கடலும் கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை. அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக் காண உள்ளம் உவகையில் துள்ளும். அச்சம் தரும் கடலில், அஞ்சாது கப்பலோட்டியவர் நம் தமிழர். காற்றின் துணைகொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோரின் திறத்தைச் சங்கப்பாடலின்வழி அறிவோமா?
பாடத்தலைப்புகள்(toc)
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலில் மருதன் இளநாகனார் எழுதிய255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
அகநானூறு பாடல்கள் விளக்கம் - மருதன் இளநாகனார்
கவின்மிகு கப்பல்
உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்ளரி மருங்குஅறிந்து ஒய்ய
- மருதன் இளநாகனார்(code-box)
பாடலின் பொருள்
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
சொல்லும் பொருளும்
உரு - அழகு
போழ - பிளக்க
வங்கம் - கப்பல்
எல் - பகல்
கோடு உயர் - கரை உயர்ந்த
வங்கூழ் - காற்று
மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
நீகான் - நாவாய் ஓட்டுபவன்
நூல் வெளி
மருதன் இளநாகனார் ஆசிரியர் குறிப்பு
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
பாடிய பாடல்கள்
கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
சிறப்பு பெயர்கள்
மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
எட்டுத்தொகை நூல்கள்
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் - Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் 4. அகநானூறு பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இயற்கை வங்கூழ் ஆட்ட அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு
2. மக்கள் ...…. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்..
அ) கடலில்
ஆ) காற்றில்
இ) கழனியில்
ஈ) வங்கத்தில்(கப்பல்)
3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
4. 'பெருங்கடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரு + கடல்
ஆ) பெருமை + கடல்
இ) பெரிய + கடல்
ஈ) பெருங் + கடல்
5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) இன்று ஆகி
ஆ) இன்றிஆகி
இ) இன்றாகி
ஈ) இன்றாஆகி
6. எதுகை இடம்பெறாத இணை
அ) இரவு- இயற்கை
ஆ) வங்கம்-சங்கம்
இ) உலகு - புலவு
ஈ) அசைவு-இசைவு
பொருத்துக. (பொருத்தப்பட்டுள்ளது)
1. வங்கம் - கப்பல்
2. நீகான் - நாவாய் ஓட்டுபவன்
3. எல் - பகல்
4. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
குறுவினா
1. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய் என்று அகநானூறு கூறுகிறது.
2. நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?
காற்று, இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்த துணைசெய்கிறது.
சிறுவினா
கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
கடலில் கப்பல் செல்லும் காட்சியை குறித்து அகநானூறு கூறுவன
- உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்.
- அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
- இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
- உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
TNPSC questions and answers
1. பொருத்துக. (பொருத்தப்பட்டுள்ளது)
2. எதுகை இடம்பெறாத இணை
அ) இரவு- இயற்கை
ஆ) வங்கம்-சங்கம்
இ) உலகு - புலவு
ஈ) அசைவு-இசைவு
3. இயற்கை வங்கூழ் ஆட்ட அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு
4. மக்கள் ...…. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்..
அ) கடலில்
ஆ) காற்றில்
இ) கழனியில்
ஈ) வங்கத்தில்(கப்பல்)
5. மருதத்திணை பாடுவதில் வல்லவர்
இளநாகனார்
6. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
7. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
அகநானூறு
8. அகநானூறு ....... நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
9. அகநானூறு ......... பாடல்களைக் கொண்டது.
நானூறு
10. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர்
இளநாகனார்
Please share your valuable comments