மூன்று வகை காலம் - தமிழ் இலக்கணம்

தமிழில் விகுதியைக் கொண்டு நாம் காலம்திணை, பால், எண், இடம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.

காலம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

திணை பால் எண் இடம் 

பாடத்தலைப்புகள்(toc)

காலம் என்றால் என்ன?

இலக்கணத்தில் காலம் என்பது, ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகிறது என்பதைக் காட்டும் இலக்கணக் கூறு ஆகும். ஒரு செயல் பேசப்படும் நேரத்துக்கு முன்னரா, அதே நேரத்திலா அல்லது பின்னரா என்பதைக் குறித்துக் காட்டுவதே காலம்.

தமிழ் இலக்கணத்தில் காலம் எத்தனை வகைப்படும்?

காலம் வகைகள் - மூன்று காலம்

  1. இறந்தகாலம்,
  2. நிகழ்காலம்,
  3. எதிர்காலம்

என மூன்று வகைப்படும்.


இறந்தகாலம்நிகழ்காலம்

எதிர்காலம்

பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பதுஅந்நேரத்தில் நடந்துகொண்டு இருப்பவற்றைக் குறிப்பதுபின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது
செய்தான்செய்கின்றான்செய்வான்
செய் + த் + ஆன் ----> செய்தான்செய் + கின்று + ஆன் ----> செய்கின்றான்செய் + வ் + ஆன் ----> செய்வான்
இடைநிலைகள் - "த்" (த், ட், ற், த்த்), "ந்த்" (ந்த், ன்ற், ண்ட்), "இன்" (ய், ன்)இடைநிலைகள்- "கின்று", "கிறு"இடைநிலைகள் - "வ்", "ப்ப்", "ப்"

   இந்த முக்காலப் பாகுபாடு எல்லா மொழிகளிலும் உண்டு.
எல்லா மொழிகளிலும் வினைச்சொற்கள் (வந்தான், சென்றான்) காலம் காட்டுவனவாக அமைந்துள்ளன.

காலம் -     இறந்தகாலம்,    நிகழ்காலம்,    எதிர்காலம்

காலங்காட்டும் இடைநிலைகள்

தமிழில் காலம் காட்டுவதற்காகச் சொற்களில் பல்வேறு இடைநிலைகள் பயன்படுகின்றன.

காலம் எடுத்துக்காட்டு

  • வந்தனன் — வா(வ) +த்(ந்) + த் + அன் + அன்
  • த் - இறந்தகால இடைநிலை

நிகழ்கால இடைநிலைகள்

கிறு,கின்று, ஆநின்று என்பன நிகழ்கால இடைநிலைகள்.

உண்கிறான் கிறு உண் + கிறு + ஆன்
உண்கின்றான் கின்று உண் + கின்று + ஆன்
உண்ணாநின்றான் ஆநின்று உண் + ஆநின்று + ஆன்

இறந்தகால இடைநிலைகள்

த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகள்.

பார்த்தான் த்
பார் + த் + த் + ஆன்
உண்டான் ட் உண் + ட் + ஆன்
வென்றான் ற் வெல் (ன்) +ற்+ ஆன்
பாடினான் இன் பாடு +இன்+ஆன்

எதிர்கால இடைநிலைகள்

ப், வ் என்பன எதிர்கால இடைநிலைகள்.

உண்பான் ப் உண் + ப் + ஆன்
வருவான் வ் வா (வரு)+வ்+ஆன்

எதிர்மறை இடைநிலைகள்

இல், அல், ஆ முதலியன எதிர்மறை இடைநிலைகள்.

உண்டிலன் இல் உண் + ட் + இல் + அன்
காணலன் அல் காண் + அல் + அன்
பாரான்
பார் + + ஆன்

  • தொல்காப்பியம், இடைநிலை காலம் காட்டுவதனால் காலம் காட்டும் இடைநிலை என்று குறிப்பிடுகிறது.
  • நன்னூல் இதனைப் பகுபத உறுப்புக்களில் ஒன்றாகக் காட்டுகிறது.

வடமொழியாகிய சமஸ்கிருதத்தில், "பவதி" என்னும் வினைமுற்று, இருக்கின்றான், இருக்கின்றன, இருக்கின்றது எனப் பொருள்படும். தமிழில் உள்ளதைப் போல், "பவதி" என்னும் சொல்லின் ஈற்றைக் கொன்டு பாலைக் காண முடியாது. ஆனால் படர்க்கை ஒருமையைக் குறிக்கும்.

ஸ பவதி அவன் இருக்கின்றான்.
ஸா பவதி அவள் இருக்கின்றாள்.
தத் பவதி அது இருக்கின்றது.

ஆங்கிலத்திலும் இப்படியே வருகின்றான், வருகின்றாள், வருகின்றது என்னும் வினைமுற்றுக்களுக்கு Come என்ற ஒரு சொல்,

He Comes
She Comes
It Comes

எனப் பெயர்ச்சொல்லைச் சேர்த்தால் தான் பாலைக் குறிக்கும்.Comes என்ற சொல்லில், தமிழில் உள்ளதைப் போல் 'பால்' இல்லை.

மலையாளத்திலும் “வருன்னு” என்ற வினைதான் உண்டு. இதில் எண், இடம், பால் ஆகியவற்றைக் காணமுடியாது.

