அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்தமிழ் எண்கள் ஒன்று முதல் பத்து வரை
தமிழ் எண்கள் ஒன்று முதல் பத்து வரை - Tamil Numbers
எண் குறிகள் | எண்கள் | ஒலிப்புச்சொற்கள் |
---|---|---|
௦ | 0 | சுழியம் |
௧ | 1 | ஒன்று |
௨ | 2 | இரண்டு |
௩ | 3 | மூன்று |
௪ | 4 | நான்கு |
௫ | 5 | ஐந்து |
௬ | 6 | ஆறு |
௭ | 7 | ஏழு |
௮ | 8 | எட்டு |
௯ | 9 | ஒன்பது |
௰ | 10 | பத்து |
தமிழ் எண் எழுத்துக்கள் - ஒன்று முதல் பத்து வரை |
ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும்
எண் | அளவு | ஒலிப்புச்சொற்கள் |
---|---|---|
1/320 | 320 இல் ஒரு பங்கு | முந்திரி |
1/160 | 160 இல் ஒரு பங்கு | அரைக்காணி |
3/320 | 320 இல் மூன்று பங்கு | அரைக்காணி முந்திரி |
1/80 | 80 இல் ஒரு பங்கு | காணி |
1/64 | 64 இல் ஒரு பங்கு | கால் வீசம் |
1/40 | 40 இல் ஒரு பங்கு | அரைமா |
1/32 | 32 இல் ஒரு பங்கு | அரை வீசம் |
3/80 | 80 இல் மூன்று பங்கு | முக்காணி |
3/64 | 64 இல் மூன்று பங்கு | முக்கால் வீசம் |
1/20 | 20 ஒரு பங்கு | ஒருமா |
1/16 | 16 இல் ஒரு பங்கு | மாகாணி (வீசம்) |
1/10 | 10 இல் ஒரு பங்கு | இருமா |
1/8 | 8 இல் ஒரு பங்கு | அரைக்கால் |
3/20 | 20 இல் மூன்று பங்கு | மூன்றுமா |
3/16 | 16 இல் மூன்று பங்கு | மூன்று வீசம் |
1/5 | ஐந்தில் ஒரு பங்கு | நாலுமா |
1/4 | நான்கில் ஒரு பங்கு | கால் |
1/2 | இரண்டில் ஒரு பங்கு | அரை |
3/4 | நான்கில் மூன்று பங்கு | முக்கால் |
1 | ஒன்று | ஒன்று |
ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை
எண் | எண் |
---|---|
1 | ஒன்று (ஏகம்) |
10 | பத்து |
100 | நூறு |
1000 | ஆயிரம் |
10,000 | பத்தாயிரம் |
1,00,000 | நூறாயிரம்(இலட்சம்) |
10,00,000 | பத்து நூறாயிரம் |
1,00,00,000 | கோடி |
10,00,00,000 | அற்புதம் |
1,00,00,00,000 | நிகற்புதம் |
10,00,00,00,000 | கும்பம் |
1,00,00,00,00,000 | கணம் |
10,00,00,00,00,000 | கற்பம் |
1,00,00,00,00,00,000 | நிகற்பம் |
10,00,00,00,00,00,000 | பதுமம் |
1,00,00,00,00,00,00,000 | சங்கம் |
10,00,00,00,00,00,00,000 | வெள்ளம் |
1,00,00,00,00,00,00,00,000 | அந்நியம் |
10,00,00,00,00,00,00,00,000 | (அர்த்தம்) |
1,00,00,00,00,00,00,00,00,000 | பரார்த்தம் |
10,00,00,00,00,00,00,00,00,000 | பூரியம் |
1,00,00,00,00,00,00,00,00,00,000 | பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி) |
எண்களை எழுத்தால் எழுதிப் பழகுக.
17 - பதினேழு
20 - இருபது
32 - முப்பத்திரண்டு
48 - நாற்பத்தெட்டு
51 - ஐம்பத்தொன்று
எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள்
எண்ணுப் பெயர் |
எண்ணடைகள் |
எ.கா |
---|---|---|
ஒன்று | ஒரு, ஓர் | ஒருவர், ஒரு மரம், ஒர் உயிர் |
இரண்டு | இரு,ஈர் | இருவர், இருவகை, ஈரெழுத்து |
மூன்று | மூ, மு | மூவர், முத்தமிழ் |
நான்கு | நால், நாலு | நால்வர், நாலுநாள் |
ஐந்து | ஐ | ஐவர், ஐம்பெருங்காப்பியம் |
ஆறு | அறு | அறுவர், அறுபடை |
ஏழு | எழு,ஏழ் | எழுவர், ஏழிசை |
எட்டு | எண் | எண்மர், எண்டிசை |
பத்து | பதின், பன் | பதின்மர், பன்னிருவர் |
நினைவுகூர்க: பத்து என்பதன் எழுத்து என்ன?
தொடர்புடையவை
- தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை எத்தனை?
- தமிழ் எழுத்துகளின் பிறப்பு, உச்சரிப்பு பற்றி எழுதுக?
- முதலெழுத்து யாவை?
- சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
- இன எழுத்துகள் இல்லாத தமிழ் எழுத்துக்கள் எவை?
-
சுட்டெழுத்து எடுத்துக்காட்டு?
- அகவினா, புறவினா வேறுபாடு எழுதுக?
- மொழி முதல், இறுதி, இடை எழுத்துகள் குறித்து எழுதுக?
- மயங்கொலி எழுத்துகள் எத்தனை?
- மாத்திரை என்றால் என்ன?
Please share your valuable comments