தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சி்றப்பாகும். சான்றாக, மலரின் ஏழு நிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.
பாடத்தலைப்புகள்(toc)
பூவின் ஏழு நிலைகள் குறிக்கும் சொற்கள் - The seven stages of the flower in Tamil Language
பூவின் வேறு பெயர்கள் - Other names for the flower in tamil
- அரும்பு: பூவின் தோற்றநிலை;
- மொட்டு: பூ விரியத் தொடங்கும் நிலை;
- முகை: பூ விரிந்த நிலை;
- மலர்: பூவின் மலரத் தொடங்கும் நிலை;
- அலர்: பூவின் மலர்ந்த நிலை;
- வீ: மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை;
- செம்மல்: பூ வாடின நிலை.
பூவின் ஐந்து நிலைகள் - The five stages of the flower
- அரும்பு: பூவின் தோற்றநிலை;
- போது:பூ விரியத் தொடங்கும் நிலை;
- மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை;
- வீ:மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை;
- செம்மல்: பூ வாடின நிலை.
பூவின் நிலைகள் படங்கள்
நினைவுகூர்க
சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். "தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).
TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்வி
- பூவின் நிலைகள் எத்தனை?
- செம்மல் என்பது என்ன?
தொடர்புடையவை
- ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள்
- ஒரு தாவரத்தின் பிஞ்சு வகையை குறிப்பதற்கான சொற்கள்
- தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்
- கெட்டுப்போன கனிக்கும் காய்க்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள்
- தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள்
- தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்
- தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான (காய்களையோ கனிகளையோ) சொற்கள்
- தாவரங்களின் கிளைப்பிரிவுகள்
-
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் ஏழு நிலைகள்
- பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள்
- தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்: மணிவகை
Please share your valuable comments