TNPSC குரூப்-4 VAO, குரூப் 2 2A Combined Civil Service Exam (Syllabus 2026)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 VAO, குரூப் 2 2A போன்ற தேர்வுகளில் பகுதி-அ (Part A) தமிழ் மொழித் தகுதித் தேர்வு என்பது ஒரு மிக முக்கியமான அங்கமாகும். இது பத்தாம் வகுப்புத் தரத்தில் (SSLC Standard) அமைக்கப்பட்டிருக்கும். 

  • தமிழ் மொழித் தகுதித் தேர்வு என்பது குரூப்-4 VAO, குரூப் 2 2A போன்ற தேர்வுகளுக்கு பொதுவானது(same syllabus).

இத்தேர்வில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்குக் கொள்குறி வகையிலேயே கேட்கப்படும். இதில் Part-A பொதுத்தமிழ் கீழ் இலக்கணம், சொல்லகராதி, எழுதும் திறன், கலைச்சொற்கள், வாசித்தல், எளிதில் மொழிபெயர்த்தல், இலக்கியம் மற்றும் தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் ஆகிய ஏழு முக்கியப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

இதில் குறைந்தபட்சம் 40% (60 மதிப்பெண்கள்) பெற்றால் மட்டுமே பகுதி-ஆ (General Studies) விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பதால், தேர்வர்கள் இப்பாடப்பகுதிக்குத் தனி கவனம் செலுத்துவது அவசியம். மேலும், குரூப்-4 தேர்வில் இந்த மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியலுக்கு (Ranking) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால், 95-க்கும் மேற்பட்ட வினாக்களுக்குச் சரியாக விடையளிப்பதே உங்கள் அரசுப் பணி கனவை உறுதி செய்யும்.

🎯 வெற்றியாளர்களின் ரகசியம் (Success Tip):

உங்கள் தயாரிப்பு நேரத்தின் 80% பகுதியை 6 முதல் 10-ஆம் வகுப்பு புதிய சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களுக்கு ஒதுக்குங்கள். குறிப்பாக இலக்கணம் (Unit I) மற்றும் இலக்கியம் (Unit VII) ஆகிய பகுதிகளில் அதிக வினாக்கள் கேட்கப்படுவதால், இப்பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்.

இப்பகுதியானது பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.

Tamil Eligibility Test Study Material and TNPSC Exam Pattern 2026

தேர்வுப் பகுதி (Exam Section) வினாக்கள் மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண் கால அளவு
பகுதி-அ: கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு 100 150 60 (40%) 3 மணிநேரம்
பகுதி-ஆ: பொது அறிவு & திறனறிவும் 100 150 -- (மொத்தம்)
மொத்தம் (Total) 200 300 90 3 மணிநேரம்

முக்கிய குறிப்பு: பகுதி-அ-வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் (அதாவது 60 மதிப்பெண்கள்) பெற்றால் மட்டுமே பகுதி-ஆ-வின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். 

பாடத்தலைப்புகள்(toc)


TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO / குரூப் 2 and 2A தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2026 Syllabus

கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்யவும்:



பொதுத்தமிழ் கீழ் எழு பிரிவுகள் உள்ளது. 

Part A: (SSLC Standard - 100 Questions)

அலகு I : இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து

சொல்

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)

(i)

(ii) 

  • கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் - (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) - வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்); 
  • பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் (எ.கா.) ஊடகம் தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) - சமூகம் மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்); 
  • ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - (எ.கா.) புதுச்சேரி - புதுவை, மன்னார்குடி - மன்னை, மயிலாப்பூர்-மயிலை; 
  • பிழை திருத்துக |  விளக்கம் (எ.கா.) ஒரு - ஓர் | விளக்கம் ;
  • பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் - (எ.கா.) வெத்தில - வெற்றிலை, நாக்காலி - நாற்காலி;

(iii) 

  • பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது - நேற்று மழை பெய்தது; 
  • சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்); 
  • அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை. பின்பு) - (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் - மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்; 
  • பொருள் தரும் ஓர் எழுத்து -(எ.கா.) ஆ-பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ -நெருப்பு: 
  • பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்.

அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)

(i) 

(ii) மரபுத் தமிழ்

அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)

பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும். (உதாரணம்: search engine - தேடு பொறி , வலசை- Migration, ஒவ்வாமை - Allergy, Gene - மரபணு, கடல் மைல்- Nautical Mile)

அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)

அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் - பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) - ஆவணங்களின் தலைப்பு - கோப்புகள் - கடிதங்கள் - மனுக்கள் - மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)

திருக்குறள் தொடர்பான செய்திகள் - (இருபது அதிகாரங்கள் மட்டும்) - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை - மேற்கோள்கள் - அறநூல் தொடர்பான செய்திகள் (நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்) - தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் - உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் -  தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் - தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர்,  தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் - தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர், டி.கே.சிதம்பரனாதர். தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்

குறிப்பு: அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.


பொதுவான கேள்விகள் (FAQs)

Q1. தமிழ் தகுதித் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?

பதில்: 150 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் (40%) எடுக்க வேண்டும்.

Q2. இத்தேர்வு எந்தத் தரத்தில் இருக்கும்?

பதில்: இது பத்தாம் வகுப்பு (SSLC Standard) தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

Q3. தமிழ் மதிப்பெண்கள் ரேங்கிங்கிற்கு கணக்கிடப்படுமா?

பதில்: ஆம், குரூப்-4 போன்ற தேர்வுகளில் இது தரவரிசைப் பட்டியலுக்கு (Ranking) எடுத்துக்கொள்ளப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.