தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்: மணிவகை

தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சி்றப்பாகும். சான்றாக, தானியங்களுக்கு வழங்கும் சொற்கள் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.

பாடத்தலைப்புகள்(toc)

மணிவகை

தானியங்களுக்கு வழங்கும் சொற்கள் - Words for grains in tamil language 

  • கூலம்: நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள் ;
  • பயறு: அவரை, உளுந்து முதலியவை ;
  • கடலை: வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை;
  • விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து;
  • காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து;
  • முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து;
  • கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து;
  • தேங்காய்: தென்னையின் வித்து;
  • முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்.

தானியங்களுக்கு வழங்கும் சொற்கள் - Words for grains in tamil language
 

நினைவுகூர்க

சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். "தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்). 

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

அ) குலை வகை

ஆ) மணி வகை

இ) கொழுந்து வகை

ஈ) இலை வகை

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்வி

கூலம் என்பது என்ன ?

அ) தானியங்கள்

ஆ) மணி வகை

இ) கொழுந்து வகை

ஈ) இலை வகை

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad