மாத்திரை

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான மாத்திரை பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

மாத்திரை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

மாத்திரை என்றால் என்ன?

இலக்கணத்தில் மாத்திரை என்பது எழுத்துகளின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல். 

  • மாத்திரை என்பது சிறிய ஒலியளவு. 
  • மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. இந்த அளவைத் தாண்டும் ஒலியளவை அளபெடை என்கிறோம்.

மாத்திரை எடுத்துக்காட்டு

தமிழ் எழுத்துகளுக்கான மாத்திரை அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை 
  • உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
  • உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை 
  • உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை 
    • குறில் மாத்திரை அளவு - 1 மாத்திரை (எ.கா: அ, இ, ப, கி, மு)
    • நெடில் மாத்திரை அளவு - 2 மாத்திரை (எ.கா: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
    • மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் மாத்திரை அளவு - அரை மாத்திரை
    • குற்றியலிகரம், குற்றியலுகரம் மாத்திரை அளவு - அரை மாத்திரை
    •  அளபெடை எழுத்துகளின் மாத்திரை - இரண்டிற்கு மேல்
    • ' ஐ' மாத்திரை அளவு - 2 
    • ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை
    • 'ஔ' மாத்திரை அளவு - 2 
    •  ஒளகாரக்குறுக்கம்  மாத்திரை அளவு - ஒன்றரை மாத்திரை
    •  'ம்' மாத்திரை அளவு - அரை மாத்திரை
    •  மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை 
    •  ஆய்த எழுத்து 'ஃ' மாத்திரை அளவு - அரை மாத்திரை
    •  ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை 
    • உயிரளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும். 
    • ஒற்றளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.

    மாத்திரை வேறு பெயர்கள்

     'மாத்திரை' என்றால் 'கண் இமைக்கும் நேரம்' அல்லது 'கை நொடி நேரம்' அல்லது 'விரல் சொடுக்கும் நேரம்' என்பர் இலக்கண நூலார்.

    எழுத்துகளின் மாத்திரை இரண்டிற்கு மேல் இல்லை என்பது இலக்கண நூலார் கருத்து;அதற்கு மேல் மாத்திரை பெற வேண்டுமெனில் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்;


    TNPSC - general tamil


     

    தொடர்புடையவை - எழுத்திலக்கணம்

      கருத்துரையிடுக

      0 கருத்துகள்
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

      Top Post Ad