கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன. தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர். பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர். அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும். முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன. இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவரைப் பற்றி அறிந்து கொண்டோம்.
பாடத்தலைப்புகள்(toc)
காமராசர்
பிறப்பு
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார். இவர்தம் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர்.
கல்விப் புரட்சிக்கு வித்திட்டு, கல்விக்கண் திறந்தவர் காமராசர்.
காமராசரின் சிறப்புப் பெயர்கள்
- பெருந்தலைவர்
- படிக்காத மேதை
- கர்மவீரர்
- கறுப்புக் காந்தி
- ஏழைப்பங்காளர்
- தலைவர்களை உருவாக்குபவர்
- தென்னாட்டு காந்தி
காமராசரின் கல்விப்பணிகள்
- காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
- மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
- மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
- பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
- பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
- தமிழ்நாட்டில் பல கிளைநூலகங்களைத் தொடங்கினார்.
- மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
இவ்வாறு கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர் காமராசரே ஆவார்.
அவர்தான் கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் காமராசர் ஆவார்.(alert-success)
காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகள்
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966)
- நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
பெருந்தலைவரின் சாதனைகள்
1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
காமராசர் பற்றிய சில நிகழ்வுகள்
- ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக்கூடம் செல்ல வழி செய்தவர் யார் தெரியுமா?
- குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நீண்ட தூரம் நடக்கக்கூடாது என்று எண்ணியவர் யார் தெரியுமா?
- பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார் தெரியுமா?
- கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் யார் தெரியுமா?
நிகழ்வு - 1
சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக நான்கு சக்கர வாகனம் ஒன்று அங்கே வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் கீழே இறங்கினார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு, அவர்களோடு உரையாடினார்.
"என்னடா தம்பிகளா! பள்ளிக்கூடம் போகாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருக்கீங்க? ஏன் பள்ளிக்கூடம் விடுமுறையா?' என்று அவர் கேட்டார்.
'பள்ளிக்கூடமா? அதெல்லாம் எங்க ஊரில் கிடையாது" என்றனர் சிறுவர்கள். "அப்படியா? உங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தா நீங்கள் எல்லாரும் படிப்பீங்களா?" என்று கேட்டார் அவர்.
"ஓ! படிப்போமே! " என்றனர் சிறுவர்கள்.
ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் அவர்.
நிகழ்வு - 2
பள்ளி விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றார் அவர். அப்போது மாணவர்களிடம் படிப்பறிவு இருந்தால்தான் நாடு முன்னேற்றம் அடையும். எனவேதான் நாடு முழுக்க ஐம்பதாயிரம் பள்ளிகளைத் திறக்க முடிவு பண்ணியிருக்கோம்.
குழந்தைங்க நீங்க எவ்வளவு தூரம் நடந்து போவீங்க? நீண்ட தூரம் நடந்தால் களைச்சுப்போயிடுவீங்க. அப்புறம் எப்படிப் படிக்க முடியும்?
அதனால் ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி, மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்கணும்னு திட்டம்" என்று பேசினார்.
நிகழ்வு - 3
பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தேசியக் கொடி ஏற்றுமாறு அழைக்க அவரும் எழுந்தார். அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது ஒரு மாணவன் மயங்கிக் கீழே விழுந்தான். அனைவரும் பதற்றம் அடைந்தனர். தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினர்.
மயக்கம் தெளிந்த சிறுவனிடம் அவர் "காலையில் சாப்பிட்டாயா?" என்று கேட்டார். அவன் "எதுவும் சாப்பிடவில்லை" என்றான். அதற்கு அவர் "ஏன்?" என்று கேட்டார். மாணவன் "சாப்பிட எதுவும் இல்லை" என்று பதில் கூறினான். இதற்குப் பிறகு படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர்.
நிகழ்வு - 4
பரமக்குடி தரைப்பாலத்தைப் பார்த்த போது உடன் வந்த கல்வி அதிகாரியிடம் பேசினார். "இந்தக் காட்டாற்றில் தண்ணீர் போகும் போது. இந்தப் பக்கத்து மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கூடத்திற்குப் போவார்கள்?" என்றார்.
"மழைக்காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் ஐயா" என்றார் அதிகாரி. அப்போ! இந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாமே?" என்றார் அவர். கல்வித்துறை விதியின்படி மூன்று மைல் தூரத்திற்குள் பள்ளிக்கூடம் இருந்தால், பக்கத்தில் வேறு பள்ளிக்கு அனுமதி கிடையாதே" என்று அதிகாரி கூறினார். அவர் முடிப்பதற்குள் "நீங்க இந்தக் காட்டாற்றைக் காரணம் காட்டுங்க. இந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்ட அனுமதி கேளுங்க. நான் ஏற்பாடு செய்கிறேன்" என்றார் அவர்.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - கல்விக் கண் திறந்தவர் மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை
ஈ) பேருந்து வசதியில்லை
2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
3.படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு + வறிவு
4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டு ஆறு
ஈ) காடுஆறு
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) வகுப்பு - பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படிக்கின்றனர்.
ஆ) உயர்கல்வி - மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள் பல புதிதாகத் தொடங்கினார்.
இ) சீருடை - பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
2. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனமாரப் பாராட்டியவர் பெரியார்
குறு வினா
1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்
- பொறியியல் கல்லூரிகள்,
- மருத்துவக் கல்லூரிகள்,
- கால்நடைமருத்துவக் கல்லூரிகள்,
- ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்
2. காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?
காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி
காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்
சிறு வினா
காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
காமராசரின் கல்விப்பணிகள்
- மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
- மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
- பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
- பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
- தமிழ்நாட்டில் பல கிளைநூலகங்களைத் தொடங்கினார்.
- மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.
காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். "யாரைப் பார்க்க வந்தீங்க?" என்று அன்புடன் வினவினார். "எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்..." என்று சிறுமி கூறி முடிப்பதற்குள். "அம்மா அனுப்பி விட்டாரா?" என்று காமராசர் கேட்டார். "இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க" என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.
மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். "ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்
4.சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
தேர்வுக்குப் பணம் கட்ட காசு வாங்க சிறுவனும் சிறுமியும் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்.
3. காமராசர் செய்த உதவி யாது?
காமராசர் செய்த உதவி தேர்வுக்குப் பணம் கட்ட காசு கொடுத்தார்.
காமராசர் பற்றிய கட்டுரை எழுதுக
காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
- முன்னுரை
- இளமைக் காலம்
- கல்விப் பணி
- நிறைவேற்றிய பிற திட்டங்கள்
- முடிவுரை
முன்னுரை
இளமைக் காலம்
தேசத் தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.
ராசாசியின் தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார்.
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றினார்.
கல்விப் பணி
காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
நிறைவேற்றிய பிற திட்டங்கள்
1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
முடிவுரை
1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
தொடர்புடையவை
காமராஜர் வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் கட்டுரை தமிழ்
காமராஜர் பேச்சு போட்டி
காமராஜர் 6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - கல்விக் கண் திறந்தவர் மதிப்பீடு
காமராஜர் வாழ்க்கை வரலாறு பேச்சு போட்டி
Please share your valuable comments