தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சி்றப்பாகும். சான்றாக,தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களுக்குத் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
தாவரங்களின் கிளைப்பிரிவுகள் - Branches of plants in Tamil Language
- கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
- கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு:
- கிளை: கொம்பின் பிரிவு:
- சினை: கிளையின் பிரிவு:
- போத்து: சினையின் பிரிவு:
- குச்சு: போத்தின் பிரிவு:
- இணுக்கு: குச்சியின் பிரிவு.
காய்ந்த அடியும் கிளையும்
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள்
காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்.
- சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி);
- விறகு: காய்ந்த சிறுகிளை;;
- வெங்கழி: காய்ந்த கழி;
- கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.
நினைவுகூர்க
சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். "தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).
தொடர்புடையவை
- ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள்
- ஒரு தாவரத்தின் பிஞ்சு வகையை குறிப்பதற்கான சொற்கள்
- தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்
- கெட்டுப்போன கனிக்கும் காய்க்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள்
- தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள்
- தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்
- தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான (காய்களையோ கனிகளையோ) சொற்கள்
- தாவரங்களின் கிளைப்பிரிவுகள்
-
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் ஏழு நிலைகள்
- பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள்
- தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்: மணிவகை


Hi Please, Do not Spam in Comments