எண் - -Tamil Letters 247 - முதலெழுத்தும் சார்பெழுத்தும்

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது. எழுத்திலக்கணத்தின் கூறுகளாக நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எண் பற்றி விளக்கப்பட்டு்ள்ளது. 

எண் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

எண் என்றால் என்ன?

ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

மொழிமுதல் காரண மாம்அணுத் திரள்ஒலி

எழுத்து முதல்சார்பு எனஇரு வகைத்தே 

- நூற்பா 58(code-box)


எண் வகைகள் - முதலெழுத்தும் சார்பெழுத்தும்

தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும்.

அவை

அவை,

முதலெழுத்துக்கள் 30
சார்பு எழுத்துக்கள் 217
மொத்தம் தமிழ் எழுத்துக்கள் எண்ணிக்கை(Tamil letters total) 247

 

முதலெழுத்து

ஒரு மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் எழுத்துக்கள் முதலெழுத்து (30 எழுத்துக்கள்) எனப்படும். 

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். 

பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.

"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" - நூற்பா59(code-box)   

முதலெழுத்து இருவகைப்படும்.

உயிரெழுத்து 12 எழுத்துக்கள்
மெய்யெழுத்து 18 எழுத்துக்கள்
மொத்தம் முதலெழுத்துக்கள் எண்ணிக்கை 30 எழுத்துக்கள்


உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு என முப்பதும் முதல் எழுத்துகளாகும்.

சார்பு எழுத்துக்கள்

சார்பு எழுத்துக்கள் என்றால் முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ஆகும்.

உயிர்மெய், முற்றாய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.

சார்பு எழுத்துக்கள் வகைகள் மொத்தம் - பத்து

அவையாவன,

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

நன்னூல்படி சார்பெழுத்து

உயிர்மெய், முற்றாய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.

உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு

அஃகிய இஉ ஐஔ மஃகான்

தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்

- நன்னூல் 60 (code-box)

சார்பெழுத்தின் விரி

"உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு, உயர் ஆய்தம்
எட்டு, உயிரளபு, எழு மூன்று, ஒற் றளபெடை
ஒளகான் ஒன்றே மஃகாள் மூன்றே
ஆறுஏழ் அஃகும் இம், முப் பான்ஏழ் உகரம் ஆறாறு ஐகான் மூன்றே
ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறுவிரி
ஒன்றுஒழி முந்நூற்று எழுபான் என்ப" - (நன்னூல் 61)

உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு(216), முற்றாய்தம் எட்டு, உயிரளபெடை இருபத்தொன்று(21), ஒற்றளபெடை நாற்பத்திரண்டு(42), குற்றியலிகரம் முப்பத்தேழு(37), குற்றியலுகரம் முப்பத்தாறு(36), ஐகாரக் குறுக்கம் மூன்று(3), ஔகாரக் குறுக்கம் ஒன்று, மகரக் குறுக்கம் மூன்று, ஆய்தக் குறுக்கம் இரண்டு, ஆக மொத்தம் சார்பெழுத்துகள் முந்நூற்று அறுபத்து ஒன்பது ஆகும். 

நினைவுகூர்க

துணி உருவாவதற்குக் காரணம் நூல். நூலே துணியாக மாறுகிறது. அதனால் நூல் முதல் காரணம். துணி உருவாவதற்குத் தறி முதலிய கருவிகளும் காரணம் ஆகின்றன. ஆனால் அக்கருவிகளே துணியாக மாறுவதில்லை; துணி உருவாகத் துணை செய்கின்றன. எனவே அக்கருவிகள் துணைக் காரணம். மொழியில் அணுவே ஒலியாகவும், ஒலியே எழுத்தாகவும் ஆவதால் அணு, ஒலி இரண்டும் முதற் காரணங்கள் ஆகும்.மொழிக்கு முதல் காரணமும் அணுத்திரளின் காரியமும் ஆகிய ஒலி எழுத்தாகும். 

சிறுவினா 

1.  முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக.

ஆம், ஆல், இல், உம், ஓம்  

2. முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக.

குருவி, கலை, காடு 

3. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

ஒரு மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் எழுத்துக்கள் முதலெழுத்து (30 எழுத்துக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. 

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். 

தொடர்புடையவை - எழுத்திலக்கணம்

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please share your valuable comments

Top Post Ad