தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணத்தின் கூறுகளாக நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எண் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரித்து முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டு வகைப்படும்.
சார்பு எழுத்துக்கள்:
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.
குற்றியலிகரம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம்
(link)
எழுத்திலக்கணம்
(link)
எண்
(link)
முதலெழுத்து (link)
சார்பெழுத்து(link)
குற்றியலுகரம்(link)
பாடத்தலைப்புகள்(toc)
குற்றியலிகரம் என்றால் என்ன?
குற்றியலிகரம் பிரிக்கும் முறை
- குற்றியலிகரம் பிரிக்கும் முறை = குறுமை + இயல் + இகரம்.
- எனவே, தனக்குரிய ஓசையில் குறைந்து குறுகிய ஓசையுடைய ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம்.
- குறுமை என்றால் குறுகிய;
- இயல் என்றால் ஓசை;
குற்றியலிகரம் மாத்திரை
- இகரம் என்றால் 'இ' என்னும் எழுத்து.
- இகரம் மாத்திரை - ஒரு மாத்திரை
- குற்றியலிகரம் மாத்திரை - அரை மாத்திரை
குற்றியலுகரத்தின் உகரம் தன் ஒருமாத்திரையில் குறைந்து ஒலிப்பது போலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும், தன் ஒருமாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.
குறுகிய ஓசை என்றால் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒலிக்கின்ற காலஅளவு உண்டு. மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்.
யகரம் வரக் குறள் உத்திரி இகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய -
நன்னூல், 93
- குறள் - குறைந்த; யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். மியா என்பது ஓர் அசைச்சொல் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்.
குற்றியலிகரம் வகைகள்
குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.
இடம்: 1
குற்றியலுகரச் சொற்களைத்(நாகு,வீடு) தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்.
குற்றியலிகரம் சான்று
அந்த இகரம் தனக்குரியஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரைஅளவாகச் குறைந்து ஒலிக்கும்.- கொக்கு (க்+உ) + யாது = கொக்கியாது (க்+ இ)
- வண்டு+யாது=வண்டியாது;
- வரகு + யாது = வரகியாது;
- என்பது + யாது = என்பதியாது;
- நாகு + யாது = நாகியாது;
- வீடு + யாது = வீடியாது;
- தோப்பு + யாது = தோப்பியாது;
இடம்: 2
மியா என்பது ஓர் அசைச்சொல்(ஓசை நயத்திற்காக வருவது). இதில் 'மி யில் (மி = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். இது சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
குற்றியலிகரம் எடுத்துக்காட்டு
- கேள்+ மியா = கேண்மியா
- செல் +மியா =சென்மியா
குற்றியலிகரம் தற்போது வழக்கில் இல்லையா ?குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே.
முற்றியலுகரம் என்றால் என்ன?
- 'உ'கரம் மாத்திரை - ஒரு மாத்திரை
- முற்றியலுகரம் மாத்திரை - ஒரு மாத்திரை
தன்மாத்திரை அளவில் குறையாமல் இருந்தால், அதற்குப் பெயரென்ன?
அதற்குப் பெயர் முற்றியலுகரம். அதாவது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்.
முற்றியலுகரம் எத்தனை இடங்களில் வரும்.
முற்றியலுகரம் வகைகள்
1. தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரம் (கு, சு, டு, து, பு, று)- எடுத்துக்காட்டு - பகு, பசு, படு, அது, தபு, பெறு)
- எடுத்துக்காட்டு - காணு, உண்ணு, உருமு
- எடுத்துக்காட்டு - எழு, தள்ளு, கதவு
ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.
நினைவுகூர்க
குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் வேறுபாடு
குற்றியலுகரம் | குற்றியலிகரம் | முற்றியலுகரம் |
---|---|---|
குறுமை + இயல் + உகரம் | குறுமை + இயல் + இகரம் | உகரம் |
குற்றியலுகரத்துக்கு அரை மாத்திரை | குற்றியலிகரத்துக்கு அரை மாத்திரை | முற்றியலுகரத்துக்கு ஒரு மாத்திரை |
ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும் | ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும் |
தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்
|
(எ.கா.) குழந்தை, வகுப்பு ,காசு, எஃகு, பயறு,பாட்டு,பந்து, சால்பு | வண்டு+யாது=வண்டியாது; வரகு + யாது = வரகியாது; என்பது + யாது = என்பதியாது. |
(எகா) புரு, பசு,விடு, அது, வறு, மாவு, ஏழு |
1. கு, சு, டு, து, பூ,று என்பன வல்லினமெய்களின்மேல் உகரம் ஊர்ந்து வரும் எழுத்துகள். 2. ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய்,வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றனைப் பெற்று வரும். 3. நெடில்தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துகளைப்பெற்று வரும். (எ.கா.) ஆடு, மாடு, காது, 4. ஏனைய ஐவகைக் குற்றியலுகரச் சொற்கள் இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துகளைப் பெற்று வரும். |
1. நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வருமொழி யகரம் வரின், நிலைமொழி உகரம், இகரமாகத் திரிந்து தன்மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் 2. கேண்மியா, சென்மியா ஆகியவற்றில் வரும். மியா என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரமும் ( மி = ம் + இ ) தன்மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் |
1.தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும்((எ.கா.)பகு, பசு, படு, அது, தபு, பெறு) 2. சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும்,((எ.கா.)காணு, உண்ணு, உருமு) 3. இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும்((எ.கா.)எழு, தள்ளு, கதவு) |
தொடர்புடையவை
- உயிரளபெடை,ஒற்றளபெடை அளபெடுக்கும் எழுத்துகள் எண்ணிக்கை?
- குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்?
- குற்றியலுகரம் பிரிக்கும் முறை எழுதுக?
- குறுக்கம் எத்தனை வகைப்படும்?
- உயிர்மெய் எழுத்துக்கள் பிரித்து எழுதும் முறை?
- ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் என்ன?
Please share your valuable comments