அ, இ, உ என்னும் மூன்று சுட்டெழுத்து

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எழுத்துகளின் பெயர்களில் ஒன்றான சுட்டெழுத்து பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

சுட்டெழுத்து பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் பெயர்

பாடத்தலைப்புகள்(toc)

சுட்டெழுத்து என்றால் என்ன?

"யார் இதனை உடைத்தது?"

"இவன்"

இந்த உரையாடல் நம் வீட்டுக்குள் அடிக்கடி நடக்கிறது. அவன், அவள், அவர், இவன், இவள், இவர், அது, இது, அவை, இவை என்னும் சொற்கள், குறிப்பிட்ட மனிதரையோ பொருளையோ சுட்டிக்காட்ட உதவுகின்றன.

ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர். 

சுட்டெழுத்து, மொழிக்கு முதலிலே நின்று ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுவதற்கு வரும்.

சுட்டெழுத்து மொத்தம் எத்தனை?

அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டெழுத்து.

அ, இ, உ என்னும் மூன்று சுட்டெழுத்துகளுக்கும் தனித்தனி பொருள் உண்டு.

  • 'அ' கரம் சேய்மையில் உள்ள பொருளையும், 
  • 'இ' கரம் அண்மையில் உள்ள பொருளையும்,
  • ஆனால் 'உ' கரம் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள பொருளையும் சுட்டும்.

அவன், இவன், உவள் சுட்டுப்பெயர்கள்.

  • பழங்காலத்தில் 'உ' என்பதும் சுட்டெழுத்து தான்.

'உ' எழுத்து, பல பணிகளைச் செய்தது. இப்பொழுது, சுட்டிச்சொல்ல நாம் 'உ' எழுத்தைப் பயன்படுத்துவது இல்லை.

  • உதுக்காண் என்றால், 'சற்றுத் தொலைவில் பார்' என்பது பொருள்.
  • உப்பக்கம் என்றால், 'முதுகுப்பக்கம்' என்பது பொருள்.
  • உம்பர் என்றால், 'மேலே' என்பது பொருள்.

அவன், இவன், அது, இது எனச் சுட்டுவது ஒருமுறை.

  • அப்பையன்
  • இப்பெண்
  • இந்த இவ்வீடு

என்றும் சுட்டுவோம்.

அவன், அவள் என்னும் சுட்டுச்சொற்கள் ஆணா, பெண்ணா என்பதனையும் சுட்டிச் சொல்லிவிடுகின்றன.

அ, இ சுட்டெழுத்துகள் தனியே நின்று சுட்டும்போது, ஆண் பெண் அனைவரையும் பொதுவாகச் சுட்டுகின்றன. அது, இது, அந்த, இந்த, அங்கு, இங்கு என்னும் சுட்டுச்சொற்களே இன்று பெருவழக்காகிவிட்டன.

  • அந்தப்பக்கம்
  • இந்தவீடு

அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ,உ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.ஆனால் இன்று 'உ' என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.

சுட்டெழுத்து சான்று

அண்மைச்சுட்டு எழுத்து - இ

இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு - இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே இஃது அண்மைச்சுட்டு எனப்படும்.

அண்மைச்சுட்டு எழுத்து இ ஆகும்.

சேய்மைச்சுட்டு எழுத்து - அ

அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் - இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே இஃது சேய்மைச்சுட்டு எனப்படும்.

சேய்மைச்சுட்டு எழுத்து அ ஆகும்.

உ என்னும் சுட்டெழுத்து

இச்சுட்டெழுத்துகளுள் அ, இ என்னும் இரண்டுமே தற்கால வழக்கில் உள்ளன. உ என்னும் சுட்டெழுத்து மறைந்துவிட்டது.தற்பொழுது மறைந்துவிட்ட போதிலும் சங்க காலத்தில் இது வழக்கில் இருந்துள்ளது.

அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ' என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(எ.கா.) உது, உவன்

சுட்டெழுத்து

அ,இ, உ என்பன சுட்டெழுத்து
அண்மைச்சுட்டு எழுத்து இ சேய்மைச்சுட்டு எழுத்து - அ உ என்னும் சுட்டெழுத்து
நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ' என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(எ.கா.) இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு (எ.கா.) அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் (எ.கா.) உது, உவன்

சுட்டெழுத்து சொற்கள்

  • இவன், 
  • இவர், 
  • இது, 
  • இவை, 
  • இம்மரம், 
  • இவ்வீடு
  • அவள், 
  • அவர், 
  • அது, 
  • அவை, 
  • அவ்வீடு, 
  • அம்மரம்
  • உது, 
  • உவன்

சுட்டெழுத்து எத்தனை வகைபடும்? 

சுட்டெழுத்து வகைகள் 

  1. அகச்சுட்டு,
  2. புறச்சுட்டு
என இரண்டு வகைப்படும்.

 அகச்சுட்டு புறச்சுட்டு வேறுபாடு

அகச்சுட்டு புறச்சுட்டு
சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும். சொற்களுக்குப் புறத்தே இச்சுட்டு நிற்குமெனின், அவற்றிற்குப் புறச்சுட்டு எனப் பெயர்.
இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
அகச்சுட்டு சான்று

அவன், இவன், உவன்

புறச்சுட்டு சான்று

அப்பையன் (அ+பையன்), இப்பையன், உப்பையன்

சுட்டுத்திரிபு

அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம்.

அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன.

இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும். (எ.கா.) இப்பள்ளி - இந்தப்பள்ளி.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

1. என் வீடு அங்கே உள்ளது. (அது / அங்கே)

 2. தம்பி இங்கே வா.(இவர் / இங்கே)

3. நீர் எங்கே  தேங்கி இருக்கிறது?(அது / எங்கே)

4. யார் அவர். (அவர் / யாது)

5. உன் வீடு எங்கே (எங்கே / என்ன)

வினாக்களுக்குச் சுட்டுச்சொற்கள் இட்டு, விடை எழுதுக. 

1. எது உன் வீடு ?

இது என் வீடு.

2. யார் உன் அண்ணன்?

அது என் அண்ணன். 

3. உன் பள்ளிக்கூடம் எங்கு உள்ளது ?

என் பள்ளிக்கூடம் அந்தப் பக்கம் உள்ளது.

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

1. மூன்று சுட்டெழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டெழுத்து எது ?

2. சுட்டெழுத்து யாவை? 

அ,இ, உ

தொடர்புடையவை

சுட்டெழுத்துக்கள்

சுட்டெழுத்துக்கள் வினா எழுத்துக்கள்

ஆறாம் வகுப்பு

சுட்டெழுத்துக்கள் வினா எழுத்துக்கள்

சுட்டெழுத்துக்கள் என்றால் என்ன

சுட்டெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

சுட்டெழுத்து என்றால் என்ன

சுட்டெழுத்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad