நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை நூல் குறிப்பு : 

நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 

  • கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். 
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். 

ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.

பாடத்தலைப்புகள்(toc)

நான்மணிக்கடிகை பாடல் 


மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்  

தனக்குத் தகைசால் புதல்வர்; - மனக்கினிய 

காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும் 

ஓதின்  புகழ்சால் உணர்வு.

-விளம்பிநாகனார் (code-box)


பாடல்பொருள்

மனைக்கு விளக்கம் மடவார் என்னும் பாடலில் நான்கு மணிகளைப்போல அமைந்துள்ள கருத்துகள் யாவை?

  1. குடும்பத்தின் விளக்குப் பெண்ணாவாள். 
  2. அப்பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவள் பெற்ற பண்பில் சிறந்த பிள்ளைகள். 
  3. மனத்திற்கினிய அன்புமிக்க அப்பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி. 
  4. அக்கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே.


சொல்பொருள்

மடவார் - பெண்கள்

தகைசால் - பண்பில் சிறந்த

மனக்கினிய - மனத்துக்கு இனிய

காதல் புதல்வர் - அன்பு மக்கள்

ஓதின் - எதுவென்று சொல்லும்போது

புகழ்சால் - புகழைத் தரும்

உணர்வு - நல்லெண்ணம்

நான்மணிக்கடிகை ஆசிரியர் குறிப்பு : 

நான்மணிக்கடிகை நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். 

  • விளம்பி என்பது ஊர்ப்பெயர்;
  • நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 2.  அறநூல்கள் - நான்மணிக்கடிகை பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

பொருள் எழுதுக.

1. மடவார் - பெண்கள்

2. மனக்கினிய - மனத்துக்கு இனிய

3. உணர்வு - நல்லெண்ணம்


கோடிட்ட இடத்தை நிரப்புக.

1.நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

2. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார்

3. மனைக்கு விளக்கம் பெண்கள்

4. அன்புமிக்க புதல்வர்களுக்கு விளக்கு கல்வி.


கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. கடிகை என்பதன் பொருள்

அ) கடித்தல்

ஆ) அணிகலன்

இ) கடுகு பெயர்.

2. விளம்பி என்பது.

அ) இயற்பெயர்

ஆ) புனைபெயர்

இ) ஊர்ப்பெயர்


குறுவினாக்கள்

1. நான்மணிக்கடிகை என்பதன் பொருள் யாது ?

கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். 

நான்மணிக்கடிகை என்பது நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். 


2. பெண்ணுக்கு விளக்காக அமைபவர் யார் ?

பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவள் பெற்ற பண்பில் சிறந்த பிள்ளைகள். 


3. கல்விக்கு விளக்காக அமைவது எது ?

கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், பண்பில் சிறந்த பிள்ளைகளிடம் உள்ள நல்லெண்ணங்களே.


TNPSC previous year question 

1. கடிகை என்பதன் பொருள்

அ) கடித்தல்

ஆ) அணிகலன்

இ) கடுகு பெயர்.

2. விளம்பி என்பது.

அ) இயற்பெயர்

ஆ) புனைபெயர்

இ) ஊர்ப்பெயர்

3. நான்மணிக்கடிகை .... நூல்களுள் ஒன்று.

பதினெண்கீழ்க்கணக்கு

பதினெண்மேல்கணக்கு

ஐம்பெரும் காப்பியங்கள்

சிற்றிலக்கியங்கள் 

4. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர்

 விளம்பிநாகனார்

கண்ணனார் 

சாத்தனார் 

கண்ண கூத்தனர் 

5. மடவார்  என்பதன் பொருள்

பெண்கள்

ஆண்கள் 

குழந்தைகள் 

சிறுவர்கள்

6. பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது 

வீடு - பெண்கள்

பெண்கள் - பிள்ளைகள்

பிள்ளைகள் - கல்வி

கல்வி - நல்லெண்ணம் 

7. பொருந்தாத இணை கண்டறி 

நான்மணிக்கடிகை நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். 

விளம்பி என்பது ஊர்ப்பெயர்;

நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

நான்மணிக்கடிகை பதினெண்மேல்கணக்கு நூல்களுள் ஒன்று. ( சரி-பதினெண்கீழ்க்கணக்கு)




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad