தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணத்தின் கூறுகளாக நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எண் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரித்து முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டு வகைப்படும்.
முதலெழுத்துக்கள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
முதலெழுத்துக்கள் என்றால் என்ன?
ஒரு மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் எழுத்துக்கள் முதலெழுத்து (30 எழுத்துக்கள்) எனப்படும்.
- அ முதல் ஔ வரை உள்ள உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்,
- க் முதல் ன் வரை உள்ள மெய்யெழுத்துகள் பதினெட்டும்
ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகளாகும். இவை சார்பெழுத்துகள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பதனால் முதலெழுத்துகள் எனப்பட்டன.
- உயிர் - உயிர் போன்ற உயிரைச் சார்ந்து இயங்கவல்லது
- மெய் - மெய் (உடம்பு) போன்று உயிரைச் சார்ந்து இயங்கவல்லது.
முதலெழுத்துக்கள் பற்றிய நூற்பா
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" (நூற்பா59) (code-box)
உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு என முப்பதும் முதல் எழுத்துகளாகும்.
முதலெழுத்து வகைகள் எத்தனை?
ஒரு மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் முதலெழுத்து,
என இரண்டு வகைப்படும்.
உயிரெழுத்து | 12 எழுத்துக்கள் |
மெய்யெழுத்து | 18 எழுத்துக்கள் |
மொத்தம் முதலெழுத்துக்கள் எண்ணிக்கை | 30 எழுத்துக்கள் |
உயிரும் - மெய்யும்
முதலெழுத்துக்களான உயிரும் மெய்யும் சேர்ந்து பிற எழுத்துக்கள் பிறக்கக் காரணமாவதால் அவை முதலெழுத்துக்கள் ஆகும்.
தமிழ் உயிர் எழுத்துகள் எத்தனை? - Tamil Vowels
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன
- வாயைத் திறத்தல், உதடுகளை விரிக்க, உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னுரண்டு உயிர் எழுத்துக்களும் பிறக்கின்றன.
- பிற ஒலிகளின் துணை இல்லாமல் தானே இயங்கவல்லது; மற்ற மெய்யொலிகளுடன் சேர்ந்து இயக்கவல்லது.
- நம்முடைய உயிரைப் போன்று தானே இயங்கவும், இயக்கவும் செய்யும் காரணத்தினால் இதற்கு உயிரெழுத்து என்று பெயர்.
உயிரெழுத்து வகைகள்
உயிரெழுத்துக்களை,
- குற்றெழுத்துக்கள்,
- நெட்டெழுத்துக்கள்
ஆகும்.
குற்றெழுத்துக்கள்
- குற்றெழுத்துக்கள் (5) - அ, இ, உ,எ,ஒ (ஒரு மாத்திரை அளவு ஒலிப்பன)
அ, இ, உ, எ, ஒ க்குறில் ஐந்தே (நன்னூல் :64) (code-box)
நெட்டெழுத்துக்கள்
நெட்டெழுத்துக்கள் (7) - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள (இரு மாத்திரை அளவு ஒலிப்பன)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில் (நன்னூல் : 65) (code-box)
என்னும் நன்னூல் நூற்பாக்கள் வாயிலாக நன்னூலார் குறில் நெடில் பற்றி
விவரிக்கின்றார்.
உயிரெழுத்துக்கள் | அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ | 12 எழுத்துக்கள் |
குறில்(உயிரெழுத்து) |
அ, இ, உ, எ, ஒ | 5 எழுத்துக்கள் |
நெடில்(உயிரெழுத்து) | ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ | 7 எழுத்துக்கள் |
- குறில் எழுத்துகளைக் குறிக்க 'கரம்' (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
- நெடில் எழுத்துக்களைக் குறிக்க 'கான்' (எ.கா.) ஐகான், ஔகான்
- குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க 'காரம்' (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம்
ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
குறில், நெடில்
குறில் எழுத்துகள்- அ, இ, உ, எ, ஒ, - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.
நெடில் எழுத்துகள் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழும் நீண்டு ஒலிக்கின்றன.
குறில் நெடில் பிழைகள்
அ. சாப்படு தாயார்
சாப்பாடு தாயார்
இ பள்ளிக்குடம் அருகில் உள்ளது.
பள்ளிக்ககூடம் அருகில் உள்ளது.
ஆ. ஒன்று வங்கினால் ஒன்று இலவாசம்.
ஒன்று வங்கினால் ஒன்று இலவசம்.
தமிழ் மெய்யெழுத்து எத்தனை? - Tamil Consonant
தன்னால் இயங்க முடியாதது, பிற உயிர் ஒலிகளின் துணை கொண்டே இயங்க வல்லது. மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும்.
- மெய் எழுத்துக்களை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது.
-
நம்முடைய உடம்பினைப் போன்றே தானே இயங்கவும், இயக்கவும் இயலாத காரணத்தினால்
இதற்கு மெய்யெழுத்து என்று கூறுவர்.
- உயிர், உடம்பினைச் செயல்படுத்துவது போன்று, உயிர் எழுத்துக்களே இவ்வெழுத்துக்களுடன் சேர்ந்து செயல்புரிய வேண்டும்.
மெய்யெழுத்துக்கள் வகைகள்
- மெய்யெழுத்துக்களில் வல்லொலியாக ஒலிப்பவை வல்லினம் ஆகும்.
- மெல்லொலியாக ஒலிப்பவை மெல்லினம் ஆகும்.
- இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலியுடன் ஒலிப்பவை இடையினம் ஆகும்.
இவ்வாறு ஒலிக்கும் தன்மையால் மெய்யெழுத்துக்கள் மூவகைப்படும்.
- மெய்யெழுத்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.
மெய்யெழுத்துக்கள் | க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் | 18 எழுத்துக்கள் |
வல்லினம் |
க், ச், ட், த், ப், ற் | 6 எழுத்துக்கள் |
மெல்லினம் | ங், ஞ், ண், ந், ம், ன் | 6 எழுத்துக்கள் |
இடையினம் | ய், ர், ல், வ், ழ், ள் | 6 எழுத்துக்கள் |
வல்லினம்
க், ச், ட், த், ப், ற் - ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன.ஒலிக்கும் பொழுது சிறிது முயற்சியுடன் வன்மையாக ஒலிக்கப்படுகின்ற காரணத்தினால் இவ்வொலிகளுக்கு வல்லினம் என்று பெயர்.
இதனை,
வல்லினம் கசடத பறஎன ஆறே (நன்:68) (code-box)
என நன்னூலார் விளக்குகிறார்.
மெல்லினம்
ங், ஞ், ண், ந், ம், ன் - ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன.ஒலிக்கும்பொழுது அவ்வளவான முயற்சி எதுவும் இல்லாமல் மென்மையாக ஒலிக்கப்படுகின்ற காரணத்தினால் இவ்வொலிகளுக்கு மெல்லினம் என்று பெயர்.
இதனை,
மெல்லினம் ஙஞணந மனஎன ஆறே (நன்:69) (code-box)
என நன்னூலார் விளக்குகிறார்.
இடையினம்
ய், ர், ல், வ், ழ், ள் - ஆகிய ஆறும் வன்மையாகவும் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
இதனை,
இடையினம் யரலவ ழளஎன ஆறே (நன்:70) (code-box)
என நன்னூலார் விளக்குகிறார்.
நினைவுகூர்க
முதலெழுத்துக்கள் பற்றிய நூற்பா,முதலெழுத்து வகைகள்,உயிர் எழுத்துகள்,மெய்யெழுத்து,மாத்திரை ஆகியவற்றைப் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
முதலெழுத்துகளின் எண்ணிக்கை - 30
Please share your valuable comments