யாப்பு : செய்யுள் உறுப்புகள்-அசை

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

எழுத்துகளால் ஆனது 'அசை' எனப்படும். அசைப் பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை.

அசை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.

யாப்பிலக்கணம் எழுத்துகள்

பாடத்தலைப்புகள்(toc)

அசை என்றால் என்ன?

ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ ஓசையுடன் அசைந்து (பிரிந்து) நிற்பது அசை ஆகும்.

அசை எத்தனை வகைப்படும்?

இது,

  1. நேரசை,
  2. நிரையசை

என அசை வகைகள் இருவகைப்படும்.;

நேரசை நிரையசை வாய்ப்பாடு

அடிப்படைத் தமிழ் இலக்கணம் யாப்பிலக்கணம்

1. நேரசை வாய்ப்பாடு

  • குறில் தனித்தும்,
  • குறில் ஒற்றடுத்தும்,
  • நெடில் தனித்தும்,
  • நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை எனப்படும்.
எழுத்து நேரசை
ப,க தனிக்குறில் - குறில் தனித்து வரல்
பல்,கல் தனிக்குறில், ஒற்று - குறில் ஒற்றுடன் வரல்
பா,கா தனிநெடில் - நெடில் தனித்து வரல்
பால்,கால் தனிநெடில்,ஒற்று - நெடில் ஒற்றுடன் வரல்

2. நிரையசை வாய்ப்பாடு

  • குறில் இணைந்தும்,
  • குறில் இணைந்து ஒற்றும்,
  • குறில் நெடில் இணைந்தும்,
  • குறில் நெடில் இணைந்து ஒற்றும், வருவது நிரையசை.
எழுத்து நிரையசை
அணி,பட இருகுறில் - குறில் இணைந்து வரல்
அணில்,படம் இருகுறில்,ஒற்று - குறில் இணைந்து ஒற்றுடன் வரல்
விழா,படா குறில், நெடில் - குறில் நெடில் இணைந்து வரல்
விழார், படாம் குறில், நெடில்,ஒற்று - குறில்நெடில் இணைந்து ஒற்றுடன் வரல்

அலகிடுதல் - சீர் அசை வாய்ப்பாடு

ஒரு சீரைப் பிரித்து அசை பார்ப்பதே அலகிடுதல்.

அலகிடப் பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்: அசை பிரித்தல்

1. மெய்யெழுத்தின் பக்கத்தில் / இக்குறியீடுக.

2. நெடில் பக்கத்தில் / இக்குறியிடுக.

3. இரு குறில் அடுத்து / இக்குறியீடுக.

4. ஒற்று அல்லது ஆய்த எழுத்தை நீக்கி, ஓர் எழுத்து இருப்பின் நேர் எனக் கொள்க.

5. இரண்டு எழுத்தாய் இருப்பின் நிரை எனக் கொள்க.

இவ்விதியைப் பின்பற்றிக் குறட்பாக்களைப் அசை பிரிப்பது எப்படி காண்போம்

வ.எண் சீர் அசை
1 இல்/லா/ரை நேர் நேர் நேர்
2 எல்/லா/ரும் நேர் நேர் நேர்
3 எள்/ளுவர் நேர் நிரை
4 செல்/வரை நேர் நிரை
5 எல்/லா/ருஞ் நேர் நேர் நேர்
6 செய்/வர் நேர் நேர்
7 சிறப்/பு நிரைநேர் - நிரைபு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad