தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பொருள் இலக்கணத்தை நம் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே!
அகப்பொருள் வாழ்வியல் ஆகும். இதை ஐவகை நிலங்களாகப் பிரித்து ஐவகை நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதேபோல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.
அகப்பொருள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் பொருள் இலக்கணம்பாடத்தலைப்புகள்(toc)
அகப்பொருளிலக்கணம்
அகப்பொருள் என்றால் என்ன?
அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை.
அகத்திணையில் வகைகள் எத்தனை ?
அகப்பொருள் வகைகள் - ஏழு வகைப்படும்
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை
6. கைக்கிளை 7. பெருந்திணை
அன்பின் ஐந்திணைகள் யாவை?
- 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை
அகத்திணையில் "முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்" ஆகும்.
அகப்பொருள் பொருள்கள் விளக்கம்
1. முதற்பொருள் என்றால் என்ன?
அகவொழுக்கம் நிகழ்தற்ககுக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
முதற்பொருளுக்கான நிலமும் பொழுதும்
அகத்திணை | ஐவகை நிலங்கள் | சிறுபொழுதுகள் | பெரும்பொழுதுகள் |
---|---|---|---|
குறிஞ்சி | மலையும் மலைசார்ந்த இடமும் | யாமம் | குளிர்காலம், முன்பனிக் காலம் |
முல்லை | காடும் காடு சார்ந்த இடமும் | மாலை |
கார்காலம் |
மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் | வைகறை |
ஆறு பெரும்பொழுதுகள் |
நெய்தல் | கடலும் கடல்சார்ந்த இடமும் | ஏற்பாடு |
ஆறு பெரும்பொழுதுகள் |
பாலை | சுரமும் சுரம் சார்ந்த இடமும் (சுரம்-மணல்) | நண்பகல் | இளவேனிற் காலம், முதுவேனிற் காலம், பின்பனிக் காலம் |
1.1.நிலங்கள் ஐந்து வகைப்படும்.
அகத்திணை | ஐவகை நிலங்கள் | நிலங்கள் |
---|---|---|
குறிஞ்சி | மலையும் மலைசார்ந்த இடமும் | |
முல்லை | காடும் காடு சார்ந்த இடமும் | |
மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் | |
நெய்தல் | கடலும் கடல்சார்ந்த இடமும் | |
பாலை | சுரமும் சுரம் சார்ந்த இடமும் (சுரம்-மணல்) |
1.2. பொழுது இருவகைப்படும்
பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
பெரும்பொழுதுகள்
ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.
பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)
கார்காலம் | ஆவணி, புரட்டாசி |
குளிர்காலம் | ஐப்பசி, கார்த்திகை |
முன்பனிக் காலம் | மார்கழி, தை |
பின்பனிக் காலம் | மாசி,பங்குனி |
இளவேனிற் காலம் | சித்திரை, வைகாசி |
முதுவேனிற் காலம் | ஆனி,ஆடி |
சிறுபொழுதுகள்
ஒரு நாளின் ஆறு கூறுகளைப் சிறுபொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.
சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)
காலை | காலை 6 மணிமுதல் 10 மணிவரை |
நண்பகல் | காலை 10 மணிமுதல் 2 மணிவரை |
ஏற்பாடு | பிற்பகல் 2 மணிமுதல் 6 மணிவரை |
மாலை | மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை |
யாமம் |
இரவு 10 மணிமுதல் இரவு 2 மணி வரை |
வைகறை | இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை |
ஏற்பாடு என்பதன் பொருள்: எல்+பாடு = ஏற்பாடு என்றால் ஞாயிறு மறையும்
நேரம்;
'எல்' - ஞாயிறு; 'பாடு' - மறையும் நேரம்.
2. கருப்பொருள் என்றால் என்ன?
கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
---|---|---|---|---|---|
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | வெற்பன், குறவர், குறத்தியர் | தோன்றல் ஆயர், ஆய்ச்சியர் | ஊரன், உழவர், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றியர் |
உணவு | மலைநெல், தினை | வரகு, சாமை | செந்நெல், வெண்ணெல் | மீன், உப்புக்குப் பெற்ற பொருள் | சூறையாடலால் வரும் பொருள் |
விலங்கு | புலி, கரடி சிங்கம் | முயல்,மான், புலி | எருமை, நீர்நாய் | முதலை, சுறா | வலியிழந்த யானை |
பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, தோன்றி | செங்கழுநீர், தாமரை | தாழை, நெய்தல் | குரவம், பாதிரி |
மரம் | அகில், வேங்கை | கொன்றை, காயா | காஞ்சி, மருதம் | புன்னை, ஞாழல் | இலுப்பை, பாலை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி, மயில் | நாரை, நீர்க்கோழி, அன்னம் | கடற்காகம் | புறா,பருந்து |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர்,மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | அருவி நீர், சுனைநீர் | காட்டாறு | மனைக்கிணறு, பொய்கை | மணற்கிணறு, உவர்க்கழி | வற்றிய சுனை, கிணறு |
பறை | தொண்டகம் | ஏறு கோட்பறை | மணமுழா, நெல்லரிகிணை | மீன் கோட்பறை | துடி |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
பண் | குறிஞ்சிப்பண் | முல்லைப்பண் | மருதப்பண் | செவ்வழிப்பண் | பஞ்சுரப்பண் |
தொழில் | தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் | நெல்லரிதல், களை பறித்தல் | மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் | வழிப்பறி,நிரை கவர்தல் |
ஐந்து நிலங்கள் இருக்கின்றன அனைத்துக்கும் பொழுது ஒன்றுபோல வருமா?
ஒவ்வொரு நிலத்திற்கும், பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஒன்றுபோல வாரா.
3. உரிப்பொருள் யாவை?
மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. இவ்வொழுக்கங்கள் ஐந்தும்
அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக
உரிப்பொருள்கள் பத்து உள்ளன.
அகத்திணை | உரிப்பொருள் |
பொருள் |
---|---|---|
குறிஞ்சி | புணர்தலும் புணர்தல் நிமித்தமும் | புணர்தல் - ஒன்றுசேர்தல் |
முல்லை | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் | இருத்தல் - பிரிவைப் பொறுத்து இருத்தல் |
மருதம் | ஊடலும் ஊடல் நிமித்தமும் | ஊடல் - தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல் |
நெய்தல் | இரங்கலும் இரங்கல் நிமித்தமும் | இரங்கல்- பிரிவு தாங்காது தலைவி வருந்துதல் |
பாலை | பிரிதலும் பிரிதல் நிமித்தமும் | பிரிதல் - தலைவன் தலைவியைப் பிரிதல் |
கவிதையில் உரிப்பொருளை இக்கருப்பொருள் பின்னணியில் அமைத்துப் பாடுவது நம் மரபு.
தொடர்புடையவை
- அகப்பொருள் வகைகள் என்ன?
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
Please share your valuable comments