தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
உரிச்சொல் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்
பாடத்தலைப்புகள்(toc)
உரிச்சொல் என்றால் என்ன?
பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு
பெயர் சொற்கள், வினைச் சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று
வருவன உரிச்சொற்கள்.
- பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது.
- பெயர், வினைகளின் பண்புகளை உணர்த்தி வரும் சொல்.
- பேச்சுவழக்கில் அவ்வளவாக இடம் பெறுவதில்லை. இது செய்யுளில் மட்டும் வரும். செய்யுளில்தான் மிகுதியாகப் பயன்படுத்துவர்.
இசையும் குறிப்பும் பண்புமாகிய பலவேறு வகைப்பட்ட தன்மைகளை உணர்த்தும் சொல்லாக விளங்குவது உரிச்சொல் ஆகும்.
- இசை என்பது ஓசை;
- குறிப்பு என்பது மனத்தால் உணரப்படுவது;
- பண்பு என்பது ஐம்பொறிகளால் உணரப்படுவது.
இவ்வாறு உரிச்சொற்கள் பெயர் வினைகளுக்கு அடையாக வரும். செய்யுளுக்கு உரிமை உடையனவாய் இச்சொற்கள் பயின்று வரும்.
உரிச்சொல் எடுத்துக்காட்டு
- மா- மாநகர் (மா - இதன் பொருள் பெரிய),
- சால- சாலச்சிறந்தது
உரிச்சொல் எத்தனை வகைப்படும்?
உரிச்சொல் வகைகள்
- ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்
- பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்
எடுத்துக்காட்டு | பொருள் | உரிச்சொற்கள் வகைகள் |
---|---|---|
சால, உறு, தவ, நனி, கூர், கழி | மிகுதி | ஒரு குணத்தைக் குறித்து வரும் பல உரிச்சொற்கள். |
பல உரிச்சொற்கள் ஒரு குணத்தைக் குறித்தும் வரும் - ஒரு குணத்தைக் குறித்து வரும் பல உரிச்சொற்கள்.
சால, உறு, தவ, நனி, கழி, கூர் - இவையாவும் மிகுதி என்னும் ஒரே பொருளைத் தரும் பல உரிச்சொற்களாகும்.
- சாலப் பசித்தது,
- உறு பொருள்,
- தவ முனி,
- நனி தின்றான்,
- கழி பேருவகை,
- கூர் வாள்
பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்
எடுத்துக்காட்டு | பொருள் | உரிச்சொற்கள் வகைகள் |
---|---|---|
கடி | காப்பு, கூர்மை, நாற்றம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல, கரிப்பு | பல குணங்களைக் குறித்து வரும் ஓர் உரிச்சொல். |
ஓர் உரிச்சொல் பல குணங்களைக் குறித்தும் வரும் - பல குணங்களைக் குறித்து வரும் ஓர் உரிச்சொல்
'கடி' என்பது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்லாகும்.
- கடி நகர் (காவல் மிகுந்த நகரம்)
- கடி வாள் (கூர்மையான வாள்)
- கடி மலர் (மணம்)
- கடி அரமகளிர் (அச்சம்)
- கடி உணவு (மிகுதி)
- கடி மார்பு (அகன்ற)
- கடி மிளகு (காரம்)
- கடி விடுதும் (விரைவு)
- கடி மணம் (புதுமை)
உரிச்சொற்கள் பிற வகைகள்
இசை குறித்த உரிச்சொற்கள் | பண்பு குறித்த உரிச்சொல் | குறிப்புணர்த்திய உரிச்சொற்கள் |
---|---|---|
|
|
|
Please share your valuable comments