யாப்பு : செய்யுள் உறுப்புகள் - எழுத்து

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

செய்யுளில் குறில், நெடில், மெய், ஆய்தம் என்னும் எழுத்துகள் முதன்மையாகக் கருதப்படும்.

எழுத்துகள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.

யாப்பிலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

எழுத்துகள்

  • குறிலில், உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் அடங்கும்.
  • நெடிலில் உயிர்நெடிலும், உயிர்மெய் நெடிலும் அடங்கும்.
  • மெய் 'ஒற்று' எனவும் சொல்லப்படும்.
  • செய்யுளில் ஆய்தம் மெய்யாகக் கருதப்படும்.

யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் வகைகள்

யாப்பிலக்கணத்தின்படி, எழுத்து எத்தனை வகைப்படும்

1. குறில் 2. நெடில் 3. ஒற்று

என மூவகைப்படும்.

யாப்பிலக்கணம்

1. குறில்

குறில் எழுத்துகள்- அ,இ,உ,எ, ஒ, - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.

குறிலில், உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் அடங்கும்.

2. நெடில்

நெடில் எழுத்துகள் - ஆ,ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,ஔ ஆகிய எழும் நீண்டு ஒலிக்கின்றன.

நெடிலில் உயிர்நெடிலும், உயிர்மெய் நெடிலும் அடங்கும்.

3. ஒற்று

மெய் 'ஒற்று' எனவும் சொல்லப்படும்.

  • செய்யுளில் ஆய்தம் மெய்யாகக் கருதப்படும்.

மெய்யெழுத்துக்கள் - க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்


எடுத்துக்காட்டு : நாணல் இச்சொல்லில்,

  • நா - நெடில்,
  • - குறில்,
  • ல் - ஒற்று .

மெய்யெழுத்துக்கள் - க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad