நான்கு வகை தொழிற்பெயர் , வினையாலணையும் பெயர்

ஒரு பெயர் தனிச்சொல்லாக வரும் பொழுது சொற்பொருளைக் குறிக்கும்.பெயரையும், இடத்தையும் குறித்து வந்ததால் அது பெயர்ச்சொல் ஆகும்.பெயர்ச்சொல் ஆனது பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என ஆறுவகைப்படும்.

பெயர்ச்சொல் வகைகளில் ஒன்றான தொழிற்பெயர் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகள நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம் பெயர்ச்சொல்

பாடத்தலைப்புகள்(toc)

தொழிற்பெயர் என்றால் என்ன?

ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.

தொழிற்பெயர் எடுத்துக்காட்டு

  • படித்தல்,
  • ஆடல்,
  • நடிப்பு,
  • எழுதுதல்,
  • பொறுத்தல்
  • ஒழுகுதல், நோன்றல்

கீழ் உள்ள தொடரில் உள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், தொழிற்பெயர்களை அறிவோம்.

  • மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான்.
மாதவி, கோவலன் பெயர்ச்சொற்கள்
கண்டு, மகிழ்ந்தான் வினைச்சொற்கள்
ஆடல் தொழிற் பெயர்

தொழிற்பெயர் எந்த இடத்தில் வரும்?

  • படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
  • உழவர் செய்யும் தொழில் உழுதல்
  • தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்.
  • இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன.

தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?

தொழிற்பெயர் வகைகள்,

  1. விகுதி பெற்ற தொழிற்பெயர்,
  2. எதிர்மறைத் தொழிற்பெயர்
  3. முதனிலைத் தொழிற்பெயர்,
  4. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

என நான்கு வகைப்படுத்துவர்.


TNPSC- General Tamil - Study Material


விகுதி பெற்ற தொழிற்பெயர் - விகுதிகள்

வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.

ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.

  • நட என்பது வினையடி நடை, நடத்தை, நடத்தல் என்னும் விகுதிகளையும் ஏற்கும்.

விகுதி பெற்ற தொழிற்பெயர் எடுத்துக்காட்டு

வினையடி விகுதி

தொழிற்பெயர்

நட தல்
நடத்தல்
வாழ்

கை

வாழ்க்கை
ஆள் அல் ஆளல்

இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக

மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன் ; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.

  • அழைக்கும் - அழைத்தல்
  • ஏறுவேன் - ஏறுதல்
  • அமர்வேன் - அமர்தல்
  • பார்ப்பேன் - பார்தல்
  • எய்தும் - எய்தல்

வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

  • காண் -  காட்சி, காணுதல், காணல், காணாமை 
  • சிரி - சிரிப்பு, சிரித்தல்
  • படி - படித்தல், படிப்பு, படிக்காமை
  • தடு - தடுத்தல், தடுப்பு, தடுக்காமை

கீழ்காணும் கூற்றில் அடி கோடிட்ட எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

  • அறிந்தது - அறிதல்
  • அறியாதது - அறியாதல்
  •  புரிந்தது - புரிதல்
  • புரியாதது - புரியாதல்
  • தெரிந்தது - தெரிதல்
  • தெரியாதது - தெரியாதல்
  • பிறந்தது - பிறத்தல்
  • பிறவாதது - பிறவாதல்

தொழிற்பெயர் விகுதிகள் எடுத்துக்காட்டு

இவ்வாறு தொழிற்பெயரைக் குறிக்க வரும் விகுதிகள்: தல், அல், அம், ஐ, கை, வை, கு,பு, உ,தி,சி,வி,உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை,து, ஆல் என்பன.

விகுதி பெற்ற தொழிற்பெயர் தொழிற்பெயர் விகுதிகள்
தருதல் , பெறுதல்
தல்
கூறல் , கோடல் அல்
ஆட்டம்
அம்
விலை , கொலை
வருகை , வாழ்க்கை கை
பார்வை , பறவை
வை
போக்கு
கு
நட்பு , புளிப்பு பு
மறைவு , வரவு

மறதி
தி
உணர்ச்சி
சி
புலவி
வி
செய்யுள் உள்
சாக்காடு காடு
கோட்பாடு பாடு
தோற்றரவு அரவு
கேளானை ஆனை
நடவாமை மை
பாய்த்து து
தாழால் ஆல்

எதிர்மறைத் தொழிற்பெயர்

எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.

எதிர்மறைத் தொழிற்பெயர் எடுத்துக்காட்டு

  • நடவாமை,
  • கொல்லாமை

முதனிலைத் தொழிற்பெயர்

விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழிலை உணர்த்துவதற்கு முதனிலைத் தொழிற்பெயர் எனப் பெயர்.

முதனிலைத் தொழிற்பெயர் எடுத்துக்காட்டு

  • தட்டு,
  • உரை,
  • அடி

இச்சொற்கள் முறையே, தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று தொழிற்பெயர்களாகின்றன.

  • கபிலனுக்கு அடி விழுந்தது.

இத்தொடரில் அடி, என்பது விகுதிபெறாமல், பகுதியாய் நின்று தொழிலை உணர்த்துகிறது.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

விகுதி பெறாமல் தொழிற்பெயரின், முதனிலையாகிய பகுதி திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.

முதனிலை திரிந்த தொழிற்பெயர் எடுத்துக்காட்டு

  • பேறு

தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் வேறுபாடு

தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர்
கெடுதல் கெடு கேடு
சுடுதல்

சுடு

சூடு

  • அறிவறிந்த மக்கட் பேறு.
  • அவனுக்கு என்ன கேடு?

இங்குப் 'பெறு', 'கெடு' என்னும் முதனிலைகள் 'பேறு' 'கேடு' எனத் திரிந்து 'பெறுதல்', 'கெடுதல்' என்னும் பொருளை உணர்த்துகின்றன. 

இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

  • கட்டு - முதனிலைத் தொழிற்பெயர் (கட்டுதல்)
  • சொட்டு - முதனிலைத் தொழிற்பெயர் (சொட்டுதல்)
  • வழிபாடு - விகுதி பெற்ற தொழிற்பெயர்
  • கேடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர் (கெடுதல்)
  • கோறல் - தொழிற்பெயர்
  • சொல்லாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்

வினையாலணையும் பெயர்

ஒரு வினைமுற்று, வினையைக் குறிக்காமல் வினைசெய்தவரைக் குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும். இது வினைக்குரிய காலம் காட்டும்; பெயர்க்குரிய வேற்றுமை உருபுகளையும் பெற்று வரும். 

வினையாலணையும் பெயர் என்றால் என்ன?

வினையாலணையும் பெயர் எடுத்துக்காட்டு

முருகன் பரிசு பெற்றான் இத்தொடரிலுள்ள பெற்றான் என்பது, முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்துள்ளது.
பரிசு பெற்றானைப் பாராட்டினர்

இத்தொடரில் உள்ள 'பெற்றானை' என்பது முருகனைக் குறிக்கும் பெயராக வந்துள்ளது


இவ்விரு தொடரிலும், பெற்றான் என்னும் வினைச்சொல் வந்துள்ளது.

பெற்றானை இறந்தகாலம்
பெறுகின்றானை நிகழ்காலம்
பெறுவானை
எதிர்காலம்

பெற்றான் + ஐ என, இரண்டாம் வேற்றுமை உருபான ஐ ஏற்று வந்துள்ளமை காண்க.

ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.
  • அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.

தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடு

தொழிற்பெயர் வினையாலணையும் பெயர்
வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்
காலம் காட்டாது காலம் காட்டும்
படர்க்கைக்கே உரியது மூவிடத்திற்கும் உரியது
எ.கா. பாடுதல், படித்தல் எ.கா. பாடியவள், படித்தவர்

"கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது"  - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே

அ) பாடிய; கேட்டவர்

ஆ) பாடல்; பாடிய

இ) கேட்டவர்; பாடிய

ஈ) பாடல்: கேட்டவர்

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

விடை - கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடை - ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

விடை - நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார். எ.கா. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

விடை - பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

நினைவுகூர்க:

விகுதி பெற்ற தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர்
வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
  • முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவதுமுதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
  • விகுதி பெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.
முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா.) நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை

(எ.கா.) வானில் இடி இடித்தது, சோறு கொதி வந்தது

(எ.கா.) தமிழ் படிக்கும் பேறு பெற்றேன், உணவின் சூடு குறையவில்லை.
நட, உண்,வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.
  • இடி,கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும்.
  • இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.
இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள். பெறு,சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு. பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad