தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்.
- தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
நிரல்நிறை அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
நிரல்நிறை அணி விளக்கம்
சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, நேரே பொருள் கொள்வது நிரல்நிறை அணி யாகும்.
நிரல்நிறை அணி என்றால் என்ன?
- நிரல் = வரிசை
- நிறை = நிறுத்துதல்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள்
கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
நிரல்நிறை அணி எடுத்துக்காட்டு 1 - குறள் சான்று
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - குறள் 45
பாடலின் பொருள்
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும்
பயனும் அதுவே ஆகும்.
இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள்.
- இல்வாழ்க்கையின் பண்பு எனப்படுவது அன்பு காட்டுவது.
- இல்வாழ்க்கையின் பயன் எனப்படுவது அறம்செய்தல் என்பதாகும்
என்பது இக்குறட்பாவின் கருத்து.
அணிப்பொருத்தம்
இக்குறட்பாவில் அன்பும் அறனும் முதலடியில் அமைந்துள்ளன. அடுத்த அடியில், அச்சொற்களோடு முறையாகப் பொருந்தும் வரிசைப்படி பண்பு, பயன் என்னும் சொற்கள் அமைந்துள்ளன. எனவே, இது நிரல்நிறை அணி.
இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.நினைவுகூர்க:
நிரல்நிறை அணி |
எடுத்துக்காட்டு |
விளக்கம் |
---|---|---|
சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, நேரே பொருள் கொள்வது
நிரல்நிறை அணி யாகும். |
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது |
|
தொடர்புடையவை
- இரட்டுறமொழிதல் அணி
- நவிற்சி அணி
- உருவக அணி
- உவமையணி
- பிறிது மொழிதல் அணி
- வஞ்சப் புகழ்ச்சியணி
- வேற்றுமை
- பின்வருநிலை அணிகள்
Please share your valuable comments