தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
தளை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.
யாப்பிலக்கணம் எழுத்துகள் அசை சீர்
தளை என்றால் என்ன?
நின்றசீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை எனப்படும்.
தளை என்பதன் பொருள் : கட்டுதல்
- ஒன்றி வருதலாவது : நேர் முன் நேரும், நிரை முன் நிரையும் வருதல்
- ஒன்றாமல் வருதலாவது : நேர் முன் நிரையும், நிரை முன் நேரும் வருதல்.
ஈற்றசை- முதலசை | தளை |
---|---|
கண்/ணா - மன்/னா நேர் நேர் நேர் நேர் |
நேர் அசைகள் ஒன்றி வந்தன |
உயர் /வற - உயர்/நலம் நிரை நிரை நிரை நிரை |
நிரை அசைகள் ஒன்றி வந்தன |
அக/ர - முத/ல நிரை நேர் நிரை நேர் |
ஒன்றாமல் வந்தன |
மலர்/மிசை - ஏ/கினான் நிரை நிரை நேர் நிரை |
ஒன்றாமல் வந்தன |
தளை எத்தனை வகைப்படும்?
அது ஏழு வகைப்படும்.
தளை வகைகள் |
|
---|---|
1. நேரொன்றாசிரியத்தளை | மா முன் நேர் |
2. நிரையொன்றாசிரியத்தளை | விளம் முன் நிரை |
3. இயற்சீர் வெண்டளை | மா முன் நிரை, விளம் முன் நேர் |
4. வெண்சீர் வெண்டளை | காய் முன் நேர் |
5. கலித்தளை | காய் முன் நிரை |
6. ஒன்றிய வஞ்சித்தளை | கனி முன் நிரை |
7. ஒன்றா வஞ்சித்தளை | கனி முன் நேர் |
1. நேரொன்றாசிரியத்தளை
மாமுன் நேர் வருவது நேரொன்றாசிரியத்தளை.
பா / ரி பா / ரி
நேர்நேர் நேர்நேர் தேமா தேமா |
மாமுன் நேர் |
நின்றசீரின் ஈற்றசை(மா)-வரும்சீரின் முதலசை(நேர்) |
2. நிரையொன்றாசிரியத்தளை
விளம்முன் நிரை வருவது நிரையொன்றாசிரியத்தளை
பலர் / புகழ் கபி / லர் நிரை நிரை நிரை நேர் கருவிளம் புளிமா |
விளம்முன் நிரை |
நின்றசீரின் ஈற்றசை(விளம்)-வரும்சீரின் முதலசை(நிரை) |
3. இயற்சீர் வெண்டளை
மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை.
அக/ர முத/ல நிரைநேர் நிரைநேர் புளிமா புளிமா |
மாமுன் நிரை | ின்றசீரின் ஈற்றசை(மா)-வரும்சீரின் முதலசை(நிரை) |
நில/வரை நீள்/புகழ் நிரைநிரை நேர்நிரை கருவிளம் கூவிளம் |
விள முன் நேர் | நின்றசீரின் ஈற்றசை(விளம்)-வரும்சீரின் முதலசை(நேர்) |
4. வெண்சீர் வெண்டளை
காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை.
யா/தா/னும் நா/டா/மால்
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் தேமாங்காய் தேமாங்காய் |
காய்முன் நேர் | நின்றசீரின் ஈற்றசை(காய்)-வரும்சீரின் முதலசை(நேர்) |
வெண்பாவுக்கு உரிய தளைகள்:
இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையுமே.
வெண்பாவில் இவ்விரு தளைகள் தவிரப் பிற தளைகள் வாரா.
5. கலித்தளை
காய்முன் நிரை வருவது கலித்தளை.
தா/மரைப்/பூ குளத்/தினி/லே நேர்நிரைநேர் நிரைநிரைநேர் கூவிளங்காய் கருவிளங்காய் |
காய்முன் நிரை |
நின்றசீரின் ஈற்றசை(காய்)-வரும்சீரின் முதலசை(நிரை) |
6. ஒன்றிய வஞ்சித்தளை
கனிமுன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளை.
செந்/தா/மரைக் குளத்/தினி/லே நேர்நேர்நிரை நிரைநிரைநேர் தேமாங்கனி கருவிளங்காய் |
கனிமுன் நிரை |
நின்றசீரின் ஈற்றசை(கனி )-வரும்சீரின் முதலசை(நிரை) |
7. ஒன்றாத வஞ்சித்தளை
கனிமுன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித்தளை.
வா/னில்/வளர் திங்/களன்/ன நேர்நேர்நிரை நேர்நிரைநேர் தேமாங்கனி கூவிளங்காய் |
கனிமுன் நேர் |
நின்றசீரின் ஈற்றசை(கனி)-வரும்சீரின் முதலசை(நேர்) |
Please share your valuable comments