தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்.
- தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
வேற்றுப்பொருள் வைப்பு அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
வேற்றுப்பொருள் வைப்பு அணி
புலவர் ஒரு சிறப்பான பொருளைக் கூற நினைத்து அதற்கு உலகறிந்த தக்கதொரு பொருளைச் சான்றாகக் காட்டிப் பாடுவது வேற்றுப்பொருள் வைப்பு அணி எனப்படும்.
"முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்
பின்னொரு பொருளை உலகறி பெற்றி
ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே" - தண்டி நூ.47
வேற்றுப்பொருள் வைப்பு அணி எடுத்துக்காட்டு - பழமொழி நானூறு
"கன்றி முதிர்ந்த கழியப்பன னாள் செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு" - பழமொழி நானூறு
முன்றுறையரையனார், தமது பழமொழி நானூறு என்னும் நூலில்,
பெரியோர் தவறு செய்தால் அது உடனே உலகத்தார்க்குத் தெரிந்து பெரும் பழிக்குக் காரணமாகும்.என்னும் கருத்தை ‘குன்றின்மேல் இட்ட விளக்கு' என்னும் மக்கள் வழக்கில் உள்ள பழமொழியை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.
எனவே இது வேற்றுப்பொருள் வைப்பு அணியாகும்.
Please share your valuable comments