இடுகுறிப்பெயரும், காரணப்பெயரும்

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எழுத்துகளின் பெயர்களில் ஒன்றான இடுகுறி, காரணப் பெயர்கள் பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

இடுகுறி, காரணப் பெயர்கள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் (link) எழுத்திலக்கணம் (link) பெயர்(link)

பாடத்தலைப்புகள்(toc)

இடுகுறிப்பெயரும், காரணப்பெயரும்

நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

இடுகுறிப் பெயர்கள் காரணம்

ஒரு காரணமும் இல்லாமல், தொன்றுதொட்டு ஆன்றோரால் வழங்கி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர்கள் எனப்படும்.

  • எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர்.
  • காரணமறிய வியலாப் பெயர்களெல்லம் இடுகுறிப் பெயர்களே ஆகும்.
  • இடுகுறிப் பெயர்கள் சான்று
  • இடுகுறிப் பெயர்கள் எடுத்துக்காட்டு - மண், நாய், கோழி, மரம், கல், கலம்

இடுகுறிப் பெயர்கள் வகைகள்

இரு வகைப்படும். அவை,

  • இடுகுறிப் பொதுப்பெயர்
  • இடுகுறிப் சிறப்புப்பெயர்
    இடுகுறிப் பொதுப்பெயர் இடுகுறிப் சிறப்புப்பெயர்
    மரம் என்பது அனைத்துவகைக் மரங்களுக்கும் இடுகுறிப் பொதுப்பெயர். தென்னை என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி, இடுகுறிப் பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே சிறப்பாய் வருவதால், இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
    இடுகுறிப் பொதுப்பெயர் எடுத்துக்காட்டு : மண், நாய், கோழி, மரம். இடுகுறிப் சிறப்புப்பெயர் எடுத்துக்காட்டு : தென்னை, மா, பலா, வாழை



    TNPSC - General Tamil Study Material

    காரணப் பெயர்கள் காரணம்

      காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும்.
      • காரணப் பெயர்கள் சான்று: எடுத்துக்காட்டு பறவை (பறத்தல்), வளையல், செங்கல் (சிவப்பு நிறமுடைய), முக்காலி (மூன்று கால்கள்), கரும்பலகை (கருப்பு நிறமுடைய).

      காரணப் பெயர்கள் வகைகள்

      இரு வகைப்படும். அவை,

      • காரணப் பொதுப்பெயர்
      • காரணச் சிறப்புப்பெயர்
      காரணப் பொதுப்பெயர் காரணச் சிறப்புப் பெயர்
      காகம், குயில், புறா, கிளி ஆகிய அனைத்தையும் பறவை (பறத்தல்) என்கிறோம். இதனைக் காரணப் பொதுப்பெயர் என்கிறோம். வளையல் போலவே சிலபொருள் வளைந்து வட்டமாக இருக்கும். இருப்பினும் அவையெல்லாம் வளையல் என அழைக்கப்படுவது இல்லை. இருப்பினும் இச்சொல்,கையில் அணியும் வளையலை மட்டுமே குறிப்பதால், காரணச் சிறப்புப் பெயர் ஆயிற்று.
      பறவை (பறப்பதால்) வளையல்


      TNPSC - General Tamil Study Material


      நன்னூல்படி பெயர்கள்

      இடுகுறி காரணப் பெயர் பொதுச் சிறப்பின (நன்னூல் :62)(code-box)

      என்னும் நன்னூல் நூற்பா விவரிக்கின்றது. 

      இதற்கு மற்றொரு பொருள் கூறும் வழக்கும் உள்ளது. பெயர்கள் இடுகுறி, காரணம் என்னும் இரண்டிற்கும் பொதுவாகியும் இடுகுறிக்கே உரிய சிறப்பாகியும் காரணத்திற்கே உரிய சிறப்பாகியும் வருவதுண்டு. 

      அதாவது, பெயர்கள் மூவகைப்படும்

      • காரண இடுகுறிப்பெயர், 
      • இடுகுறிப்பெயர், 
      • காரணப் பெயர் 

      பெயர்கள் மூவகைப்படும் என்பதே இரண்டாம் கருத்தாக என அமைகிறது. 

      காரண இடுகுறிப் பெயர் விளக்கம்

      பெயர்களை சான்றுகளுடன் அறிவது அவசியமாகும். 

      1.காரண இடுகுறிப்பெயர்: அந்தணர், முள்ளி (காரணமும் இடுகுறியும் பொருந்தி அமைந்த பெயர் )

      அந்தணர் எனும் பெயர் அறவாளர் அனைவருக்கும் பொருந்துவதால் காரணப் பெயராகவும் பிராமணர் எனும் பெயர் ஓர் இனத்தாரை மட்டும் குறிப்பதால் இடுகுறிப் பெயராகவும் அமைகின்றன. எனவே இது காரண இடுகுறிப் பெயர் எனப்படுகிறது. 

      முள்ளி என்பது முட்களுடைய செடிகள் அனைத்திற்கும் பொதுவான காரணப் பெயராகவும் முள்ளி என்னும் ஒருவகைச் செடிக்கு இடுகுறிப் பெயராகவும் அமைந்து காரண இடுகுறிப் பெயர் ஆயிற்று.

      2. இடுகுறிப் பெயர் : பொன், தமிழ் (ஒரு காரணமும் இன்றி தொடக்கத்தில் இடும் பெயர்) 

      3.காரணப் பெயர் : பொன்னன், தமிழன் (ஒரு காரணத்தால் இடப்படும் பெயர்)

      இடுகுறிப்பெயரும், காரணப்பெயரும் மதிப்பீடு

      சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

      1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

      அ) பறவை

      ஆ) மண்

      இ) முக்காலி

      ஈ) மரங்கொத்தி 

      2. காரணப்பெயரை வட்டமிடுக.

      அ) மரம்

      ஆ) வளையல்

      இ) சுவர்

      ஈ) யானை

      3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

      அ) வயல்

      ஆ) வாழை

      இ) மீன்கொத்தி

      ஈ) பறவை

      4.காரணம் கருதி இடப்படும் பெயர்கள்

      அ. இடுகுறிப்பெயர்கள்

      ஆ. காரணப்பெயர்கள்

      இ.இடுகுறிப்பொதுப்பெயர்

      கோடிட்ட இடத்தை நிரப்புக.

      1. நம் முன்னோர் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயர் இடுகுறிப்பெயர்.

      2. 'நாற்காலி' என்னும் சொல் காரணப் பெயர் பெயராகும்.

      3. 'மரம்' என்னும் சொல் இடுகுறிப் பொதுப்பெயர் பெயராகும்.

      4. 'குயில்' என்னும் சொல் காரண சிறப்புப் பெயர் பெயராகும்.

      குறுவினா

      1. இடுகுறிப்பெயர் என்றால் என்ன? 

      நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.

      (எ.கா.) மண், மரம், காற்று

      2. காரணப்பெயர் என்றால் என்ன?

      நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.

      (எ.கா.) நாற்காலி கரும்பவகை

      உரிய விடையைத் தேர்வு செய்து எழுதுக.

      அ) பெட்டி என்பது ........ ஆகும்.

      1. இடுகுறிப்பெயர்

      2. காரணப்பெயர்

      3. சுட்டுப்பெயர்

      ஆ) சித்திரை மாதத்தில் பிறந்ததனால் ........... என அழைக்கப்பட்டான்.

      1. சித்திரையான் 

       2. கார்த்திகேயன் 

      3. அமாவாசை

      இ) காரணப் பொதுப்பெயர்........ஆகும்.

      1. வளையல்

      2. மண்

      3. நண்டு

      பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

      இடுகுறிப் பொதுப்பெயர் - காடு

      இடுகுறிச் சிறப்புப்பெயர் - பனை 

      காரணப் பொதுப்பெயர் - பறவை

      காரணச் சிறப்புப்பெயர் - மரங்கொத்தி


      குறுவினாக்கள்

      1. காரணப்பெயர் என்றால் என்ன ? சான்று தருக.

      2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன ? சான்று தருக.

      3. இடுகுறிப்பெயரின் வகைகளைச் சான்றுடன் விளக்குக.

      4. காரணப்பெயரின் வகைகளைச் சான்றுடன் விளக்குக.

      TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

      1. காரணமறிய வியலாப் பெயர்களெல்லம் ......................... ஆகும்.

      தொடர்புடையவை

      கருத்துரையிடுக

      1 கருத்துகள்
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

      Please share your valuable comments