தமிழ் இன எழுத்துகள் - (ங்,க்) (ஞ்,ச்) (ட்,ண்) (த்,ந்) (ம்,ப்) (ற்,ன்)

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது. நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எழுத்துகளின் பெயர்களில் ஒன்றான இன எழுத்துகள் பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

இன எழுத்துகள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் பெயர்

பாடத்தலைப்புகள்(toc)

தமிழ் இன எழுத்துகள் என்றால் என்ன?

நண்பர்களோடு சேர்ந்திருப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்தானே! உங்களைப்போலத்தான் சில எழுத்துகளும் ஒன்றாகவே இருக்க விரும்புகின்றன. அவற்றை இன எழுத்துகள் என அழைக்கின்றனர். 

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அன்பாகப் பேசுவது, ஒரே மாதிரியாக ஆடை அணிவது என்று சில பண்புகள் பொதுவாக இருப்பதைப் போல, இன எழுத்துகளும் பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி, கால அளவு, வடிவம் முதலியவற்றில் ஒத்துப்போகின்றன. 

இன எழுத்துகள் யாவை?

  • மெய் எழுத்துக்களில் (ங்,க்) (ஞ்,ச்) (ட்,ண்) (த்,ந்) (ம்,ப்) (ற்,ன்) ஆகியவை இன எழுத்துக்கள்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் வரும். (அ,ஆ) (இ,ஈ) (உ,ஊ) (எ,ஏ) (ஐ,இ) (ஒ,ஓ) (ஔ,உ )

இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

எந்த எழுத்து, எந்த எழுத்துக்கு இனமாக வரும்? 

உயிரெழுத்துகள் - உயிர் இன எழுத்துகள்

உயிரெழுத்துகள் பன்னிரண்டு அல்லவா! 

அவற்றை உயிர்க்குறில், உயிர்நெடில் எனப் பிரித்துப் படித்திருப்பீர்கள். ஆகையால், உயிர்க்குறில் எழுத்துகளுக்கு உயிர்நெடில் எழுத்துகள் இனமாக வரும். 

  • உயிர் எழுத்துகளில் (அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ) குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் வரும். (அ,ஆ) (இ,ஈ) (உ,ஊ) (எ,ஏ) (ஐ,இ) (ஒ,ஓ) (ஔ,உ )
உயிரெழுத்துக்கள் அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ 12 எழுத்துக்கள்
குறில்(உயிரெழுத்து)
அ, இ, உ, எ, ஒ 5 எழுத்துக்கள்
நெடில்(உயிரெழுத்து) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ 7 எழுத்துக்கள்


உயிர் இன எழுத்துகள் எடுத்துக்காட்டு

உயிர் எழுத்து உயிர் இன எழுத்துகள் இன எழுத்து எடுத்துக்காட்டு

தழீஇ (அளபெடையில் மட்டும்)
தூஉம் (அளபெடையில் மட்டும்)

?
ஓஒதல் (அளபெடையில் மட்டும்)
?

ஐ என்ற எழுத்துக்கும் ஒள என்ற எழுத்துக்கும் இன எழுத்து எங்கே!

ஐ - இந்த எழுத்தை நன்றாக ஒலித்துப் பாருங்கள். இறுதியில் என்ன ஓசையில் முடிகிறது? இ தானே. 

அதுபோல, ஒள என்னும் எழுத்தையும் ஒலித்து பாருங்கள். எந்த எழுத்தின் ஓசையில் முடிகிறது? உ என்னும் எழுத்தின் ஓசையல்லவா. 

குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு  என்பது இன எழுத்தாகும்.

ஒள என்னும் எழுத்துக்கு  என்பது இன எழுத்தாகும்.

இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

உயிர் எழுத்து உயிர் இன எழுத்துகள்
ஒள 
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் இன எழுத்துகள்

மெய்யெழுத்து

மெய்யெழுத்துகளை நாம் ஏற்கெனவே பெயரிட்டு அழைத்தோமே நினைவிருக்கிறதா? என்ன அது? வல்லினம், மெல்லினம், இடையினம். 

  • வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள்தாம் இனமாக வரும். 
மெய்யெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் 18 எழுத்துக்கள்
வல்லினம்
க், ச், ட், த், ப், ற் 6 எழுத்துக்கள்
மெல்லினம் ங், ஞ், ண், ந், ம், ன் 6 எழுத்துக்கள்
இடையினம் ய், ர், ல், வ், ழ், ள் 6 எழுத்துக்கள்

வல்லினம் 

ஆறு வல்லின மெய் (க், ச், ட், த், ப், ற்) எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் (ங, ஞ, ண, ந, ம, ன) இன எழுத்துகள் ஆகும்.

மெல்லினம்

சொற்களில் மெல்லின மெய் எழுத்தை (ங், ஞ், ண், ந், ம், ன்) அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து (க, ச, ட, த, ப, ற) வரும்.

  • திங்கள், 
  •  மஞ்சள், 
  • ண்டபம், 
  • ந்தனம், 
  • ம்பு
  • தென்றல்
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் இன எழுத்துகள்

இடையினம்

இடையின எழுத்துக்கள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும். 

  • இவற்றிற்கு இன எழுத்துகள் இல்லை. 
  • ஓர் எழுத்திற்கு அருகில் அதே எழுத்து வந்தாலும் அவை இன எழுத்துகள் அல்ல. (பக்கம், அச்சம்...)
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் இன எழுத்துகள்

மெய்யெழுத்து - இன எழுத்துகள் சான்று

(ங்,க்) (ஞ்,ச்) (ட்,ண்) (த்,ந்) (ம்,ப்) (ற்,ன்) ஆகியவை இன எழுத்துக்கள்.

இன எழுத்து சொற்கள் 20

  1. திங்கள், 
  2. சிங்கம்,
  3. ங்கு,
  4. ஞ்சள், 
  5. இஞ்சி,
  6. பஞ்சு,
  7. ஞ்சம்
  8. ண்டபம், 
  9. பண்டம்,
  10. ந்தனம், 
  11. ந்தல், 
  12. ந்து, 
  13. பொந்து, 
  14. சந்து
  15.  அம்பு
  16. ம்பி, 
  17. தும்பி
  18. தென்றல்
  19. ல்வி,
  20. செல்வம்

இன எழுத்துகள் 30

இன எழுத்துகள் (எகா.)
(ங்,க்) திங்கள், சிங்கம், சங்கு
(ஞ்,ச்) ஞ்சள், பஞ்சு, ஞ்சம், இஞ்சி
(ட்,ண்) ண்டபம், நண்டு, சுண்டல், பண்டம், வண்டு
(த்,ந்) ந்தனம், பந்தல், பந்து, பொந்து, சந்து
(ம்,ப்) ம்பு,ம்பி, தும்பி, பம்பரம்
(ற்,ன்) தென்றல், நன்றி, கன்று
ய், ர், ல், வ், ழ், ள் ல்வி,செல்வம்,பெரியவர்,
அ,ஆ

இ,ஈ
தழீஇ (அளபெடையில் மட்டும்)
உ,ஊ
தூஉம் (அளபெடையில் மட்டும்)
எ,ஏ

ஐ,இ

ஒ,ஓ
ஓஒதல் (அளபெடையில் மட்டும்)
ஔ,உ


நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டிப் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - இன எழுத்துகள் மதிப்பீடு

இப்பாடலில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.

தங்கப் பாப்பா வந்தாளே!

சிங்கப் பொம்மை தந்தாளே!

பஞ்சு போன்ற கையாலே!

பண்டம் கொண்டு வந்தாளே!

பந்தல் முன்பு நின்றாளே!.

கம்பம் சுற்றி வந்தாளே!

தென்றல் காற்றும் வந்ததே!

தெவிட்டா இன்பம் தந்ததே! 

இன எழுத்துகள்

தங்கம், சிங்கம், பஞ்சு,பந்தல், கம்பம், தென்றல், இன்பம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

அ) மஞ்சள் 

ஆ) வந்தான்

இ) கண்ணில்

ஈ) தம்பி

தவறான சொல்லை வட்டமிடுக.

அ) கண்டான்

ஆ) வென்ரான்

இ) நண்டு

ஈ) வண்டு

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

தெண்றல்- தென்றல்

கன்டம்- கண்டம் 

நண்றி - நன்றி

மன்டபம்- மண்டபம்

குறுவினா

இன எழுத்துகள் என்றால் என்ன?

சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

கீழுள்ள தொடர்களில் இடம்பெற்றுள்ள நட்பெழுத்துச் சொற்களை வட்டமிடுக

அ. கியூரி அம்மையாரின் குடும்பம் வறுமையுடன் இருந்தது. 

குடும்பம்

ஆ. கியூரி அம்மையார் தம் அறிவியல் கண்டுபிடிப்பை உலகுக்குக் கொடையாக வழங்கினார்.

வழங்கினார்

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

1. இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து எது?

ஆய்த எழுத்து

தொடர்புடையவை

இன எழுத்துக்கள்

இன எழுத்துக்கள் ஆறாம் வகுப்பு

இன எழுத்துகள் என்றால் என்ன

இன எழுத்துகள்

இன எழுத்துகள் ஆறாம் வகுப்பு வினா விடை

இன எழுத்துகள் மூன்றாம் வகுப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad