பொருளிலக்கணம்

மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவும் துணைசெய்வது இலக்கணம் ஆகும்.இதனை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளே நன்குணர்த்தும்.

நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே!

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பொருள் இலக்கணம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

பொருள் இலக்கணம்

மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் வகுத்துக்காட்டி விளக்குவது பொருள் இலக்கணம். அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர்.

  • பொருள் என்பது ஒழுக்கமுறை.

பொருள் இலக்கணம் பற்றி கூறும் தமிழ் நூல்கள்

பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களுள் அகத்திணையியல் சார்ந்து இறையனாரகப்பொருள், நம்பியகப்பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் தோன்றின.

தொல்காப்பியப் புறத்திணையியல் சார்ந்து, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு படலம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.

பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்

  1. அகப்பொருள்
  2. புறப்பொருள்
பொருளிலக்கணம்

அகப்பொருளிலக்கணம்

அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும்.

அகப்பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்

  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை
  6. கைக்கிளை
  7. பெருந்திணை

என அகத்திணைகள் எழுவகைப்படும்.

அவற்றுள் முதலைந்தும் அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும்.

புறப்பொருளிலக்கணம்

புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது.

  • புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை.

புறப்பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்

புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.

  1. வெட்சித் திணை
  2. கரந்தைத் திணை
  3. வஞ்சித் திணை 
  4. காஞ்சித் திணை 
  5. நொச்சித் திணை 
  6. உழிஞைத் திணை 
  7. தும்பைத் திணை
  8. வாகைத் திணை
  9. பாடாண் திணை 
  10. பொதுவியல்
  11. கைக்கிளை  
  12. பெருந்திணை

நினைவுகூர்க

நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே!

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad