தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப்பாக்கள் தமிழில் நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவுக்கென்றே சிறப்பாக உரிய சீரும், தளையும், ஓசையும் உள்ளன. அவற்றைக் கொண்டே பாக்கள் அடையாளம் காணப்பெறுகின்றன. ஒவ்வொரு பாவிற்கும் தனித்தனியே வகையும் இனமும் உள்ளன.
வஞ்சிப்பா பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளைப் நினைவுகூர்க.
யாப்பிலக்கணம்
எழுத்துகள் அசை சீர் தளை அடி தொடை
வஞ்சிப்பா என்றால் என்ன?
சீர்தோறுந் துள்ளாது தூங்கி வரும் ஓசை. அதாவது தாழ்ந்தே வருவது.- தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.
வஞ்சிப்பா பொது இலக்கணம்
- வஞ்சிப்பாவிற்கு உரிய சிறப்புச் சீர், கனிச்சீராகும். கனிச்சீர் நான்காகும் அவை: தேமாங்கனி, புளிமாஙகனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்பன. இவற்றோடு நிரையசையை ஈற்றிலே கொண்ட நாலசைச் சீர்களும் வரப்பெறும்.
- ஒன்றிய வஞ்சித் தளை, ஒன்றா வஞ்சித்தளை என்பன வஞ்சிப்பாவிற்குரிய தளைகளாகும். கனிச்சீர்களின் முன் நிரையில் தொடங்கும் சீர் வருதல் ஒன்றிய வஞ்சித் தளையாகும். நேரசை வரின் ஒன்றா வஞ்சித தளையாகும்.
- வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை எனப்படும்.
- வஞ்சிப்பாவில் ஓர் அடியில் இரண்டு அல்லது மூன்று சீர்களே இடம் பெறும். வஞ்சிப்பாவில் நான்கு சீர்கள் இடம் பெறுவது இல்லை என்பதை அறிக.
-
அடிவரையறையில் வஞ்சிப்பா மூன்றடிகளைச் சிற்றெல்லையாக உடையது. இரண்டிகளாலும்
வரலாம் எனக் கூறப்படுகிறது. பேரல்லைக்கு வரையறை இல்லை. பாடுவோர் கருத்திற்கு
ஏற்பப், பல அடிகளைக் கொண்டு முடியும்.
வஞ்சிப்பா எடுத்துக்காட்டு
வளையாடு மலர்ச்சுனை நீரினிடை
வளையாடுகை மங்கைய ரன்னமென
விளையாடுவ ரோடுவர் கூடுவர்பின்
விளையாடுவர் பைங்கிளி மேவுறவே!
தூங்கலோசை
சீர்தோறுந் துள்ளாது தூங்கி வரும் ஓசை. அதாவது தாழ்ந்தே வருவது. ஓர் அடியில் இடம் பெறும் சீர்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது. குறிப்பாக வஞ்சிப்பாவில் இது சிறப்பிடம் பெறுகிறது.
தூங்கலோசை வகைகள்
இவ்வாறு தூங்கலோசை மூன்று வகைப்படும்.
- ஏந்திசைத் தூங்கலோசை - ஒன்றிய வஞ்சித் தளையால் அமைந்த வஞ்சிப்பாவில் ஏந்திசைத் தூங்கலோசை அமைந்திருக்கும்.
- அகவல் தூங்கலோசை - ஒன்றாத வஞ்சித்தளைவரின் அகவல் தூங்கலோசை அமைந்திருக்கும்.
-
பிரிந்திசைத் தூங்கலோசை - இவ்விருவகை வஞ்சித் தளைகளோடு பிற தளைகளும்
கலந்து வரும். வஞ்சிப்பாவில் பிரிந்திசைத் தூங்கலோசை அமைந்திருக்கும்.
வஞ்சிப்பாவின் வகைகள் எத்தனை
ஓர் அடியில் இடம் பெறும் சீர்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்த வஞ்சிப்பா பெயா் பெறும்.
வஞ்சிப்பா இருவகைப்படும்.
- குறளடி வஞ்சிப்பா
- சிந்தடி வஞ்சிப்பா
குறளடி வஞ்சிப்பா
ஒரு வஞ்சிப்பாவின் ஓர் அடியில் இரண்டு சீர்கள் இருக்குமானால் அது குறளடி வஞ்சிப்பா என அழைக்கப்படும்.
வினைத்திண்பகை
விழச்செற்றவன்
வனப்பங்கய
மலாத்தாளிணை
நினைத்தன்பொடு தொழுதேத்தினர்
நாளும்
மயலார்
நாற்கதி
மருவார்
பயரா மேற்கதி
பெறுகுவர்
விரைந்தே
சிந்தடி வஞ்சிப்பா
மூன்று சீர்கள் இருக்குமானால் அது சிந்தடி வஞ்சிப்பா எனப்படும்.
பொன்பூக்குந் தாமரையின்
பூநிழலில்
இன்பூக்கும் இனச்சுரும்பர்
இசைபாட
அச்சுரும்பர் இன்னிசைகேட்(டு)
ஆங்கொருசார்
கச்சணிமார்
அயர்வின்றிக்
களைகளையும்
வளமார்
பழனம் கதிரப்
படிநெல்
கழனி விளையும் காவிரி நாடே
ஆசிரியச் சுரிதகம்
வஞ்சிப்பாவின் இறுதியில் 'தனிச்சொல்', 'சுரிதகம்' என்னும் உறுப்புகள் இடம் பெறும். வஞ்சிப்பா முடியும் பொழுது ஓர் அடியில் ஒரு தனிச்சொல் மட்டும் பெற்று, அதற்கு அடுத்த அடிகள் ஆசிரியப்பா போல், அதற்குரிய இலக்கணம் பெற்று முடியும். ஆசிரியப்பா இலக்கணம் பெற்று வரும் இறுதி அடிகளுக்கு ஆசிரியச் சுரிதகம் என்று பெயர். வஞ்சிப்பா வெண்பாச் சுரிதகத்தால் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வஞ்சிப்பாவின் இனம்
வஞ்சிப்பாவின் இனம் மூன்று வகைப்படும்.
அவை:
1. வஞ்சித் தாழிசை
2. வஞ்சித்துறை
3. வஞ்சி விருத்தம்
என்பனவாகும்.
"குறளடி நான்கின் மூன்றொரு தாழிசை கோதில் வஞ்சித்
துறையொரு வாது தனிவரு
மாய்விடின் சிந்தடிநான்
கறைதரு காலை யமுகத விருத்தம் தனிச்சொல் வந்து
மறைதலில் வாரத்தி னாலினும் வஞ்சிவஞ் சிக்கொடியே” - (யாப்ப. நூ. 46)
வஞ்சித் தாழிசை
குறளடி என்னும் இருசீரடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் அடுக்கி வருவன வஞ்சித் தாழிசை எனப்படும்.
1. மடப்பிடியை மதவேழம்
தடக்கையான் வெயின்மறைக்கும்
இடைச்சுரம் இறந்தார்க்கே
நடக்குமென் மனனேகாண்
2. பேடையை
இரும்போத்துத்
தோகையான் வெயின்மறைக்கும்
காடகம் இறந்தார்க்கே
ஓடுமென்
மனனேகாண்
3. இரும்பிடியை இகல்வேழம்
பெருங்கையான்
வெயின்மறைக்கும்
அருஞ்சுரம்
இறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்
வஞ்சித் துறை
குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருதல் வஞ்சித் துறை ஆகும்.
மை சிறந்தன மணிவரை
கை சிறந்தன காந்தளும்
பொய் சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளாங்கிழாய்
வஞ்சி விருத்தம்
சிந்தடி என்னும் முச்சீரடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது வஞ்சி விருத்தம் எனப்படும்.
சோலை ஆர்த்த சுரத்திடைக்
காலை ஆர்கழல்
ஆர்ப்பவும்
மாலை மார்பன்
வருமாயின்
நீல உண்கண்
இவள்வாழுமே
TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்
- வஞ்சிப்பாவின் ஓசை எது?
Please share your valuable comments