போலிகள்

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான போலி பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

போலி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

போலி என்றால் என்ன?

'போல இருத்தல்' என்பது இதன் பொருளாகும்.

  • அறம் செய விரும்பு - இஃது ஒளவையார் வாக்கு. 
  • அறன் வலியுறுத்தல் - என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று. 

இத்தொடர்களில் அறம், அறன் ஆகிய சொற்களில் ஓர் எழுத்து மாறியுள்ளது. ஆனால் பொருள் மாறுபட வில்லை. போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது. 

இவ்வாறு சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.

போலி எத்தனை வகைபடும்? 

போலி மூன்று வகைப்படும்.

போலி  வகைகள்

  1. முதற்போலி,
  2. இடைப்போலி
  3. இறுதிப்போலி

என மூவகைப்படும்.


போலிகள்

முதற்போலி 

சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும். 

முதற்போலி எடுத்துக்காட்டு

  • பசல் - பைசல், 
  • மஞ்சு- மைஞ்சு,
  • மயல்- மையல் 

ஆகிய சொற்களில் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும். 

இடைப்போலி

சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.

இடைப்போலி எடுத்துக்காட்டு

  • அமச்சு - அமைச்சு, 
  • இலஞ்சி - இலைஞ்சி, 
  • அரயர் - அரையர் 

ஆகிய சொற்களில் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.

கடைப்போலி 

சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும். 

கடைப்போலி எடுத்துக்காட்டு

  • அகம்- அகன், 
  • நிலம்- நிலன், 
  • முகம் - முகன், 
  • பந்தல் - பந்தர், 
  • சாம்பல்- சாம்பர் 

ஆகிய சொற்களில் இறுதியில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும். 

அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். 

  • அகம்- அகன்

லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும். 

  • பந்தல் - பந்தர்

முற்றுப்போலி :

முற்றுப்போலி மூவகைப் போலிகள் மட்டுமன்றி வேறு ஒரு வகைப் போலியும் உண்டு. ஒரு சொல்லில் உள்ளஅனைத்து எழுத்துகளும், மாறியிருந்தாலும், பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

  • ஐந்து - அஞ்சு 

இச்சொற்களை நோக்குங்கள். இதில் அஞ்சு என்னும் சொல் ஐந்து என்னும் சொல்லின் போலி வடிவமாகும். அஞ்சு என்ற சொல்லில் உள்ள எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டு இருந்தாலும் அஃது ஐந்து என்னும் பொருளையே தருகிறது. இவ்வாறு ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும். 

முற்றுப்போலி எடுத்துக்காட்டு

  • ஐந்து -அஞ்சு (முதல், இடை, கடைப்போலிகள்)

இரண்டு, மூன்று போலிகளும் அமைந்த சொற்களும் உள்ளன,

  • நைந்து-நைஞ்சு (இடை, கடைப்போலிகள்)

நினைவுகூர்க 

முதற்போலி இடைப்போலி இறுதிப்போலி
முதலெழுத்து மாறினாலும், பொருள் மாறுபடாது இடையெழுத்து மாறினாலும், பொருள் மாறுபடாது ஈற்றெழுத்து மாறினாலும், பொருள் மாறுபடாது
ஞ்சு - மைஞ்சு,யல்மையல் முரசு - முரைசு,அரசியல் - அரைசியல் அறம் - அறன்,பந்தல் - பந்தர்


தொடர்புடையவை - எழுத்திலக்கணம்

போலி தமிழ் இலக்கணம்

Poli tamil illakkanam

Poli grammer tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad