வெண்பா

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும். ஓசை நயத்தை வேறுபடுத்தி அறிவதற்காக வெண்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா,கலிப்பா என நால்வகைப் பாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. வெண்பா,வெண்பாவின் வகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

வெண்பா பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளைப் நினைவுகூர்க.

யாப்பிலக்கணம் எழுத்துகள் அசை சீர் தளை அடி தொடை

பாடத்தலைப்புகள்(toc)

வெண்பா என்றால் என்ன?

  • செப்பலோசை வெண்பாவிற்குரியது ஓசை.
  • இருவர் உரையாடுவது போன்ற ஓசை. 

வெண்பாக்களால் அமைந்த நூல்கள் பெயர்

அறம் கூறும் குறளும், நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.

வெண்பாவின் பொது இலக்கணம்

  • ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்.
  • வெண்பாவின் சீர்கள்: இயற்சீர், (மாச்சீர், விளச்சீர்) வெண்சீர், (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா.
  • வெண்பாவின்  தளைகள்: இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும், பிறதளைகள் வாரா.
  • ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்றுகொண்டு முடியும்.
  • செப்பலோசை பெற்று வரும்.
  • அடி - இரண்டடி முதல், பன்னிரண்டு அடிவரை வரும்.

வெண்பா எடுத்துக்காட்டு

ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளும் வெண்பாதான். ஆனால், இரண்டடிகள் மட்டும் வருவதனால், குறள் வெண்பா என அழைப்பர். 

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

இது குறள் வெண்பா. 

கண்இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு. 

இது நேரிசை வெண்பா. 


TNPSC - General tamil


வெண்பாவின் வகைகள் எத்தனை?

வெண்பா வகைகள் ஆறு.

அவை

  1. குறள் வெண்பா,
  2. நேரிசை வெண்பா,
  3. இன்னிசை வெண்பா,;
  4. பஃறொடை வெண்பா,
  5. நேரிசைச் சிந்தியல் வெண்பா,
  6. இன்னிசைச் சிந்தியல் வெண்பா

என்பன.

1. குறள் வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளைக் கொண்டதாய், ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவது குறள்வெண்பா (குறள் - இரண்டடி).

குறள் வெண்பா வகைகள்

ஒரு விகற்பத்தான் வந்த குறள் வெண்பா

ர முதல எழுத்தெல்லாம் ஆதி
வன் முதற்றே உலகு.

இக்குறட்பா ஒரு விகற்பத்தான் வந்த குறள் வெண்பா. க என்னும் எழுத்து எதுகையாக இரண்டு அடிகளில் ஒன்றி வந்துள்ளது .

இரு விகற்பத்தான் வந்த குறள் வெண்பா

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
ண்ணிய தேயத்துச் சென்று.

இக்குறட்பா இரு விகற்பத்தான் வந்த குறள் வெண்பா.

2. நேரிசை வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, நான்கு அடிகளைக் கொண்டதாயும், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றும், முதல் இரண்டடி ஒரு விகற்பமாயும், கடைசி இரண்டடி ஒரு விகற்பமாயும், நான்கடிகளும் ஒரு விகற்பமாயும் வருவது நேரிசை வெண்பா எனப்படும்.

நேரிசை வெண்பா வகைகள்

ஒரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
ல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
ல்லார்க்கும் பெய்யும் மழை.

இப்பாடலின் நான்கடியிலும், இரண்டாமடியின் இறுதிச் சீரிலும் ஒரே எதுகை பெற்று ஒரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா. ல் என்னும் எழுத்து எதுகையாக நான்கடிகளும் ஒன்றி வந்துள்ளது.

இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா

ன்னுள் கலைவைத்தாய் ஊக்க மலைவைத்தாய்
ன்னல் மொழியுன்னுள் கள்வைத்தாய் - மின்வைத்தாய்
ண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
ண்ணீர்த் தமிழேநீ தாய்.

இஃது, இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா.

3. இன்னிசை வெண்பா :

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வரும்.

இன்னிசை வெண்பா வகைகள்

ஒரு விகற்பத்தான் இன்னிசை வெண்பா

தாய்தமக்கே ஒப்பில்லை தாரணியில் எப்பொருளும்
சேய்நம்மைச் சீராட்டி செந்நீரைப் பாலாக்கி
வாய்வழியாய்த் தாமூட்டி வாழ்விக்குந் தெய்வமொன்று
தாய்போலும் உண்டாமோ தான்.

இப்பாடலில் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் இல்லை. நான்கடிகளும் ஒரு விகற்பத்தான் வந்துள்ளன. இரண்டாம் எழுத்து ய் எதுகையாகி ஒன்றி வந்துள்ளது.

இரண்டு விகற்பத்தான் இன்னிசை வெண்பா

மூன்றாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, இரண்டு விகற்பத்தானும் வருவதும் இன்னிசை வெண்பா எனப்படும்.

மூன்று விகற்பத்தான் இன்னிசை வெண்பா

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, மூன்று விகற்பத்தான் வரும்.

தானங் கொடுக்குந் தகைமையும் மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமும் - தெற்றெனப்
ல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
ல்வினை யார்க்குங் கயிறு.

இப்பாடலில் இரண்டாம் அடியில் தனிச்சொல் வந்துள்ளது. ஆனால், நான்கடியிலும் மூன்று விகற்பங்கள் வந்துள்ளதால், இஃது இன்னிசை வெண்பாவாயிற்று.

4. பஃறொடை வெண்பா :

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை பெற்று வருவது பஃறொடை வெண்பா.

முக்கனியே! முப்பாலே! மூவாத முத்தமிழே!
சொக்கனது மாநகரைச் சூழ்ந்த பெரும்பேறே!
இத்தரைச் சூரியனே! எங்கள் உயிரமுதே!
சித்திரைத் தண்ணிலவே! தேயா மொழிவெற்பே!
செம்மொழி மாக்குடும்பம் சீராட்டும் செம்மொழியே!
எம்மொழிக்கும் மூத்தவளே! என்றும் இருப்பவளே!
பண்புணர்த்தும் ஆசானே! பார்போற்றும் தேனூற்றே!
கண்ணே !நீ ஞாலக் கனி!

இப்பாடல் ஈற்றடி மூன்று சீராயும், ஏனைய அடிகள் நான்கு சீராயும் வந்த பஃறொடைவெண்பா.

5.நேரிசைச் சிந்தியல் வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று நேரிசை வெண்பாவைப் போல இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, ஒரு விகற்பத்தானும் இருவிகற்பத்தானும் மூன்றடிகளாய் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா.

றிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
சிந்தார்க்குச் செவ்வ னுரைப்ப - சிந்தார்
சிந்தமை ஆராய்ந்து கொண்டு.

மூன்றடிகள் உடையதாய் ஒரு விகற்பமாய் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

6. இன்னிசைச் சிந்தியல் வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று மூன்றடி கொண்டதாய்த் தனிச்சொல்லின்றி ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.

பார்மொழிகள் அத்தனைக்கும் பாங்கான நற்றாயாம்
சீர்கொண்ட செந்தமிழே சிந்தனையில் ஏற்றிடுவாய்
பார்முழுதுஞ் சாற்றிடுவாய் பாய்ந்து

இஃது, இரண்டாம் அடியில் தனிச்சொல் இன்றி, ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

நினைவுகூர்க

பொது இலக்கணம் வெண்பா ஆசிரியப்பா (அகவற்பா)
ஓசை
செப்பல் ஓசை பெற்று வரும் அகவல் ஓசை பெற்று வரும்.
சீர் ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும். ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
தளை
இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும். ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
அடி இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.) மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
முடிப்பு ஈற்றுச் சீர் நாள்,மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும். ஏகாரத்தில் முடியும்.


TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

  1. வெண்பாவின் ஓசை என்ன?

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad