தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான முறை பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.
முறை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்பாடத்தலைப்புகள்(toc)
முறை - எழுத்துகள் வரிசை முறை
முறை என்றால் என்ன?
தமிழ் எழுத்துகளை எந்த வரிசைமுறையில் அமைப்பது என்பதை நன்னூல் விளக்கும் பகுதி எழுத்துகள் வரிசை முறை எனப்படுகிறது.எழுத்துகளின் சிறப்பு கருதி அமைக்கப்பட்ட வரிசைமுறை இதுவாகும்.
- உயிர் எழுத்துகள் அவற்றின் சிறப்பு கருதியும் ஒன்றற்கொன்று இனமாதல் கருதியும் எழுத்துகளை "அகரம் தொடங்கி னகரம் வரை" என வரிசைப்படுத்திக் கூறுதலே வரிசைமுறை என்கிறது நன்னூல்.
- தனித்தியங்கும் ஆற்றல் பெற்றதால் உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளுக்கு முன்னதாக வைக்கப்படுகின்றன்.
- குறில் எழுத்துகளின் விகாரமே நெடில் எழுத்துகள் என்பதால் குறிலை அடுத்து இனமொத்த நெடிலும் வைக்கப்பட்டது.
- வலியவர் மெலியவருக்கு முன்நிற்றல் இயல்பு என்ற காரணத்தினால் மெய்யெழுத்துகளில் மெல்லினத்திற்கு முன் வல்லினம் வைக்கப்பட்டது.
- வல்லினமும் அல்லாமல் மெல்லினமும் அல்லாமல் இடையினமாக உள்ள எழுத்துகள் இறுதியில் வைக்கப்பட்டுள்ளன.
- இனமாதல் கருதி அமைக்கப்பட்ட வரிசைமுறை மெய்யெழுத்துகளின் வரிசை முறையாகும்.
- உயிரும் அல்லாத மெய்யும் அல்லாத ஆய்த எழுத்து உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து இவற்றிற்கிடையில் வைக்கப்படுகிறது.
எழுத்துகள் வரிசை முறை அட்டவணை
உயிர்→ மெய் ↓ |
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
அகர வரிசைப்படி சீர் செய்தல்
அகரவரிசையில் எழுதுதல்:
1. அன்பு, ஆலயம், இரவு, ஈதல், உவர்ப்பு, ஊசல், ஏற்றம், ஐயம், ஒன்பது, ஒசை, ஒளடதம்
ஒரே நெடிலோ குறிலோ ஒன்றாக வந்தால் முதலில் உள்ள எழுத்துக்கு அடுத்த எழுத்தின் அகர வரிசையில் எழுத வேண்டும்.
(எ.கா.) கப்பல், கட்டம்- என்பதை க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம அகர
வரிசையில் கட்டம், கப்பல் -என எழுத வேண்டும்.
க, ச, ஞ, த, ர-வரிசை
1.கிழங்கு, குடம், கேள்வி, கொம்பு
2. சக்கரம், சிங்கம், சுண்ணம், செந்தமிழ்
3. ஞமலி,ஞாயிறு,ஞாலம், ஞெகிழி
4. தாவரம், திங்கள், தொங்கல், தோற்றம்
5. ரகசியம், ரசம், ராகம், ரூபாய்
ந,ப,ம,ய,ல,வ-வரிசை
1. நட்பு, நான்கு, நிதி, நேற்று
2. பஞ்சு, பற்று, பாக்கு
3. யாக்கை, யாப்பு, யாழ் - என்பதை க,ங,ச,ஞ,ட,ண, த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன-யாக்கை, யாப்பு, யாழ் என எழுத வேண்டும்.
4. மடப்பம், மாட்சி, மீண்டு
6. லட்டு, லாபம்
7. வரப்பு, வாழை, விட்டல், வெற்றி, வேட்கை
அகரமுதலி
அகரமுதலியைப் பார்த்து எழுத்துகளின் வரிசையை நாம் அறிதல் வேண்டும். 'அ' வில் தொடங்கும் தமிழ் உயிரெழுத்துக்களின் வரிசை உங்களுக்குத் தெரியும் அல்லவா ?
- உயிர் எழுத்துகள் அவற்றின் சிறப்பு கருதியும் ஒன்றற்கொன்று இனமாதல் கருதியும் எழுத்துகளை "அகரம் தொடங்கி னகரம் வரை" என வரிசைப்படுத்திக் கூறுதலே வரிசைமுறை என்கிறது நன்னூல்.
அகரமுதலியில் உயிரெழுத்து பெறும் வரிசை
மெய்யெழுத்து வரிசை:
- அக்காள் என்னும் சொல் முதலில் வருமா ?
- அண்ணன் என்னும் சொல் முதலில் வருமா ?
- அக்காள் என்னும் சொல்தான் முதலில் வரும்.
- அங்காடி, அண்ணி, அப்பா, அம்மா, அன்னம்
உயிர்மெய் எழுத்து வரிசையைப் பார்ப்போம்.
' க' வரிசைச் சொற்கள்
'ச' வரிசைச் சொற்கள்
'த' வரிசைச் சொற்கள்
அகரமுதலி வரிசையில் எழுதுக.
பின்வரும் சொல் தொகுதியில் அகரமுதலியில் முதலில் வரக்கூடிய சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
அகரவரிசைப்படி எழுதிப் பழகுக.
அகரவரிசைப்படுத்துக.
பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக.
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம் , மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்
1. அகர வரிசைப்படி சீர் செய்தல்: திங்கள், ஞாலம், யாப்பு, ஊசல், ஒளடதம், ஆலயம், கேள்வி, சிங்கம்
Please share your valuable comments