தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எழுத்துகளின் பெயர்களில் ஒன்றான வினாவெழுத்து பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.
வினாவெழுத்து பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் பெயர்பாடத்தலைப்புகள்(toc)
வினாவெழுத்து என்றால் என்ன?
வினாப்பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.- இவை சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.
வினாவெழுத்துகள் யாவை?
எ,யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்
- அவன் செய்தான்.
- அவனா(ஆ) செய்தான்.
இரண்டு தொடர்களுக்கும் என்ன வேறுபாடு?
- முதல் தொடர், ஒரு செய்தி மட்டுமே.
- இரண்டாவது தொடர் ஒரு வினாவை எழுப்புகிறது.
செய்தியை வினா ஆக்கிய எழுத்து எது? - "ஆ "
நாம் ஏராளமாய்க் கேள்விகளைக் கேட்க ஆ உதவுகிறது.
- நீயா?
- நானா?
- இன்று பள்ளியா ?
- விடுமுறையா?
வினா எழுப்புவதற்கு வேறுசில எழுத்துகளும் உள்ளன. அவை: எ, ஏ, யா, ஓ, ஆ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
- விடை என்ன ?
- ஏன் வந்தாய்?
- யார் அங்கே ?
- நீயோ செய்தாய்?
'ஏ' எழுத்துக்கு இன்னுமொரு பணி
'ஏ' எழுத்து, வினா கேட்க மட்டும் பயன்படுவது இல்லை. அழுத்தம் கொடுத்துச் சொல்லவும் பயன்படுகிறது.
- அவன் செய்தான்.
- அவனே செய்தான்.
இரண்டாவது சொற்றொடரில் அழுத்தம் ஏற்படக் காரணமானது, 'ஏ'.
- சீதையே சிறந்தவள்
- உணவே மருந்து
இப்பொழுது, 'ஏ'க்கு மாற்றாகத் 'தான்' பயன்படுத்தும் வழக்கமும் இருக்கிறது.
- அவன்தான் முதலில் வருவான்.
- சீதைதான் சிறந்தவள்.
ஏ - என்பது சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும்.
வினா எழுத்துகள் சான்று
எ,யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் | ||
---|---|---|
சொல்லின் முதலில் வருபவை | சொல்லின் இறுதியில் வருபவை | முதல், இறுதி ஆகிய இருவழிகளிலும் வருபவை |
எ,யா | ஆ, ஓ | ஏ |
(எ.கா.) எது, எவன், யாது, யாவன் | (எ.கா.) உண்டானா? படித்தானோ? அவனா? அவனோ? |
|
வினா எழுத்துகள் சொற்கள்
- எது,
- எவன்,
- யாது,
- யாவன்,
- உண்டானா?
- படித்தானோ?
- அவனா?
- அவனோ?
- ஏது,
- ஏன்,
- ஏவன்
- வந்தானே,
- பார்த்தாயே,
- சொன்னாயாமே
வினா எழுத்துகள் எத்தனை வகைபடும்?
வினா எழுத்துகள் வகைகள்
- அகவினா,
- புறவினா என இரண்டு வகைப்படும்.
அகவினா புறவினா வேறுபாடு
அகவினா | புறவினா |
---|---|
சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வருமெனின், அவற்றிற்கு அகவினா எனப்பெயர். | சொற்களின் புறத்தே வினாவெழுத்து அமைந்து வருமெனின், அவற்றிற்குப் புறவினா எனப்பெயர். |
இச்சொற்களில் உள்ளவ வினாவெழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. | இச்சொற்களில் உள்ள வினாவெழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். |
அகவினா எழுத்துகள் சான்று - ஏன், எங்கு, எப்படி, யாவன் | புறவினா எழுத்துகள் சான்று - எப்போது(எ+பொது), எவ்வூர்,வந்தானே,உண்டானோ |
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise
பின்வரும் சொற்றொடர்களை வினாச் சொற்றொடர்களாக மாற்றுக.
அ. பாண்டியன் நல்லவன்.
பாண்டியன் எப்படி பட்டவன்?
ஆ. அப்துல்லா வீட்டுக்கு வந்துவிட்டார்.
அப்துல்லா வீட்டுக்கு வந்து விட்டாரா?
இ. கடல் பெரியது.
கடல் எப்படிப் பட்டது?
பொருத்தமான வினாச்சொற்களை எழுதுக.
அ. என் வினாவுக்கு விடை என்ன?
ஆ. சுற்றுலாவுக்குப் பெயர் கொடுத்திருப்பவர்கள் யார் யார்?
இ. உனக்குப் பிடித்த பொருள் எது?
கீழ்க்காணும் வினாக்களில் உள்ள வினா எழுத்துகளைக் கண்டறிந்து எழுதுக.
1. நெகிழிக் குப்பைகள் பெருகுவதற்குக் காரணம் என்ன?
எ
2. நெகிழிக் குப்பைகளின் பயன்பாட்டைத் தடுப்பது யார் ?
யா
3. நெகிழிப் பைகளை எரிப்பதனால் உண்டாகும் தீமைகளை நாம் உணராதது ஏன்?
ஏ
4. நெகிழிப் பைகளுக்கு மாற்றாகத் துணிப்பைகளைப் பயன்படுத்தலாம், அல்லவா ?
ஆ
5. நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தாத ஊர்கள் உண்டோ?
ஓ
6. நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது எவ்வாறு ?
எ
TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்
1. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
ஏ
2. வினாவெழுத்துகள் மொத்தம் எத்தனை?
வினாவெழுத்துகள் மொத்தம் - ஐந்து
Please share your valuable comments