தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பொருள் இலக்கணத்தை நம் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே!
அகப்பொருள் வாழ்வியல் ஆகும். இதை ஐவகை நிலங்களாகப் பிரித்து ஐவகை நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதேபோல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.
மருதம் திணை விளக்கம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் பொருள் இலக்கணம் அகப்பொருள்பாடத்தலைப்புகள்(toc)
மருதம் திணை விளக்கம்
அகத்திணைகள் எழுவகைப்படும்.அவற்றுள் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகியவை அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும். மருதம் என்றால் என்ன அவற்றின் பொருள்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
அகப்பொருள் வகைகள் - ஏழு வகைப்படும்
அவையாவன
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை 6. கைக்கிளை 7. பெருந்திணை
அன்பின் ஐந்திணைகள் யாவை?
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை
மருதம் அகத்திணைக்குரிய பொருள்கள்
1. மருதம் நிலத்தின் முதற்பொருள் என்பது எதைக் குறிக்கிறது ?
அகவொழுக்கம் நிகழ்தற்ககுக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
பொழுது - பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
பெரும்பொழுதுகள் - ஓராண்டின் ஆறு கூறுகள்
சிறுபொழுதுகள்- ஒரு நாளின் ஆறு கூறுகள்
அகத்திணை | ஐவகை நிலங்கள் | சிறுபொழுதுகள் | பெரும்பொழுதுகள் |
---|---|---|---|
மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் | வைகறை |
ஆறு பெரும்பொழுதுகள் |
2. மருதம் நிலத்தின் கருப்பொருள் என்றால் என்ன?
மருதம் நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதே போல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.
கருப்பொருள் | மருதம் |
---|---|
தெய்வம் | இந்திரன் |
மக்கள் | ஊரன், உழவர், உழத்தியர் |
உணவு | செந்நெல், வெண்ணெல் |
விலங்கு | எருமை, நீர்நாய் |
பூ | செங்கழுநீர், தாமரை |
மரம் | காஞ்சி, மருதம் |
பறவை | நாரை, நீர்க்கோழி, அன்னம் |
ஊர் | பேரூர்,மூதூர் |
நீர் | மனைக்கிணறு, பொய்கை |
பறை | மணமுழா, நெல்லரிகிணை |
யாழ் | மருத யாழ் |
பண் | மருதப்பண் |
தொழில் | நெல்லரிதல், களை பறித்தல் |
3. மருதம் நிலத்தின் உரிப்பொருள் யாவை?
மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. இவ்வொழுக்கங்கள் ஐந்தும்
அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக
உரிப்பொருள்கள் பத்து உள்ளன.
அகத்திணை | உரிப்பொருள் |
பொருள் |
---|---|---|
மருதம் | ஊடலும் ஊடல் நிமித்தமும் | ஊடல் - தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல் |
நினைவுகூர்க:
மருதம் நில கடவுள் யார் ?
தொடர்புடையவை
- அகப்பொருள் வகைகள் என்ன?
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
- நானிலம் படைத்தவன்- முடியரசன்
Please share your valuable comments