- பாரதிதாசன் - இசையமுது என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல் விளக்கம்
- பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் உள்ள பாடல் விளக்கம்
- பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள இன்பத்தமிழ்க் கல்வி பாடல்
- பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
📕 TNPSC previous year questions and answers
(B) கவிஞர் வாணிதாசன்
(C) கவியரசர் கண்ணதாசன்
(D) கவிஞர் முடியரசன்
(E) விடை தெரியவில்லை
(B) கவிஞர் வாணிதாசன்
(C) பாவேந்தர் பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
(E) விடை தெரியவில்லை
- புதுச்சேரி அரசின் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக (State Song) விளங்கக்கூடியது "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்னும் புகழ்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஆகும்.
- நமது அன்னைத் தமிழைப் போற்றிடும் வகையில் இந்தப் பாடலை எழுதியவர் மற்றும் இயற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆவார்.
- மாணவர்களிடையே தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கும் (மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் "நீராரும் கடலுடுத்த...") புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கும் உள்ள வித்தியாசத்தைத் குழப்புவதற்காக TNPSC தேர்வுகளில் இந்த வினா அடிக்கடி இடம்பெறுகிறது.
- புதுச்சேரி மாநிலப் பாடல் என்றவுடன் நினைவுக்கு வர வேண்டியவர் பாரதிதாசன்.
"புதுச்சேரியின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தமிழின் செம்மையான வடிவத்தைத் தன் பாடல்களில் செதுக்கியவர் என்பதால், புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தும் அவரே இயற்றியுள்ளார் என எளிதாக நினைவில் கொள்ளலாம்!"
பாரதிதாசன் - 10 முக்கிய ஆசிரியர் குறிப்புகள்

வாழ்க்கை வரலாறு - பாவேந்தர் பாரதிதாசன் - Biography of bharathiyar
இருபதாம் நூற்றாண்டின் புரட்சிமிகு கருத்துக்களைப் பாக்களாய் வடித்துப் புகழ்பெற்றவர் பாவேந்தர் பாரதிதாசன். புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி தம்பதியருக்கு மகனாக 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று பிறந்த இவரது இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். இளமையிலேயே தமிழும் பிரெஞ்சு மொழியும் கற்றுத் தேர்ந்த இவர், மகாகவி பாரதியார் மீது கொண்ட பற்றினால் தன் பெயரை 'பாரதிதாசன்' என மாற்றிக் கொண்டார்.
புரட்சிக்கவிஞர்
சமூக சீர்திருத்தம், பெண்கல்வி, பகுத்தறிவு, கைம்பெண் மறுமணம் மற்றும் பொதுவுடைமைக் கருத்துகளைத் தன் பாடல்கள் மூலம் விதைத்தவர்.
இவர்தான் பாடல்கள் புரட்சி கருத்துக்கள் உடையவை.
📌 மக்கள் வாழ்க்கையிலே புரட்சி, சமுதாயத்திலே புரட்சி, உள்ளத்திலே புரட்சி எனப் புரட்சியை உண்டாக்கும் பாடல்களைப் பாடியமையால் இவர் புரட்சிக்கவிஞர் என அண்ணா அவர்களால் போற்றப்பட்டார்.
பயின்ற மொழிகள் & புலமை (Mozhigal):
பாரதிதாசன் அவர்கள் இளமையிலேயே தனது தாய்மொழியாம் தமிழ்ப் மொழியிலும், அப்பகுதி நடைமுறையில் இருந்த பிரெஞ்சு மொழியிலும் சிறந்த புலமை பெற்றிருந்தார். மேலும் ஆங்கிலம் மற்றும் பிற இலக்கிய நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர்.
பாரதியார் மீதான அன்பு (Bharathiyaridam Anbu):
புதுவையில் பாரதியாருடன் நெருங்கிப் பழகினார்; அவர் அன்பையும் பாராட்டையும் பெற்றார்; அதனால் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
✨பாரதியாரின் முன்னிலையில் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்னும் தம் பாடலை இவர் பாடினார். இப்பாடல்தான் இவரைப் 'பாரதிதாசன்' எனத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது என்பர்.
பன்முகத் தன்மை (Panmuga Thanmai):
பாரதிதாசன் அவர்கள் வெறும் கவிஞர் மட்டுமல்லாமல், பலதுறை ஆற்றல் கொண்ட ஒரு பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தார். இவர் தமிழாசிரியராய், இதழாசிரியராய், திரைப்படக் கதையாசிரியராய்ப் பணி புரிந்துள்ளார்.
-
இயற்கைக் கவிஞர் & புரட்சிக் கவிஞர்: சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தன் கவிதைகள் மூலம் புரட்சி வெடித்தவர். அதேசமயம் இயற்கையின் அழகை வர்ணிப்பதிலும் வல்லவர்.
இதழாளர் & ஆசிரியர்: 'குயில்' என்ற கவிதை இதழை நடத்தி அதன் மூலம் தமிழ் வளர்த்தவர். தமிழாசிரியராகப் பல மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டியவர்.
நாடக ஆசிரியர் & திரைக்கதை எழுத்தாளர்: சாகித்திய அகாதெமி விருது பெற்ற 'பிசிராந்தையார்' போன்ற பல வரலாற்று மற்றும் சமூக நாடகங்களையும், திரைப்படங்களுக்குத் தேவையான அருமையான கதைகளையும் எழுதியுள்ளார்.
சமூக சீர்திருத்தவாதி: பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பகுத்தறிவு மற்றும் பொதுவுடைமைக் கருத்துகளைத் தன் வாழ்நாள் முழுவதும் தன் பாடல்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
சிறப்புப்பெயர்கள்
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
- பாவேந்தர்
- 'பவளக்கவி' அல்லது இயற்கைக் கவிஞர்
- புரட்சிக் கவிஞர் - அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர்.
- பகுத்தறிவுக் கவிஞர்
சிறப்புகள்
- கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
- இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
- இவர் உரைநடை தனித்தன்மை வாய்ந்தது.
- இவர் நாடகங்கள் பலவும் எழுதியுளளார்.
விருதுகள்
படைப்புகள்
நூல்கள் மற்றும் படைப்புகள்
1. கவிதை நூல்கள் (Poetry Books)
- பாரதிதாசன் கவிதைகள்
- தமிழியக்கம்
- இசையமுது
- தமிழச்சியின் கத்தி
- குறிஞ்சித் திட்டு
- சஞ்சீவி பர்வதத்தின் காதல்
- எங்கள் தமிழ்
- இளைஞர் இலக்கியம்
- விழுதும் வேரும்
- அழகின் சிரிப்பு
- தேனருவி
- தமிழ்க் கைகூலி
- அமைதி
- காதலா கடமையா?
- நல்ல தீர்ப்பு
2. காப்பியங்கள் (Epics)
- பாண்டியன் பரிசு
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
3. நாடக நூல்கள் (Drama Books)
- பிசிராந்தையார்
- சேர தாண்டவம்
- முதியோர் காதல்
- சௌமியன்
- எதிர்பாராத முத்தம்
- மணிமேகலை வெண்பா
4. உரைநடை மற்றும் பிற நூல்கள் (Prose & Other Works)
- இருண்ட வீடு
- பெண்கல்வி
- படித்த பெண்கள்
- கிளையினுள் பாம்பு
📺video class
பாரதியார் குறித்த பாரதிதாசனின் புகழாரம்:
"பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை
கவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றான் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன்"
என்று பாவேந்தர் பாரதிதாசன் மகாகவி பாரதியாரை விவரிப்பது முற்றிலும் பொருந்தும்.
🌟 பாவேந்தர் பாரதிதாசன் பொன்மொழிகள் & மேற்கோள்கள் 🌟
| வ.எண் | பாவேந்தர் பாரதிதாசன் பொன்மொழிகள் & மேற்கோள்கள் |
|---|---|
| 1 | புதியதோர் உலகம் செய்வோம் |
| 2 | உயர்பரர் தாழ்பரர் எல்லாம் ஒப்பாகும் ஆய்விடுவார் உணர்வாய் நீ |
| 3 | இருட்டறையில் உள்ளதடா உலகம் |
| 4 | நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் |
| 5 | மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள் |
| 6 | தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் |
| 7 | தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் |
| 8 | கொலைவாளினை எடடா வெகு கொடியோர் செயல் அறவே |
| 9 | பாரடா உன் மானிட சமுத்திரத்தை |
| 10 | உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே |
| 11 | பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீர்த்தல் முயல் கொம்பே |
| 12 | ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பிலையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் |
| 13 | எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழுக்கென்று சங்கே முழங்கு |
| 14 | வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே |
| 15 | எங்கெங்கு காணினும் சக்தியடா |
| 16 | எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் எல்லாருக்கும் எல்லாம் ஏந்தி இருப்பதினால் |
| 17 | தமிழுக்குத் தொண்டு செய்வோம் சாவதில்லை |
| 18 | நூலைப் படி சங்கத் தமிழ் நூலைப் படி! |
| 19 | அகரமுதலி ஒன்றை நாளும் படிப்பாய்! |
| 20 | ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை! |
| 21 | இனிமேல் தமிழ்மொழி எமது! |
| 22 | பாரினில் அகத்தில் நல்ல கதிர் என வந்த பத்திரிக்கை நீதானே! |
நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார். கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.
'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பில்கீழ் உள்ள இன்பத்தமிழ் பாடல் விளக்கம்.
இன்பத்தமிழ்- இயல் ஒன்று 6ம் வகுப்பு - Bharathidasan Inba Tamil Poem Explanation
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
சொல்லும் பொருளும்
- நிருமித்த - உருவாக்கிய
- சமூகம் - மக்கள் குழு
- விளைவு - வளர்ச்சி
- அசதி - சோர்வு
பாடலின் பொருள்
- தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.
- தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.
- தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.
- தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
- தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.
- தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.
| பொருள் (Meaning) | உவமை (Metaphor) |
|---|---|
| சமூக வளர்ச்சி (Social Growth) | நீர் (Water) |
| வாழ்வு (Life) | ஊர் (Village) |
| இளமை (Youth) | பால் (Milk) |
| புலவர்கள் (Poets) | வேல் (Spear) |
| உயர்வு (Growth/Height) | வான் (Sky) |
| அறிவு (Knowledge) | தோள் (Shoulder) |
| கவிதை (Poetry) | வாள் (Sword) |
நூல் வெளி
இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise இன்பத் தமிழ் மதிப்பீடு Inba Tamil Book Back Answers
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற ................ அமைய வேண்டும்.
- அ) சமூகம்
- ஆ) நாடு
- இ) வீடு
- ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு .......... ஆக இருக்கும்.
- அ) மகிழ்ச்சி
- ஆ) கோபம்
- இ) வருத்தம்
- ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
- அ) நிலையென்று
- ஆ) நிலவென்று
- இ) நிலவன்று
- ஈ) நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
- அ) தமிழங்கள்
- ஆ) தமிழெங்கள்
- இ) தமிழுங்கள்
- ஈ) தமிழ்எங்கள்
5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- அ) அமுது + தென்று
- ஆ) அமுது + என்று
- இ) அமுது + ஒன்று
- ஈ) அமு + தென்று
6. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- அ) செம்மை + பயிர்
- ஆ) செம் + பயிர்
- இ) செமை + பயிர்
- ஈ) செம்பு + பயிர்
6th Standard இன்பத்தமிழ் பொருத்துக (Match the Following) விடைகள்: - பொருத்தப்பட்டுள்ளது
பொருத்துக - இன்பத்தமிழ்
| சொல் | பொருள் |
|---|---|
| விளைவுக்கு | நீர் |
| அறிவுக்கு | தோள் |
| இளமைக்கு | பால் |
| புலவர்க்கு | வேல் |
ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) பேர் - நேர்
பால் - வேல்
வான் - தேன்
Tip: TNPSC தேர்வில் "பொருத்துக" பகுதியில் பாரதிதாசனின் உவமைகள் (எ.கா: இளமைக்கு - பால், அறிவுக்கு - தோள்) அடிக்கடி கேட்கப்படும். எனவே அந்த அட்டவணையைத் தெளிவாகப் படித்துக் கொள்ளவும்.
குறுவினா
1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
விடை: அமுது, நிலவு, மணம்.
2. பாரதிதாசன் இயற்பெயர் என்ன?
விடை: சுப்புரத்தினம்.
சிறுவினா
1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
விடை:
- தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
- தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!
2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
விடை: நீர் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. மக்கள் ஆகிய சமூகத்தின் வளர்ச்சிக்கு நீர் இன்றியமையாதது.
3. பாரதிதாசன் குறிப்பு வரைக.
| பெயர் | : பாரதிதாசன் |
| இயற்பெயர் | : சுப்புரத்தினம் |
| பெற்றோர் | : கனகசபை - இலக்குமி |
| ஊர் | : புதுச்சேரி |
| கல்வி | : தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர். |
| இயற்றியவை | : குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் முதலியன. |
நிரப்புக
பாரதிதாசன் பிறந்தநாள்: 29.04.1891
Sources & References
- தமிழ் விக்கி - பாரதிதாசன்
- தமிழ் இணையக் கல்விக்கழகம் - பாரதிதாசன்
- 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி வாழ்த்து - பாரதியார்
- இசையமுது - பாவேந்தர் பாரதிதாசன்
- மயிலை சீனி வேங்கடசாமி வாழ்க்கை வரலாறு - தமிழ் ஆய்வாளர், நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் | 2026
- 42 ஓரெழுத்து ஒருமொழி: TNPSC & TET தேர்வுகளுக்கான முழுமையான விளக்கங்கள் (2026 Updated)
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு (TNPSC Group 4 VAO, 2, 2A, TET): இந்தப் பாடப்பகுதியின் முழுமையான இலக்கணக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாவிடைகளை PDF வடிவில் இலவசமாகப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
🎯 TNPSC வினாடி-வினா: இன்பத்தமிழ் - பாரதிதாசன்
1. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
2. "தமிழுக்கு அமுதென்று பேர்" - எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
3. பாரதிதாசன் எதன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை மாற்றிக் கொண்டார்?
4. தமிழே! உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் _________ - இப்பாடல் வரியில் விடுபட்ட சொல் எது?
5. 'நிருமித்த' என்ற சொல்லின் பொருள் யாது?
6. பாரதிதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாடக நூல் எது?
7. தமிழைப் 'புலவர்க்கு வேல்' என்று பாரதிதாசன் எதனோடு ஒப்பிடுகிறார்?
8. பாரதிதாசன் நடத்திய இதழின் பெயர் என்ன?
9. "இன்பத்தமிழ்" என்னும் பாடல் பாரதிதாசன் கவிதைகள் நூலில் எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது?
10. பாரதிதாசன் அவர்களுக்கு 'புரட்சிக்கவி' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

Hi Please, Do not Spam in Comments