உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்றுநோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான். மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.
தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்பாடத்தலைப்புகள்(toc)
தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
இலக்கண வகைகள்
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
மொழிமுதல் காரண மாம்அணுத் திரள்ஒலி
எழுத்து முதல்சார்பு எனஇரு வகைத்தே
- நூற்பா 58(code-box)
எழுத்து எத்தனை வகைப்படும்?
எழுத்து வகைகள்,
தமிழில் எழுத்தானது இரண்டு வகைப்படும்.
அவை,
- முதலெழுத்துக்கள்
- சார்பு எழுத்துக்கள்
முதலெழுத்துக்கள் | 30 |
சார்பு எழுத்துக்கள் | 217 |
மொத்தம் தமிழ் எழுத்துக்கள் எண்ணிக்கை(Tamil total letters) | 247 |
முதலெழுத்து என்றால் என்ன?
ஒரு மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் எழுத்துக்கள் முதலெழுத்து (30 எழுத்துக்கள்) எனப்படும்.
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" - நூற்பா59(code-box)
முதலெழுத்து எத்தனை வகைப்படும்?
ஒரு மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் முதலெழுத்து வகைகள்,
என இரண்டு வகைப்படும்.
உயிரெழுத்து | 12 எழுத்துக்கள் |
மெய்யெழுத்து | 18 எழுத்துக்கள் |
மொத்தம் முதலெழுத்துக்கள் எண்ணிக்கை | 30 எழுத்துக்கள் |
மாத்திரை
ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
குறில், நெடில்
குறில் எழுத்துகள்- அ, இ, உ, எ, ஒ, - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன. ஒரு மாத்திரை அளவு ஒலிப்பன.
நெடில் எழுத்துகள் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழும் நீண்டு ஒலிக்கின்றன. இரு மாத்திரை அளவு ஒலிப்பன.
தமிழ் உயிர் எழுத்துகள் - Tamil Vowels
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன
- வாயைத் திறத்தல், உதடுகளை விரிக்க, உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னுரண்டு உயிர் எழுத்துக்களும் பிறக்கின்றன.
- பிற ஒலிகளின் துணை இல்லாமல் தானே இயங்கவல்லது; மற்ற மெய்யொலிகளுடன் சேர்ந்து இயக்கவல்லது.
- நம்முடைய உயிரைப் போன்று தானே இயங்கவும், இயக்கவும் செய்யும் காரணத்தினால் இதற்கு உயிரெழுத்து என்று பெயர்.
உயிரெழுத்துக்கள் | அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ | 12 எழுத்துக்கள் |
குறில்(உயிரெழுத்து) |
அ, இ, உ, எ, ஒ | 5 எழுத்துக்கள் |
நெடில்(உயிரெழுத்து) | ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ | 7 எழுத்துக்கள் |
- குறில் எழுத்துகளைக் குறிக்க 'கரம்' (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
- நெடில் எழுத்துக்களைக் குறிக்க 'கான்' (எ.கா.) ஐகான், ஔகான்
- குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க 'காரம்' (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம்
தமிழ் மெய்யெழுத்து - Tamil Consonant
தன்னால் இயங்க முடியாதது, பிற உயிர் ஒலிகளின் துணை கொண்டே இயங்க வல்லது. மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும்.
- மெய் எழுத்துக்களை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது.
- நம்முடைய உடம்பினைப் போன்றே தானே இயங்கவும், இயக்கவும் இயலாத காரணத்தினால் இதற்கு மெய்யெழுத்து என்று கூறுவர்
- உயிர், உடம்பினைச் செயல்படுத்துவது போன்று, உயிர் எழுத்துக்களே இவ்வெழுத்துக்களுடன் சேர்ந்து செயல்புரிய வேண்டும்.
- மெய்யெழுத்துக்களில் வல்லொலியாக ஒலிப்பவை வல்லினம் ஆகும்.
- மெல்லொலியாக ஒலிப்பவை மெல்லினம் ஆகும்.
- இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலியுடன் ஒலிப்பவை இடையினம் ஆகும்.
மெய்யெழுத்துக்கள் | க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் | 18 எழுத்துக்கள் |
வல்லினம் |
க், ச், ட், த், ப், ற் | 6 எழுத்துக்கள் |
மெல்லினம் | ங், ஞ், ண், ந், ம், ன் | 6 எழுத்துக்கள் |
இடையினம் | ய், ர், ல், வ், ழ், ள் | 6 எழுத்துக்கள் |
சார்பு எழுத்துக்கள் என்றால் என்ன?
சார்பு எழுத்துக்கள் என்றால் முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ஆகும்.
உயிர்மெய், முற்றாய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்
- நன்னூல் 60 (code-box)
சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
சார்பு எழுத்துக்கள் வகைகள் மொத்தம் - பத்து
அவையாவன,
உயிர்மெய்
மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துக்களும் உயிர்மெய் எழுத்துக்கள்ஆகும்.
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது.
- மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
ஆகவே உயிர்மெய் எழுத்துக்களையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து ஃ
தமிழ்மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
அஃகேனம் என்பதன் பொருள்
ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா) அஃகேனம்
ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள்
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
- மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
- நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
- தனித்து இயங்காது.
தனிநிலை என்ற சொல்
- உயிரோடும் மெய்யோடும் சேராமல் தனித்தே இருப்பதால் ஆய்த எழுத்தைக், தனிநிலை எனவும் கூறுவர்.
- ஆய்தஎழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும். அவ்வெழுத்தின் முன் குறிலும், அதன்பின் வல்லின உயிர்மெய்க் குறிலும் வரும்.
உயிர்மெய் | 216 |
ஆய்த எழுத்து |
1 |
மொத்தம் சார்பு எழுத்துக்கள் எண்ணிக்கை | 217 |
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை - Table of Tamil characters - Tamil Letters Chart
உயிர்→ மெய் ↓ |
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் - எலி
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச்சொல் - ஈ
3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் - எஃகு
குறுவினா
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
2. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
- மெய்யெழுத்துக்களில் வல்லொலியாக ஒலிப்பவை வல்லினம் ஆகும்.
- மெல்லொலியாக ஒலிப்பவை மெல்லினம் ஆகும்.
- இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலியுடன் ஒலிப்பவை இடையினம் ஆகும்.
3. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
- உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
- உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
- உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
- உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை
- ஆய்த எழுத்து 'ஃ' மாத்திரை அளவு - அரை மாத்திரை
- மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் மாத்திரை அளவு - அரை மாத்திரை
தொடர்புடையவை - எழுத்துகள்
-
தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை எத்தனை?
- சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
- இன எழுத்துகள் இல்லாத தமிழ் எழுத்துக்கள் எவை?
-
சுட்டெழுத்து எடுத்துக்காட்டு?
- அகவினா, புறவினா வேறுபாடு எழுதுக?
- மொழி முதல், இறுதி, இடை எழுத்துகள் குறித்து எழுதுக?
- மயங்கொலி எழுத்துகள் எத்தனை?
Please share your valuable comments