நன்னூல்படி, எழுத்துப் பிறக்கும் இடமும் உறுப்பும் - Place and organ of birth of Tamil script

மெய்யெழுத்துகளை ஒலிக்கும்போது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி என்பன. அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவே.

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான பிறப்பு பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

பிறப்பு பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

எழுத்துப் பிறக்கும் இடமும் உறுப்பும் - Place and organ of birth of Tamil script

எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

நிறைந்த உயிரினது முயற்சியால் உள்ளிருந்து எழுப்பும் காற்றினால் எழும் அணுக்கூட்டம் மார்பு, கழுத்து, தலையுச்சி, மூக்கு ஆகிய இடங்களை அடைந்து, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய நான்கினுடைய முயற்சியால் வேறுவேறு எழுத்து ஒலியாய் வெளிப்படுதல் எழுத்தின் பிறப்பு எனப்படும்.

எழுத்துக்களின் பிறப்பு எத்தனை வகைப்படும்?

எழுத்துக்களின் பிறப்பு வகைகள்

  • எழுத்துக்களின் இடப்பிறப்பு (எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலையுச்சி, மூக்கு ஆகிய இடப்பிறப்பு எனவும்),
  • எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு (உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு)

என இருவகையாகப் பிரிக்கலாம். 


எழுத்துப் பிறக்கும் இடமும் உறுப்பும்

இடப்பிறப்பு (இடம்)

ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களைக் காற்றறைகள் (இடப்பிறப்பு) எனப்படும்.

முயற்சிப் பிறப்பு (உறுப்பு)

ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை ஒலிப்புமுனைகள் (முயற்சிப் பிறப்பு)எனப்படும்.


மார்பு, கழுத்து, தலை, உச்சி, மூக்கு ஆகியன எழுத்துகள் பிறப்பதற்கு உரிய இடங்கள். இதழ் (உதடு), நாக்கு, பல், அண்ணம் ஆகியன எழுத்துகள் பிறக்கத் துணைசெய்யும் உறுப்புகள்.


தமிழ் எழுத்துகளின் பிறப்பு, உச்சரிப்பு

நன்னூல்படி, முதல் எழுத்துக்கள் பிறக்கும் இடம்

தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக மிகுதியாகப் பயன்பாட்டிலிருக்கும், இலக்கண நூல், நன்னூல். தொல்காப்பியம், தெளிவும் எளிமையும் கொண்டு விளங்க, நன்னூல் செறிவும் சுருக்கமும்கொண்டு விளங்குகிறது. நன்னூலில் எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் உள்ளன. 

முதலெழுத்துக்களின் இடப்பிறப்பு

"அவ்வழி
ஆவி இடைமை இடம்மிடறு ஆகும்
மேவும் மென்மை, மூக்கு உரம்பெறும் வன்மை" - (நன்னூல் 75)

முன் கூறியவாறு எழுத்துக்கள் பிறக்கும் போது,

  • உயிர் எழுத்துகளும் இடை எழுத்துக்களும் பிறக்கும் இடம் கழுத்தாகும்.
  • மெல்லெழுத்துகள் பிறக்கும் இடம் மூக்காகும்.
  • வல்லெழுத்துகள் பிறக்கும் இடம் மார்பாகும்.

முதலெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு

உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்

 அ, ஆ பிறக்கும் இடமும் உறுப்பும்

"அவற்றுள்
முயற்சியுள் அஆ அங்காப்பு உடைய" - (நன்னூல் 76)

மேல்கூறியவாறு முதல் எழுத்துகளின் பிறப்பினுள்,

அ, ஆ ஆகிய இரண்டு எழுத்துக்களும் அண்ணத்தின் தொழிலாகிய அங்காத்தல் முயற்சியால் பிறக்கும்.

அங்காப்பு - வாயைத் திறத்தல்

இ, ஈ,எ,ஏ,ஐ பிறக்கும் இடமும் உறுப்பும்

"இஈ எஏ ஐஅங் காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே'' - (நன்னூல் 77)

இ ஈ எ ஏ ஐ ஆகிய ஐந்து எழுத்துகளும் அங்காப்புடனே மேல்வாய்ப் பல்லை நாக்கினது நுனி பொருந்தப் பிறக்கும்.

உ,ஊ,ஒ,ஓ, ஒள பிறக்கும் இடமும் உறுப்பும்

"உஊ ஒஓ ஒள இதழ் குவிவே" - (நன்னூல் 78)

உ ஊ ஒ ஓ ஒள என்னும் ஐந்து எழுத்துகளும் உதடுகள் குவிவதால் பிறக்கும்.

மெய் எழுத்துக்கள் பிறப்பிடம் - வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் பிறக்கும் இடம்

க,ங,ச, ஞ,ட ,ண பிறக்கும் இடமும் உறுப்பும்

"கஙவும் சருவும் டணவும் முதல்இடை
நுனிநா அண்ணம் உறமுறை வருமே" - (நன்னூல் 79)

  • க,ங என்னும் எழுத்துகள் நாக்கின் அடி, மேல் வாய் அடிப்பகுதியையும்,
  • ச, ஞ என்னும் எழுத்துக்கள் நாக்கின் நடு, மேல்வாய் நடுப்பகுதியையும்,
  • ட ,ண என்னும் எழுத்துகள் நாக்கின் கடை, மேல்வாய்க் கடைப்பகுதியையும் பொருந்தப் பிறக்கும்.

த,ந பிறக்கும் இடமும் உறுப்பும்

"அண்பல் அடிநா முடிஉறத் தநவரும்" - (நன்னூல் 80)

மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கு நுனி பொருந்துவதால் த ந என்னும் எழுத்துக்கள் பிறக்கும்.

ப,ம பிறக்கும் இடமும் உறுப்பும்

"மீகீழ் இதழ்உறப் பமப் பிறக்கும்" - (நன்னூல் 81)

  • மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் ப ம என்னும் எழுத்துகள் பிறக்கும்.

பிறக்கும் இடமும் உறுப்பும்

"அடிநா அடிஅணம் உற, த் தோன்றும்" - (நன்னூல் 82)

நாக்கின் அடியானது மேல்வாய் அடியைப் பொருந்துவதால் யகர எழுத்து பிறக்கும்.

ர, ழ பிறக்கும் இடமும் உறுப்பும்

"அண்ணம் நுனிநா வருட ரழவரும்" - (நன்னூல் 83)

மேல்வாயை நாக்கு நுனியானது தடவ ர, ழ ஆகிய எழுத்துகள் பிறக்கும்.

ல,பிறக்கும் இடமும் உறுப்பும்

"அண்பல் முதலும் அண்ணமும் முறையின்
நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்" - (நன்னூல் 84)

  • மேல்வாய்ப் பல் அடியை நாவின் ஓரமானது தடித்து நெருங்க லகாரம் என்னும் எழுத்தும்,
  • மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ ளகாரம் என்னும் எழுத்தும் முறையே பிறக்கும்.

பிறக்கும் இடமும் உறுப்பும்

"மேல்பல் இதழ்உற மேவிடும் வ்வே" - (நன்னூல் 85)

மேல் வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் வகரமானது பிறக்கும்.

ற, ன பிறக்கும் இடமும் உறுப்பும்

"அண்ணம் நுனிநா நனிஉறின் றனவரும்" - (நன்னூல் 86)

மேல்வாயை நாக்கு நுனி மிகவும் பொருந்தினால் றகரமும் னகரமும் பிறக்கும்.

சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு

ஆய்த எழுத்து பிறப்பிடம்

ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது. அதன் முயற்சிப் பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தலே ஆகும்.

"ஆய்தக்கு இடம்தலை அங்கா முயற்சி
சார்பெழுத்து ஏனையவும் தம்முதல் அனைய" - (நன்னூல் 87)

ஆய்த எழுத்திற்கு பிறப்பதற்கு இடம் தலையாகும் முயற்சி வாயைத் திறப்பதாகும்.

சார்பெழுத்து பிறப்பிடம்

பிற சார்பெழுத்துகள் யாவும், தத்தம் முதலெழுத்துகள் தோன்றுதற்குரிய இடத்தையும், அவை பிறத்தற்குரிய முயற்சியையும் தமக்கு உரியனவாகக் கொண்டு ஒலிக்கின்றன.

"எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமின் சிறிது, உளவாகும்'' - (நன்னூல் 88)

ஆய்தம் நீங்கலான ஏனைய சார்பெழுத்துகள் பலவற்றிற்கும் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட்டது எனினும், உயர்த்திக் கூறுதல் தாழ்த்திக் கூறுதல், உயர்த்தியும் தாழ்த்தியும் கூறுதல் ஒலி முயற்சியால் ஒவ்வோர் எழுத்தும் சிறிது சிறிது வேறுபட்டுப் பிறப்பதாகும்.

மேல் உதடும் கீழ்உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ப், ம் தோன்றும். 

மிடறு - கழுத்து


எழுத்து
இடம் உறுப்பு உறுப்பின் முயற்சி
அ ஆ மிடறு அண்ணம் அங்காப்பு
இ ஈ எ ஏ ஐ மிடறு அண்பல், முதல்நா பொருந்துதல்
உ ஊ ஒ ஓ ஔ
மிடறு இதழ் குவிதல்

மார்பு அண்ணாம், அடி நா பொருத்துதல்
மார்பு அண்ணம், நடு நா பொருந்துதல்

மார்பு அண்ணம், நுனி நா பொருந்துதல்

மூக்கு அண்ணம், அடி நா பொருந்துதல்
மூக்கு அண்ணம், நடு நா பொருந்துதல்
மூக்கு அண்ணம், நுனி நா பொருந்துதல்

மார்பு அண்பல், நுனி நா பொருந்துதல்

மூக்கு அண்பல், நுனி நா பொருந்துதல்
மார்பு இதழ் பொருந்துதல்
மூக்கு இதழ் பொருந்துதல்
மிடறு மேல் அண்ணம், அடிநா பொருந்துதல்
மிடறு மேல் அண்ணம், நுனி நா வருடுதல்

மிடறு அண்பல் முதல், நாவிளிம்பு நெருங்குதல்
 
மிடறு அண்பல் முதல், நாவிளிம்பு தடித்துத் தடவுதல்

மிடறு மேம்பல், இதழ் பொருந்துதல்

தலை
-
அங்காத்தல்

நினைவுகூர்க

 உயிருள்ள உடம்பினுள்ளே எழுகின்ற காற்று மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி உதடு,நாக்கு,மேல்வாய் (அண்ணம்),பல் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad