தொடை விகற்பங்கள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மலர்களைத் தொடுப்பதுபோலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது தொடை எனப்படும்.பாடலில் உள்ள அடிகள்தோறும் அல்லது சீர்கள்தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.

தொடை விகற்பம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.

யாப்பிலக்கணம் எழுத்துகள் அசை சீர் தளை அடி தொடை

பாடத்தலைப்புகள்(toc) 

தொடை விகற்பம் என்றால் என்ன?

நான்குசீர்களையுடைய ஓரடியில் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை. மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றனைக்கொண்டு தொடுப்பது தொடை விகற்பம் எனப்படும்.

தொடை விகற்பம் தொடை எத்தனை வகைப்படும்?

இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகிய இவ்வேழும் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகிய ஐந்தும் பொருந்தத் தொடை விகற்பம் முப்பத்தைந்து வகைப்படும்.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் யாப்பிலக்கணம் தொடை விகற்பங்கள்

1. இணை (1, 2)

நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் சில எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது இணை எனப்படும்.

2.பொழிப்பு (1, 3)

ஓர் அடியுள் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் சில எழுத்துகள் ஒன்றி வருவது பொழிப்பு எனப்படும்.

3. ஒரூஉ (1,4)

ஓர் அடியுள் முதற் சீரிலும் நாலாம் சீரிலும் சில எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது, ஒரூஉ எனப்படும்.

4. கூழை (1, 2, 3)

ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் சில எழுத்துகள் ஒன்றி வருவது கூழை எனப்படும்.

5.மேற்கதுவாய் (1, 3, 4)

ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் சில எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது மேற்கதுவாய் எனப்படும்.

6. கீழ்க்கதுவாய் (1, 2, 4)

ஓரடியுள் முதல், இரண்டு, நாலாம் சீர்களில் சில எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் எனப்படும்.

7. முற்று (1, 2, 3, 4)

ஓர் அடியின் நாலு சீர்களிலும் சில எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது முற்று எனப்படும்.


மோனை

இரு சீர்களில் முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது மோனை எனப்படும்.

1. இணைமோனை (1, 2)

நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது இணைமோனை எனப்படும்.

ன்சொல் னிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

2.பொழிப்பு மோனை (1, 3)

ஓர் அடியுள் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதல் எழுத்துகள் ஒன்றி வருவது பொழிப்புமோனை எனப்படும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

3. ஒரூஉ மோனை (1,4)

ஓர் அடியுள் முதற் சீரிலும் நாலாம் சீரிலும் முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது, ஒரூஉமோனை எனப்படும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

4. கூழைமோனை (1, 2, 3)

ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதல் எழுத்துகள் ஒன்றி வருவது கூழைமோனை எனப்படும்.

தானம் வமிரண்டும் ங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

5.மேற்கதுவாய் மோனை (1, 3, 4)

ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது மேற்கதுவாய்மோனை எனப்படும்.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துள்நின்று டற்றும் பசி.

6. கீழ்க்கதுவாய்மோனை (1, 2, 4)

ஓரடியுள் முதல், இரண்டு, நாலாம் சீர்களில் முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய்மோனை எனப்படும்.

ருள்சேர் ருவினையும் சேரா றைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

7. முற்றுமோனை (1, 2, 3, 4)

ஓர் அடியின் நாலு சீர்களிலும் முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது முற்றுமோனை எனப்படும்.

ற்க சடறக் ற்பவை ற்றபின்
நிற்க அதற்குத் தக.

நாலு சீர்களில் மோனைக்குரிய விகற்பங்கள் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என ஏழிற்கும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது போலவே எதுகையும் வரும்.

எதுகை

இரு சீர்களின் முதலெழுத்து அளவொத்து நிற்க (ஓசையளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை எனப்படும்.

1. இணை எதுகை (1, 2)

முதலிரு சீர்களின் முதலெழுத்து அளவொத்து நிற்க (ஓசையளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது இணைஎதுகை எனப்படும்.

ற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

2.பொழிப்பு எதுகை(1, 3)

ஓர் அடியுள் முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது பொழிப்பு எதுகை எனப்படும்.

ல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

3. ஒரூஉ எதுகை(1,4)

ஓர் அடியுள் முதல் சீரிலும் நாலாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ எதுகை எனப்படும்.

ருளிலார்க் கவ்வுலகம் இல்லை பொருளிலார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

4. கூழை எதுகை (1, 2, 3)

ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கூழை எதுகை எனப்படும்.

ற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

5.மேற்கதுவாய் எதுகை(1, 3, 4)

ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மேற்கதுவாய் எதுகை எனப்படும்.

க்கொண்ட எல்லாம் அப்போம் இப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

6. கீழ்க்கதுவாய் எதுகை (1, 2, 4)

ஓர் அடியுள் முதல், இரண்டு, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் எதுகை எனப்படும்.

ன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

7. முற்று எதுகை (1, 2, 3, 4)

ஓர் அடியுள் உள்ள நாற்சீர்களிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது முற்றெதுகை எனப்படும்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


முரண்

இரு சீர்களில் எதிர்மறையாக ஒன்றிவரத் தொடுப்பது முரண் எனப்படும்.

இணை முரண் 1-2

தி ந்தம் இலாமை அடைந்தவன்

பொழிப்பு முரண் 1-3

மேலுற எழுந்துமிகு கீழுற அகழ்ந்து

ஒரூஉ முரண் 1-4

புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்

கூழை முரண் 1-2-3

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

மேற்கதுவாய் முரண் 1-3-4

வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின்

கீழ்க்கதுவாய் முரண் 1-2-4

மாலை யாமம்புலர்வறும் வைகறை

முற்று முரண் 1-2-3-4

நீன்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்


இயைபு

இரு சீர்களில் கடைசி எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது இயைபு எனப்படும்.

இணை இயைபு 2-1

தெய்வநெறிச் சிவம்பெருக்குந் திருவாமூர் திருவாமூர்

பொழிப்பு இயைபு 3-1

கரும்பல்ல நெல்லென்ன கமுகல்ல கரும்பென்ன

ஒரூஉ இயைபு 4-1

ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை

கூழை இயைபு 3-2-1

சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதந்தொண்டர்

மேற்கதுவாய் இயைபு 4-3-1

மூன்றில்தொறும் வீதிதொறும் முகநெடுவாயில்கள் தொறும்

கீழ்க்கதுவாய் இயைபு 4-2-1

தேடினார் இருவருக்குந் தெரிவரியார் திருமகனார்

முற்றியைபு 4-3-2-1

புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்


அளபெடை

இணை அளபெடை 1-2

அறமேஎ அறமேஎ வெல்லும் அறிவீர்

பொழிப்பு அளபெடை 1-3

சூஉழ்ச்சியால் வந்தவை நில்லாஅ நினமின்

ஒரூஉ அளபெடை 1-4

நல்லோஒர் கவலை ஒழியும் சின்னஅள்

கூழை அளபெடை 1-2-3

தீயோஒர் என்னாஅணும் ஆஅளார் தெரிவீர்

மேற்கதுவாய் அளபெடை 1-3-4

கொடியோஒர் சொற்களைச் சான்றோஒர் கொள்ளாஅவர்

கீழ்க்கதுவாய் அளபெடை 1-2-4

உயர்ந்தோஒர் சேஎரின் உண்டாகும் நலனேஎ

முற்று அளபெடை 1-2-3-4

கீழோஒர் செயலோஒ கீழோஅம் அழிவாஅம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad