அணி இலக்கணம்

மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவும் துணைசெய்வது இலக்கணம் ஆகும்.இதனை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளே நன்குணர்த்தும்.

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

அணி

செய்யுள் அமைந்திருக்கும் அழகை விளக்குவது அணியிலக்கணம். 

இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும். 

  • அணி - அழகு 
  • செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும். 
  • சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது 'அணி' இலக்கண இயல்பாகும்.  

அணி என்பது அழகு எனப் பொருள்படும். தன்னை அழகுபெறச் செய்யும் நகை முதலிய அணிகலன்களைப் போலச் செய்யுளை அழகுபெறச் செய்வன அணி எனப்பெறும். 

  • அணிகளில் முதலாவதாகவும் பிற அணிகளுக்குத் தாயாகவும் விளங்குவது உவமை அணியாகும். 
  • பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், உவமையியல் என்னும் இயல் அமைத்து இவ்வணியை விளக்கிக் கூறியிருப்பதால் இதன் சிறப்பை அறியலாம். 
  • பிற்கால அணியிலக்கண நூல்களில் தண்டியலங்காரம் சிறந்ததாகும். இதன் ஆசிரியர் தண்டியென்பர். இவர் வரலாற்றைத் தெளிவாக அறிய முடியவில்லை. 

படைப்பாற்றலில் ஒன்றான பாடல் புனைதல் என்பதற்கு அணிகளைப் பற்றிய அறிவு தேவை. பாட்டு எழுதுவதற்கு மட்டுமன்றி பாடல் வடிவில் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவைப்பதற்கும் அணியைப் பற்றிய அறிவு தேவை. அப்பொழுதுதான் அப்பாடல் தயங்களை முழுமையாக அறிந்து சுவைக்க முடியும். அணிகள் பல. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். 

அணி என்பதற்கு பொருள்

  • அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.
  • செய்யுளில் அமையும் அணி கற்பவர்க்கு இன்பம் பயக்கும்.
  • அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.
  • கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.

அணியிலக்கணம் பற்றி கூறும் தமிழ் நூல்கள்

கவிஞர் தாம் கூற நினைத்த கருத்தைப் பாடல் வடிவில் அழகுபடப் புனைவதற்கான இலக்கணமாக அமைவது அணியிலக்கணம். தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணத்தில் இது ஒன்று. 

அணிகள் சிலவற்றையாவது அறிந்து கொள்வது, அழகிய பாடல்கள் எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், படிக்கும் பாடல்களின் கருத்தாழத்தைப் புரிந்து கொள்ளவும் பயன்படும்.

  • தண்டியலங்காரம்,
  • மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்.

தண்டியலங்காரம்

அணி இலக்கண் நூல்களில் சிறந்ததாக விளங்குவது தண்டியலங்காரம். இந்நூல் பொதுவணியியல், பொருளணியியல் சொல்லணியியல் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. 

  • பொதுவணியியல் - செய்யுள் வகைகளையும் செய்யுள் நெறிகளையும் விவரிக்கிறது. 
  • பொருளணியியல் - அணிகளைக் கருத்தடிப்படையில் வகை தொகை செய்து விவரிக்கிறது. இதில் தன்மையணி முதலாகப் பாவிகவணி ஈறாக முப்பத்தைந்து அணிகளும் அவற்றின் வகைகளும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. 
  • சொல்லணியியல் - என்னும் பிரிவு மடக்கணி, சித்திரகவி, வழுக்களின் வகை, மலைவு ஆகியவற்றை விவரிக்கிறது.

அணி இலக்கணம் எத்தனை வகைப்படும்?


அணி இலக்கணம்

நினைவுகூர்க:

அணி என்னும் சொல்லுக்கு பொருள் என்ன ?

தொடர்புடையவை

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please share your valuable comments

Top Post Ad