வளர்தமிழ்

மூத்த தமிழ் மொழி என்றும் இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது. நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது. நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது. உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்புகளை அறியலாம் வாருங்கள்.

பாடத்தலைப்புகள்(toc)

வளர்தமிழ்

மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு மொழி. (alert-success)

மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி. மொழி. நாம் சிந்திக்க உதவுகிறது. சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய உதவுவதும் மொழியே.

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.(alert-passed)

இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் இரண்டையும் பெற்றுள்ளன. உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே! தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.

தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.

பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார் (code-box)

என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.

மூத்தமொழி

என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - பாரதியார் (code-box)

என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாரதியார் கூறுகிறார்.

சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். அதுபோல இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும்.

தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் ஆகும். (alert-success)

அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். அல்லவா? இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை உணரலாம்.

எளிய மொழி

தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

  • அ + மு + து = அமுது

தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

  • வலஞ்சுழி எழுத்துகள் - அ ,எ, ஔ, ண, ஞ
  • இடஞ்சுழி எழுத்துகள் - ட, ய, ழ
சொல்
முதலில் ஆளப்படும் இலக்கியம் மேற்கோள்
தமிழ் தொல்காப்பியம் தமிழென் கிளவியும் அதனோ ரற்றே
தமிழ்நாடு
சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்
தமிழன் அப்பர் தேவாரம் தமிழன் கண்டாய்

சீர்மை மொழி

சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல். தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் அதன் சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.

உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம்.

  • உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.

ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.

பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல். இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் மொழி.

வளமை மொழி

தமிழ் வளமைமிக்க மொழி.

  • தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் மிகுந்தது தமிழ் மொழி.
  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக் கொண்டது;
  • திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்கள் பலவும் நிறைந்தது:
  • சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களைக் கொண்டது.

இவ்வாறு இலக்கிய, இலக்கண வளம் நிறைந்தது தமிழ் மொழி.

தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும்.  


சான்றாக,

பூவின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள்தமிழில் உண்டு.

ஓர் எழுத்தே ஒரு சொல்லாகிப் பொருள்தருவதும் உண்டு. ஒரு சொல் பல பொருளைக் குறித்து வருவதும் உண்டு.

சான்றாக,

'மா' - என்னும் ஒரு சொல்,

  • மரம்,
  • விலங்கு,
  • பெரிய,;
  • திருமகள்,
  • அழகு,
  • அறிவு,
  • அளவு,
  • அழைத்தல்,
  • துகள்,
  • மேன்மை,
  • வயல்,
  • வண்டு

போன்ற பல பொருள்களைத் தருகிறது.

வளர்மொழி

தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

  • இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்:
  • இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்;
  • நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்.

தமிழில் காலந்தோறும் வகையான பல இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.

  • துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள்.
  • கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
  • தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
தாவர இலைப் பெயர்கள்
ஆல், அரசு, மா,பலா, வாழை இலை
அகத்தி, பசலை, முருங்கை
கீரை 
அருகு, கோரை புல்
நெல், வரகு தாள்
மல்லி தழை
சப்பாத்திக் கள்ளி, தாழை மடல்
கரும்பு, நாணல் தோகை
பனை, தென்னை ஓலை
கமுகு கூந்தல்

புதுமை மொழி

இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.

  • இணையம்(Internet), முகநூல்(Facebook), புலனம்(Whats up), குரல்தேடல்(Voice Search), தேடுபொறி(Search Engine), செயலி(App), தொடுதிரை(Touch Screen) முதலிய சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
  • சமூக ஊடகங்களான செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பயன்படத்தக்க மொழியாகவும் விளங்குகிறது தமிழ்மொழி.

அறிவியல் தொழில்நுட்ப மொழி உலகில் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன. இந்நிலையில் தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல் தொழில் நுட்ப நோக்கில் உருவாக்கப் பட்டவையாக உள்ளன.

மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.

தமிழ் எண்களை அறிவோம்.

எண் குறிகள் எண்கள்
0
1
2
3
4
5
6
7
8
9
௰ (௧o)
10

மூத்த மொழியான தமிழ் கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புது மொழியாகவும் திகழ்கிறது. இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது நமக்குப் பெருமையல்லவா? தமிழ் மொழியின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றவேண்டியது நமது கடமையல்லவா?

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்

சொல் இடம்பெற்ற நூல்
வேளாண்மை கலித்தொகை - 101, திருக்குறள் - 81
உழவர் நற்றிணை - 4
பாம்பு குறுந்தொகை - 239
வெள்ளம் பதிற்றுப்பத்து - 15
முதலை குறுந்தொகை - 324
கோடை அகநானூறு - 42
உலகம் தொல்காப்பியம், கிளவியாக்கம் - 56 திருமுருகாற்றுபடை- 1
மருந்து அகநானூறு-147, திருக்குறள் - 952
ஊர் தொல்காப்பியம், அகத்திணையியல் - 41
அன்பு தொல்காப்பியம், களவியல் - 110, திருக்குறள் - 84
உயிர் தொல்காப்பியம், கிளவியாக்கம் - 56. திருக்குறள் - 955
மகிழ்ச்சி தொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் - 531
மீன் குறுந்தொகை - 54
புகழ் தொல்காப்பியம், வேற்றுமையியல் - 71
அரசு திருக்குறள் - 554
செய் குறுந்தொகை - 72
செல் தொல்காப்பியம், 75 புறத்திணையியல்
பார் பெரும்பாணாற்றுப்படை - 435
ஒழி தொல்காப்பியம், கிளவியாக்கம் - 48
முடி தொல்காப்பியம், வினையியல் - 206




பிறந்தநாள் வாழ்த்து

நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்: பரிவு வேண்டும்:!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும். எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்
சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

- கவிஞர் அறிவுமதி(code-box)

6ம் வகுப்பு தமிழ்(6th Class Tamil Solution)- வளர்தமிழ் வினா-விடை மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

விடைகள்: UNDERLINE AND BOLD செய்யப்பட்டுள்ளது.

1. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்

அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை

2. 'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ) இடன் + புறம் ஆ) இடது + புறம் இ) இட + புறம் ஈ) இடப் + புறம்

3. 'சீரிளமை' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ) சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை ஈ) சீற் + இளமை

4.சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சிலபதிகாரம்

5.கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ்

6. "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்.

அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்

7. 'மா' என்னும் சொல்லின் பொருள்

அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி.

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் .

3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் எண்களின் அது அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக.

1. தனிச்சிறப்பு - தமிழ்மொழி தனிச்சிறப்பு வாய்ந்தது.

2. நாள்தோறும் - தமிழில் நாள்தோறும் வகையான பல இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.

குறுவினா

1. தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?

இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் ஆகும். அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை உணரலாம்.

2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி.

சிறுவினா

1. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?

உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர். பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர்.

2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

மூத்த தமிழ் மொழி என்றும் இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது.
நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது. நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது.

3. தமிழ் மொழியின் சிறப்பு குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

  1. தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.
  2. தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
  3. தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் அதன் சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.
  4. தமிழ் மொழி சொல்வளம் மிக்கது.
  5. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad