சொல் இலக்கணம்

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது மொழி. ஒருவர் தம் கருத்தை வெளிப்படுத்தவும், அதனைக் கேட்போர் புரிந்துகொள்ளவும் கருவியாக அமைவதும் மொழியே.அம்மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவும் துணைசெய்வது இலக்கணம் ஆகும்.இதனை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளே நன்குணர்த்தும்.

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

சொல் இலக்கணம்

சொல் என்றால் என்ன என்பதையும், அச்சொல்லின் வகை பற்றிய விளக்கங்களையும் கூறுவது  சொல்லிலக்கணம்.

சொல்

  •  'பூ மலர்ந்தது.' 
  • 'மாடு புல் தின்றது.' 

ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். 

அது, 

  • இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.
  • மூவகை இடங்களிலும் வரும்.
  • உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
  • வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.

தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.

சொற்கள் எடுத்துக்காட்டு

  • ஈ, பூ,மை (சில எழுத்துகள் தனித்து பொருள் தரும் - ஒரேழுத்து ஒரு மொழி)
  • கல், கடல், தங்கம் (ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள்)
  • பூ மலர்ந்தது.
  • மாடு புல் தின்றது.

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன்,விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

  • பூமணி 
  • வான்மழை
  • விண்மழை
  • பூமழை
  • பொன்விலங்கு
  • மணிமேகலை

பெயரியல்

"ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்
மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே" - நன்னூல் 259


தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மொழி மூன்று பிரிவினதாய், உயர்திணை, அஃறிணை என்னும் ஐம்பால் பொருளையும், தன்னையும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்திலும், வழக்கிலும் செய்யுளிலும், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளக்குவது சொல்லாகும்.

சொல் தரும் வேறு பொருள்

மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.

பதம்
மொழி தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
கிளவி இரட்டைக்கிளவி ( இரட்டைச்சொல் )

சொல் இலக்கணம் பற்றி கூறும் தமிழ் நூல்கள்

தொல்காப்பிய எழுத்து, சொல் ஆகிய அதிகாரங்களை அடிப்படையாகக்கொண்டு, நன்னூல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.

சொல்லதிகாரம் மட்டும் அமைந்த இலக்கண நூல்கள் பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து என்பனவாகும்.

சொல் பாகுபாடு

"இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர்வினை
எனஇரண் டாகும் இடைஉரி அடுத்து
நான்கு மாம், திசை வடசொல், அணு காவழி" - நன்னூல் 270


சொல் இலக்கணம் இரண்டு வகைப்படும்.

சொல்களை இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.

சொற்களின் இலக்கண வகை:

1 பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.

சொற்களின் இலக்கிய வகைகள்:

1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.

எனவே, (மேலே) குறித்த சொல், 1. பெயர் இயற்சொல், 2. பெயர்த் திரிசொல், 3.வினை இயற்சொல். 4. வினைத் திரிசொல், 5. இடை இயற்சொல், 6. இடைத் திரிசொல், 7. உரி இயற்சொல், 8. உரித் திரிசொல் என எட்டு வகைப்படும். அவற்றுடன் 9. திசைச் சொல்லும், 10. வடசொல்லும் சேர்ந்தால் சொல் பத்து வகைப்படும் என அறிக.

எழுவாய் 

ஒரு செயலைச் செய்கின்ற பொருள் எழுவாய் எனப்படும். 

  • ஒரு சொற்றொடரில் யார்? எவன்? எது? எவள்? எவை? என்னும் வினாவிற்கு விடையாக தொடரில் வருபவை எழுவாய். 
  • தொடரின் முதலில் வரும் பெயர்ச்சொல்

பயனிலை

முதலில் வரும் ஒரு சொற்றொடரின் பொருளை முடித்து நிற்கும் சொல் பயனிலை எனப்படும். 

  • தொடரின் இறுதியில் வரும் வினைச்சொல்

செயப்படுபொருள் 

எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளே செயப்படுபொருள் ஆகும். 

ஒரு தொடரில் எதை? அல்லது எவற்றை? என்னும் வினாவிற்கு விடையாக பொருள் அமைவது செயப்படுபொருள் ஆகும். 

  • எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் வரும். 

எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் எடுத்துக்காட்டு 

வள்ளி பாடம் படித்தாள். 

இதில், 

  • வள்ளி - எழுவாய் 
  • படித்தாள் - பயனிலை
  • பாடம் - செயப்படு பொருள்.  

சொல் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

சொல் இலக்கணம் இரண்டு வகைப்படும்.

  1. இலக்கண வகைச் சொற்கள்
    • பெயர்ச்சொல்
      • பொருட்பெயர்
      • இடப்பெயர்
      • காலப்பெயர்
      • சினைப்பெயர்
      • குணப்பெயர் அல்லது பண்புப்பெயர்
      • தொழிற்பெயர்
        • விகுதி பெற்ற தொழிற்பெயர்,
        • எதிர்மறைத் தொழிற்பெயர்
        • முதனிலைத் தொழிற்பெயர்,
        • முதனிலை திரிந்த தொழிற்பெயர்
      • ஆகுப்பெயர்
        • பொருளாகுபெயர்
        • இடவாகுபெயர்
        • காலவாகு பெயர்
        • சினையாகு பெயர்
        • பண்பாகுபெயர்
        • தொழிலாகு பெயர்
        • என்ணலளவை ஆகுபெயர்
        • எடுத்தலளவை ஆகுபெயர்
        • முகத்தளவை ஆகுபெயர்
        • நீட்டலளவை ஆகுபெயர்
        • சொல்லாகு பெயர்
        • தானியாகு பெயர்
        • கருவியாகு பெயர்
        • கருத்தாவாகு பெயர்
        • உவமையாகுப்பெயர்
    • வினைச்சொல்
      • வினைமுற்று
        • தெரிநிலை வினைமுற்று
        • குறிப்பு வினைமுற்று
      • எச்சம்
        • பெயரெச்சம்
          • தெரிநிலைப் பெயரெச்சம்
          • குறிப்புப் பெயரெச்சம்
        • வினையெச்சம்
          • தெரிநிலை வினையெச்சம்
          • குறிப்பு வினையெச்சம்
        • முற்றெச்சம்
      • சிறப்பு வினை
        • தன்வினை 
        • பிறவினை
        • உடன்பாட்டுவினை
        • எதிர்மறை வினை
        • செய்வினை
        • செயப்பாட்டுவினை
      • பொது வினை
      • முற்றுவினை
        • தெரிநிலை முற்றுவினை
        • குறிப்பு முற்றுவினை
    • இடைச்சொல்
    • உரிச்சொல்
  2. இலக்கிய வகைச் சொற்கள்
  3. வழக்கு வகைகள்
  4. சொற்றொடர்(Phrase) அல்லது தொடர்
  5. இரட்டைக்கிளவி ( இரட்டைச்சொல் ), அடுக்குத்தொடர் 
  6. வேற்றுமை 

தொடர்புடையவை

சொல் இலக்கணம்

சொல் இலக்கணம் tnpsc

சொல் இலக்கணம் என்றால் என்ன

எழுத்து சொல் இலக்கணம் பத்தாம் வகுப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad