பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர். கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம்.

பாடத்தலைப்புகள்(toc)

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் எழுதிய பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.

பெரும்பாணாற்றுப்படை பாடல்கள் விளக்கம்

கலங்கரை விளக்கம்

"வானம் ஊன்றிய மதலை போல ஏணி 

சாத்திய ஏற்றருஞ் சென்னி 

விண்பொர நிவந்த வேயா மாடத்து 

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி 

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் 

துறை"

- கடியலூர் உருத்திரங் கண்ணனார்(code-box)


பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; 

ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது: 

வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு. 

கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.

சொல்லும் பொருளும்

மதலை - தூண்

ஞெகிழி - தீச்சுடர்

அழுவம் - கடல்

வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது. திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்.

சென்னி - உச்சி 

உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு

கரையும் - அழைக்கும்

நூல் வெளி

கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆசிரியர் குறிப்பு

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். 

வாழ்ந்த காலம்

சங்க காலம்

பிறப்பு

இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். 

பாடிய பாடல்கள் 

இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்
சங்கநூல்கள் பத்துப்பாட்டு
பொருள் ஆற்றுப்படை
பாட்டு பெரும்பாணாற்றுப்படை
பாடியபுலவர்கள் உருத்திரங்கண்ணனார்
பாட்டுடைத்தலைவன் இளந்திரையன்
அடிஅளவு
500ஆசிரியப்பா


ஆற்றுப்படை இலக்கியம்

வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டில் பத்து நூல்கள் உள்ளன.

1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. பெரும்பாணாற்றுப்படை

4. சிறுபாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப்பாட்டு

9. பட்டினப்பாலை

10. மலைபடுகடாம் 

கலங்கரை விளக்கம் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC  பொதுத்தமிழ் - Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் 4. பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வேயாமாடம் எனப்படுவது

அ) வைக்கோலால் வேயப்படுவது

ஆ) சாந்தினால் பூசப்படுவது

இ) ஓலையால் வேயப்படுவது

(ஈ) துணியால் மூடப்படுவது


2. உரவுநீர் அழுவம் -இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) காற்று

ஆ) வானம்

இ) கடல்

ஈ) மலை


3. கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன

அ) மீன்கள்

ஆ) மரக்கலங்கள்

இ) தூண்கள்

ஈ) மாடங்கள்


4. தூண் என்னும் பொருள் தரும் சொல்

அ ) ஞெகிழி

ஆ) சென்னி

இ) ஏணி

ஈ) மதலை

பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

1. மதலை - தூண்

2. ஞெகிழி - தீச்சுடர்

3. அழுவம் - கடல்

4. சென்னி - உச்சி 

கோடிட்ட இடத்தை நிரப்புக 

1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

2. பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்

குறுவினா

1. மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?

மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது கலங்கரை விளக்கம்.

2. கலங்கரை விளக்கத்தில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

கலங்கரை விளக்கத்தில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.

3. பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் யார்?

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

சிறுவினா

கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகள்

  • கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; 
  • ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது: 
  • வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. 
  • அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு. 
  • கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.

TNPSC questions and answers 

1. வேயாமாடம் எனப்படுவது

அ) வைக்கோலால் வேயப்படுவது

ஆ) சாந்தினால் பூசப்படுவது

இ) ஓலையால் வேயப்படுவது

(ஈ) துணியால் மூடப்படுவது


2. உரவுநீர் அழுவம் -இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) காற்று

ஆ) வானம்

இ) கடல்

ஈ) மலை


3. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

மதலை - தூண்

ஞெகிழி - தீச்சுடர்

அழுவம் - கடல்

சென்னி -உச்சி 


4. தூண் என்னும் பொருள் தரும் சொல்

அ ) ஞெகிழி

ஆ) சென்னி

இ) ஏணி

ஈ) மதலை


5. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் 

தொண்டைமான் இளந்திரையன்


6. பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் 

கடியலூர் உருத்திரங்கண்ணனார்


7. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது 

ஆற்றுப்படை இலக்கியம்


8. இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார்


9. ஞெகிழி - பொருள்

தீச்சுடர்


10.  உரவுநீர் அழுவத்து - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

பெருநீர்ப் பரப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad