தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான உருவம் பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். மொழியை
நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான். எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு
மொழி வேறுபடுகின்றன. அவை ஒரே மொழியிலும்கூட, காலந்தோறும் மாறி வருகின்றன.
அவ்வகையில் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிவோம்.
உருவம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்பாடத்தலைப்புகள்(toc)
உருவம் அல்லது வரி வடிவம்
எழுத்து என்றால் என்ன ?
ஒலி வேறுபாடுகளே வெவ்வேறு எழுத்துகள் தோன்றக் காரணம். மொழிக்கு ஒலி, வரி ஆகிய இரு வடிவங்கள் உள்ளன.
- ஒலி வடிவம் என்பது பேச்சு மொழியாகும்.
- வரி வடிவம் அல்லது உருவம் என்பது எழுத்து மொழியாகும்.
உருவம் என்றால் என்ன?
- உருவம் என்பது வரிவடிவம் ஆகும்.
உருவம் தமிழ் எழுத்துக்களின் வரி வடிவம் பற்றிய இலக்கணம் "உருவம்" எனப்படுகிறது. எல்லா எழுத்துக்களும் தொன்று தொட்டு வழங்கப்படும் பல்வேறு வடிவங்களை உடையன.
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான். அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். அச்சொற்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டன. காலப்போக்கில் அவை பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.
எழுத்துகளின் தோற்றம் - Tamil Language Letters history
தொடக்க நிலை
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
- குறியீடு - இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
ஓவிய எழுத்து
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
எழுத்து நிலை
அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு
- ஸ எனும் வட எழுத்து காணப்படுகிறது.
- மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
- எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
தமிழ் எழுத்துகள் சீரமைப்பு
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன.
- அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
- தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
கல்வெட்டுகள் கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. (பொ.ஆ.பி.) ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை,
- வட்டெழுத்து,
- தமிழெழுத்து
என இருவகையாகப் பிரித்தலம்.
வட்டெழுத்து
வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும்.
- சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன.
தமிழெழுத்து
தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும்
தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.
முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.
கண்ணெழுத்துகள்
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும்,
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி (சிலம்பு 5 : 12)
என்னும் தொடரால் அறியலாம்.;
வரிவடிவ வளர்ச்சி
பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது
போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை. அவை காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப்
பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன.இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள்
ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக
அமைகின்றன.
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிகிறோம். அரச்சலூர் கல்வெட்டே இதற்குச் சான்றாகும். இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, இலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன.
- பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன.
- ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்.
- சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.
புள்ளிகளும் எழுத்துகளும்
எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
உருவ மாற்றம்
- எ்து என எழுதப்பட்டால் எது என்றும்,
- எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.
உயிர்மெய்க் குறில்
அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன. நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (ா) பயன்படுகின்றது.
- க.=கா
- த.=தா
ஐகாரம்
ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின்முன் இரட்டைப் புள்ளி இட்டனர்.ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுகின்றது.
- ..க = கை
ஒளகாரம்
எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன.ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
- கெ.. = கௌ
- தெ..= தௌ
மகரம்
மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப்) இட்டனர்.
குற்றியலுகரம், குற்றியலிகரம்
குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர். குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.
தொல்காப்பியர் காலம் | சீர்திருத்தம் |
---|---|
க. | கா |
..க |
கை |
எ்து | எது |
கெ.. | கௌ |
ப் | ம |
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை
- ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
- ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
எழுத்துச் சீர்திருத்தம்
- தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார்.
- எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும்,
- ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
- அதேபோல ஏகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு( ே),
- ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து (ாே) புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்
தொல்காப்பியர் காலம் | வீரமாமுனிவரின் சீர்திருத்தம் |
---|---|
எ |
எ |
எ |
ஏ |
ஒ |
ஒ |
ஒ |
ஓ |
கெ |
கெ |
கெ |
கே |
கொ |
கொ |
கொ |
கோ |
பெரியார் எழுத்துகள்
பெரியார் பற்றி அறிய(link)
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்
இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா - என எழுதினர். அதேபோல ணை, லை, ளை, னை -என எழுதினர். இவற்றை அச்சுக் கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டுத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நினைவுகூர்க
காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ் மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது; தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது என்பதை நினைவுகூர்க.
தொடர்புடையவை - எழுத்திலக்கணம்
-
எண்
- பெயர்
- முறை
-
பிறப்பு
-
உருவம் அல்லது வரி வடிவம்
- மாத்திரை
- முதல்
- ஈறு அல்லது இறுதி
- இடைநிலை
- போலி
- பதம்
- புணர்ப்பு அல்லது புணர்ச்சி
Please share your valuable comments