இடைச்சொல் - Interjection in tamil language

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.

இடைச்சொல் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

இடைச்சொல் என்றால் என்ன?

இடைச்சொல்(Interjection) என்பது பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொற்களிலிருந்து வேறுபட்டது: இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது; தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது.

  • பெயர், வினைச் சொற்களை இடமாகக் கொண்டு நடப்பதால் இடைச்சொல் எனப்பட்டது.
  • பெயர்ச்சொல், வினைச்சொல்லுடன் சேர்ந்து வரும்.
  • எப்போதும் தனியாகச் செயல்படாமல், பெயர்ச்சொல், வினைச்சொல்லுடன் சேர்ந்தே செயல்படும்.
  • தனியாக இருந்தால் பொருள் தராது.
  • இணைச்சொல்லாகவும், அசையாகவும் வேற்றுமை உருபாகவும், உவம உருபாகவும் பெயர்ச்சொல், வினைச்சொல்லுடன் இணைந்தே வரும்.
  • பெயர்ச்சொல், வினைச்சொல்லுடன் இருக்கும்போது, எளிதாகப் பொருளையும் கருத்தையும் தெளிவுபடுத்தும்.

இடைச்சொல் எடுத்துக்காட்டு 

  • இராமனைப் பார்த்தேன்.

இதில் வரும் வேற்றுமை உருபு ஐ இடைச்சொல்லாகும்.

  • கற்றதனா லாய பயனென் கொல். 

இதிலுள்ள கொல் என்னும் அசைச்சொல்லும் இடைச்சொல்லே.

இது பெயர்,வினைச்சொற்களுக்கு உள்ளும், அவற்றின் முன்னும் பின்னும் ஒன்றுபட்டு நடக்கும் தன்மை உடையது; ஓர் இடைச்சொல்லோ அல்லது பலவோ பெயர் வினைச் சொற்களின் அக, புற உறுப்பாக இடம்பெறும்.

  • இது தனியாக வந்தால் பொருள் தராது
  • பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களைச் சார்ந்தே வரும்.

"வேற்றுமை வினைசா ரியைஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப் பெனெண்பகுதியின் தனித்தியல்பு இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்" - நன்னூல் 420


இடைச்சொல் எத்தனை வகைப்படும்?

இடைச்சொற்களின் வகைகள்

  1. வேற்றுமை உருபுகள்,
  2. வினையுருபுகள்,
  3. சாரியைகள்,
  4. ஒப்புருபுகள்(உவமஉருபுகள்),
  5. தத்தம் பொருளை உணர்த்துவன,
  6. இசை நிறைப்பன,
  7. அசை நிலைகள்,
  8. குறிப்புப் பொருளை உணர்த்துவன

என்னும் எட்டும் இடைச்சொற்களின் வகைகளாகும்.


இடைச்சொல் - Interjection in tamil language

இடைச்சொல் எடுத்துக்காட்டு

  • இராமனைப்(ஐ) பார்த்தேன்,
  • தம்பியும்(உம்) வந்தான்.

இதிலுள்ள '' , 'உம்' என்பது இணைப்பு இடைச்சொல் சொல்லாக வருகிறது.

  • உண்ணாய்

வினையின் அகத்துறுப்பாய்த் 'ஆய்' என்னும் விகுதி இடைச்சொல் பெற்று வந்தது.

  • அதுமன்

பெயரின் புறத்துறுப்பாய் 'மன' என்னும் இடைச்சொல் பின்னால் வந்தது.

இடைச்சொல் வகைகள் உருபுகள் எடுத்துக்காட்டு
வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு ... முதலியன
வினையுருபுகள் த், ட், ற், இன் - இறந்தகால இடைநிலை முதலியன நிலத்தினன்
சாரியைகள் அன், அத்து, அற்று முதலியன பொன்னன்(பொன்+அன்)
ஒப்புருபுகள்(உவமஉருபுகள்) போல, போன்ற, ஒப்ப, உறழ முதலியன
தத்தம் பொருளை உணர்த்துவன அ, இ, உ (சுட்டு) என்பன ப்பையன்
இசை நிறைப்பன செய்யுளில் சீர் நிறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ''ஓ!ஓ' முதலியன வந்தானோ(ன்+)
அசை நிலைகள் அம்ம, மியா, இக முதலியன மற்று அது அம்ம
குறிப்புப் பொருளை உணர்த்துவன ஐயோ! ஐயோ! அடடா! அடடா! முதலியன ஐயோ! இறந்தானே

வேற்றுமை உருபுகள்

பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும். 
  • ஐ, ஆல், ஆன்,ஒடு, ஓடு, உடன், கு, இல், இன் , அது , கண், உள், மேல், கீழ் என்பன வேற்றுமை உருபுகள் ஆகும்.

வேற்றுமை உருபுகள் எடுத்துக்காட்டு

  • இராமனைப்(ஐ) பார்த்தேன்,
இதிலுள்ள 'ஐ' என்பது இணைப்பு இடைச்சொல் வருகிறது.

வினையுருபுகள்

  • த், ட், ற், இன் - இறந்தகால இடைநிலை முதலியன

வினையுருபுகள் எடுத்துக்காட்டு

  • நடந்தனன் (நட+ந்+த்+அன்+அன்)

வினையின் அகத்துறுப்பாய்த் ''கர ஒற்றாகிய த் இறந்தகால இடைநிலையும், 'அன்' சாரியையும், 'அன்' விகுதியும் என இடைச்சொற்கள் பல வந்தன.

சாரியைகள்

  • அன், அத்து, அற்று முதலியன

சாரியைகள் எடுத்துக்காட்டு

  • பொன்னன்

பெயரின் அகத்துறுப்பாய் விகுதிப் பொருள் இடைச்சொல் ‘அன்' பெற்று வந்தது

  • நிலத்தினன்

பெயரின் அகத்துறுப்பாய் 'அத்து', அன்சாரியையும் 'அன்' விகுதியும் என இடைச்சொற்கள் பல வந்தன.

ஒப்புருபுகள்(உவமஉருபுகள்)

  • போல, போன்ற, ஒப்ப, உறழ முதலியன

தத்தம் பொருளை உணர்த்துவன

தத்தம் பொருளை உணர்த்துவன எடுத்துக்காட்டு

  • அப்பையன் (அ+பையன்)

பெயரின் புறத்துறுப்பாய் '' என்னும் இடைச்சொல் முன்னால் வந்தது.

இசை நிறைப்பன

செய்யுளில் சீர் நிறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ''ஓ!ஓ' முதலியன

இசை நிறைப்பன எடுத்துக்காட்டு

  • வந்தானோ (வந்தான்+ஓ)

வினையின் புறத்துறுப்பாய் '' என்னும் இடைச்சொல் பின்னால் வந்தது.

அசை நிலைகள்

  • அம்ம, மியா, இக முதலியன

அசை நிலைகள் எடுத்துக்காட்டு

  • மற்று அது அம்ம

பெயரின் புறத்துறுப்பாய் 'மற்று', 'அம்ம' என்னும் இடைச்சொற்கள் முன்னும் பின்னும் பல வந்தன.

குறிப்புப் பொருளை உணர்த்துவன

  • ஐயோ! ஐயோ! அடடா! அடடா! முதலியன

குறிப்புப் பொருளை உணர்த்துவன எடுத்துக்காட்டு

  • ஐயோ! வந்தான்

வினையின் புறத்துறுப்பாய் 'ஐயோ' என்னும் இடைச்சொல் முன்னால் வந்தது.

  • ஐயோ! இறந்தானே

வினையின் புறத்துறுப்பாய் 'ஐயோ', 'ஏ' என்னும் இடைச்சொற்கள் முன்னும் பின்னும் பல வந்தன.

இவ்வாறு இடைச்சொற்கள் ஒன்றோ பலவோ பெயர் வினைகளுக்கு முன்னும் பின்னும் புறத்துறுப்பாக வரும்; அகத்துறுப்பாக ஒன்றோ பலவோ வரும்.

தொடர்புடையவை

இடைச்சொல்

இடைச்சொல் உரிச்சொல் ஒன்பதாம்

வகுப்பு

இடைச்சொல் உரிச்சொல்

இடைச்சொல் இலக்கணம்

உரிச்சொல்

உரிச்சொல் என்றால் என்ன

உரிச்சொல் தொடர்

உரிச்சொல் தொடர் என்றால் என்ன

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad