?
Please share your valuable comments