அவன் வருன்னு
அவள் வருன்னு
அது வருன்னு

ஆங்கிலத்தைப் போன்றே பெயர்ச்சொல்லைச் சேர்த்தால்தான் பாலைக் காண முடியும்.

உண்டு,இல்லை 

உண்டு,இல்லை என்னும் இரு சொற்களையும் நாம் மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். உண்டு, இல்லை என முடியும் சொற்களில் காலம் வெளிப்படையாக இல்லை. குறிப்பாகத்தான் நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். 
  • பாத்திமா தேர்வை நன்றாக எழுதவில்லை. (இறந்தகாலம்
  • அண்ணன் வந்ததும் உனக்குப் பரிசு உண்டு. (எதிர்காலம்

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

காலப் பிழையும் திருத்தமும்

பிழை

அ. நான் நேற்று திரைப்படத்திற்குச் செல்கிறேன்.

ஆ. அவன் நாளைக்கு வந்தான்.

இ. இந்தப் புத்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் வாங்குவேன்.

ஈ. நாளைக்கு நான் ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன்.

உ. நேற்று பால் பொங்குகிறது.

இந்தச் சொற்றொடர்களைப் படித்ததும், இவற்றில் உள்ள பிழைகள் என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்,

வினைச்சொற்களில் காலம் பிழையாக வந்திருக்கிறது.

எப்படி இருந்தால் முறையாக இருக்கும். 

திருத்தம் 

அ. நான் நேற்று திரைப்படத்திற்குச் சென்றேன்

ஆ. அவன் நாளைக்கு வருவான் 

இ. இந்தப் புத்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் வாங்கினேன்

ஈ. நாளைக்கு நான் ஊருக்குப்போய்ச் சேர்வேன்.

உ. நேற்று பால் பொங்கியது.

வேர்சொல்லைக் கொண்டு காலத்தைக் குறிக்கும் உரிய வினைச்சொல்லை எழுதுக 


வேர்சொல்லைக் கொண்டு காலத்தைக் குறிக்கும் உரிய வினைச்சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.

'பார்' என்னும் வேர்சொல்லைக் கொண்டு வினைச்சொல்லை காலத்திற்கு ஏற்றபடி பின்வருமாறு மாறுகிறது.
  • பார்த்தேன் ( இறந்தகாலம் )
  • பார்க்கிறேன் (நிகழ்காலம் )
  • பார்ப்பேன் (எதிர்காலம்)

பின்வரும் சொற்றொடர்களுக்கு எதிரே அவை எந்தக் காலத்தைக் குறிக்கின்றன என எழுதுக.

பாத்திமா நன்றாகத் தேர்வு எழுதினாள் - இறந்தகாலம்

சிங்காரம் கடைக்குப் போக மறுத்தான் - இறந்தகாலம்

பக்கத்தில் இருப்பவனைப் பார்த்துப் பார்த்து எழுதுகிறான்  - நிகழ்காலம்

ஆசிரியர் வந்ததும் கேள்வி கேட்பார் - எதிர்காலம்

அடைப்புக் குறிக்குள் இருக்கும்  வினைச்சொல்லைக் காலத்துக்கு ஏற்றபடி மாற்றி எழுதுக.


(எ.கா.) அன்று நடந்த பேச்சுப்போட்டியில் நான் ஒரு மணிநேரம் பேசினேன். (பேசு)

1. நேற்று இரவு இந்தப் பாடத்தை நான் படித்தேன்.(படி)

2. உன் வீட்டு விருந்துக்குக் கட்டாயம் நான் வருவேன். (வா)

3. அப்பா வந்ததும் திட்டுவர்.(திட்டு)

4. இப்போது நான் தமிழ் படிப்பேன்.(படி)

நினைவுகூர்க

தமிழில், வருகின்றேன், வருகின்றாய், வருகின்றான்,வருகின்றது, வருகின்றன என்ற வினைச் சொற்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்களையும் ஒருமை, பன்மை எண்ணையும் காணமுடியும். இந்தச் சொற்களுக்கு முன்னால் நான், நீ, அவன், அது, அவை என்ற சொற்களை இட வேண்டியது இல்லை.

நான்வருகின்றேன்
அவன்வருகின்றான்
அதுவருகின்றது
அவைவருகின்றன
நீவருகின்றாய்

வினைமுற்றுச் சொல்லில் உள்ள விகுதியைக் கொண்டே பால், எண், திணை, இடம், காலம் எல்லாவற்றையும் காணமுடியும்.

காலம், இடம், பால், திணை, எண் வேறுபாடு

வினைசொல் பால் எண் திணை இடம் காலம்
வருகின்றான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
வருகின்றாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
வருகின்றது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை நிகழ்காலம்
வந்தான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
வந்தாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
வந்தது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்
வருகின்றார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
வந்தார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
வருவார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை எதிர்காலம்
வந்தேன் ஆண் ஒருமை உயர்திணை தன்மை இறந்தகாலம்
வருவோம் பலர்பால் பன்மை உயர்திணை தன்மை எதிர்காலம்
வந்தன பலவின்பால் பன்மை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்

தொடர்புடையவை

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad