தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பொருள் இலக்கணத்தை நம் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே!
அகப்பொருள் வாழ்வியல் ஆகும். இதை ஐவகை நிலங்களாகப் பிரித்து ஐவகை நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதேபோல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.
முல்லை திணை விளக்கம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் பொருள் இலக்கணம் அகப்பொருள்பாடத்தலைப்புகள்(toc)
முல்லை திணை விளக்கம்
அகத்திணைகள் எழுவகைப்படும்.அவற்றுள் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை
ஆகியவை அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும். முல்லை என்பது என்ன அவற்றின்
பொருள்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
அகப்பொருள் வகைகள் - ஏழு வகைப்படும்
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை 6. கைக்கிளை 7. பெருந்திணை
அன்பின் ஐந்திணைகள் யாவை?
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை
முல்லை அகத்திணைக்குரிய பொருள்கள்
1. முல்லை நிலத்தின் முதற்பொருள் என்பது எதைக் குறிக்கிறது ?
அகவொழுக்கம் நிகழ்தற்ககுக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
பொழுது - பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
பெரும்பொழுதுகள் - ஓராண்டின் ஆறு கூறுகள்
சிறுபொழுதுகள்- ஒரு நாளின் ஆறு கூறுகள்
அகத்திணை | ஐவகை நிலங்கள் | சிறுபொழுதுகள் | பெரும்பொழுதுகள் |
---|---|---|---|
முல்லை | காடும் காடு சார்ந்த இடமும் | மாலை |
கார்காலம் |
2. முல்லை நிலத்தின் கருப்பொருள் என்றால் என்ன?
முல்லை நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதே போல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.
கருப்பொருள் | முல்லை |
---|---|
தெய்வம் | திருமால் |
மக்கள் | தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் |
உணவு | வரகு, சாமை |
விலங்கு | முயல்,மான், புலி |
பூ | முல்லை, தோன்றி |
மரம் | கொன்றை, காயா |
பறவை | காட்டுக்கோழி, மயில் |
ஊர் | பாடி, சேரி |
நீர் | காட்டாறு |
பறை | ஏறு கோட்பறை |
யாழ் | முல்லை யாழ் |
பண் | முல்லைப்பண் |
தொழில் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் |
3. முல்லை நிலத்தின் உரிப்பொருள் யாவை?
மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன.
அகத்திணை | உரிப்பொருள் |
பொருள் |
---|---|---|
முல்லை | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் | இருத்தல் - பிரிவைப் பொறுத்து இருத்தல் |
நினைவுகூர்க:
முல்லை திணைக்குரிய பூ என்ன ?
Please share your valuable comments