தமிழ் எழுத்துகளின் இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான பிறப்பு பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

பிறப்பு பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

தமிழ் எழுத்துகளின் பிறப்பு - Birth of Tamil characters

அ, உ, க, ப ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள். 

  • அ - வாயைத் திறந்தாலே என்னும் எழுத்து ஒலிக்கிறது. 
  • உ -  என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன. 
  • க - நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டும்போது என்னும் எழுத்து பிறக்கிறது. 
  • ப -  என்னும் எழுத்து இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது. 

இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறாக உள்ளன. 

  • எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.
    தமிழ் எழுத்துகளின் பிறப்பு

    எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

    உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி உதடு, நாக்கு, மேல்வாய் (அண்ணம்), பல் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

    மெய்யெழுத்துகளை ஒலிக்கும்போது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி என்பன. அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவே.

    எழுத்துக்களின் பிறப்பு எத்தனை வகைப்படும்?

    எழுத்துக்களின் பிறப்பு வகைகள் 

    • இடப்பிறப்பு,
    • முயற்சிப் பிறப்பு

    என இருவகையாகப் பிரிக்கலாம்.



    இடப்பிறப்பு என்றால் என்ன?

    இடப்பிறப்பு என்பது எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களைக் குறிக்கிறது.

    • ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களை காற்றறைகள் என கூறலாம்.

    முதலெழுத்துக்களின் இடப்பிறப்பு

    அ முதல் ஔ வரை உள்ள உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், க் முதல் ன் வரை உள்ள மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகளாகும்.

    உயிர் எழுத்துகள் இடப்பிறப்பு

    • உயிர் எழுத்துகள் - பன்னிரண்டும் (அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ) கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

    மெய் எழுத்துக்கள் பிறப்பிடம் - வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் இடப்பிறப்பு

    •  வல்லின மெய் எழுத்துகள் - ஆறும் (க், ச், ட், த், ப், ற்) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
    • மெல்லின மெய் எழுத்துகள் - ஆறும் (ங், ஞ், ண், ந், ம், ன்) மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
    • இடையின மெய் எழுத்துகள் - ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 

    சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு

    ஆய்த எழுத்து இடப்பிறப்பு

    ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது. 

    சார்பெழுத்து இடப்பிறப்பு

    பிற சார்பெழுத்துகள் யாவும், தத்தம் முதலெழுத்துகள் தோன்றுதற்குரிய இடத்தையும், அவை பிறத்தற்குரிய முயற்சியையும் தமக்கு உரியனவாகக் கொண்டு ஒலிக்கின்றன.

    எழுத்துக்களின் இடப்பிறப்பிடம்

    கழுத்து மூக்கு மார்பு தலை
    பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் கழுத்திலிருந்து பிறக்கின்றன மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன. வல்லின எழுத்துகள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன.
    ஆய்த எழுத்து - தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது

    முயற்சிப் பிறப்பு என்றால் என்ன?

    முதலெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு

    முயற்சிப் பிறப்பு என்பது உதடு, நாக்கு, மேல்வாய் (அண்ணம்), பல் ஆகிய உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை குறிக்கிறது.
    • ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை ஒலிப்புமுனைகள் என கூறுவர்.

    உயிர் எழுத்துக்கள் முயற்சிப் பிறப்பு

    உயிர் எழுத்துக்கள் முயற்சிப் பிறப்பு

    அ, ஆ இ, ஈ,எ,ஏ,ஐ உ,ஊ,ஒ,ஓ, ஒள
    இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன. ஆகிய ஐந்து எழுத்தும் வாயைத் திறப்பதனோடு மேல்வாய்ப் பல்லை நாவிளிம்பு தொடுவதனால்தோன்றுகின்றன ஆகிய ஐந்து எழுத்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் உதடு (இதழ்)களைக் குவித்து ஒலிப்பதனால் தோன்றுகின்றன

    மெய் எழுத்துக்கள் பிறப்பிடம் - வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் முயற்சிப் பிறப்பு

    தமிழ் எழுத்துகளின் பிறப்பு, உச்சரிப்பு
    க், ங் ச்,ஞ் ட், ண்
    இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத்தொடுவதனால் தோன்றுகின்றன. இவ்விரு மெய்களும் இடைநாக்கு (நடு நாக்கு), நடு அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன. இவை நாவினது நுனி, அண்ணத்தின் நுனியைத் தொடுவதனால் தோன்றுகின்றன.
    த்,ந் ப், ம் ய்
    மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துக்கள் தோன்றுகின்றன. மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த இவை தோன்றும். மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும். இது நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் தோன்றுகிறது.
    ர்,ழ் ல் ள்
    இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன. இது மேல்வாய்ப் பல்லின் அடியை, நாவின் ஒரங்கள் தடித்து நெருங்குவதனால் பிறக்கிறது. இது மேல்வாயை நாவின் ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.
    வ் ற், ன்
    இது மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது. இவை மேல்வாயை நாக்கின் நுனி மிகவும்பொருந்துவதனால் பிறக்கின்றன.

    சார்பெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு

    ஆய்த எழுத்து முயற்சிப் பிறப்பிடம்

    ஆய்தமாகிய சார்பெழுத்து, அதன் முயற்சிப் பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தலே ஆகும்.

    சார்பெழுத்து முயற்சிப் பிறப்பிடம்

    பிற சார்பெழுத்துகள் யாவும், தத்தம் முதலெழுத்துகள் தோன்றுதற்குரிய இடத்தையும், அவை பிறத்தற்குரிய முயற்சியையும் தமக்கு உரியனவாகக் கொண்டு ஒலிக்கின்றன.

    நினைவுகூர்க

    உயிருள்ள உடம்பினுள்ளே எழுகின்ற காற்று மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி உதடு,நாக்கு,மேல்வாய் (அண்ணம்),பல் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.

    TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

    1. ஆய்தமாகிய சார்பெழுத்து எதை இடமாகக்கொண்டு பிறக்கிறது?
    2. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்
    3. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து

    தொடர்புடையவை - எழுத்திலக்கணம்

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad