தன்னேர் இலாத தமிழ் - தண்டியலங்காரம் | 12th Standard Tamil Unit 1 & TNPSC Notes

ManiMegala 0

**TNPSC Group 2, 4 முக்கியம்** 

தண்டியலங்காரம் = 12th Standard தமிழ்

ஆசிரியர்: தண்டி | காலம்: 12ம் நூற்றாண்டு

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்கள் எதுன்னு தெரியுமா? தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்,சந்திராலோகம்!

12-ஆம் வகுப்பு (12th Standard Tamil) பயிலும் மாணவர்கள் மற்றும் TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்காக, இயல் 1-ல் உள்ள 'தன்னேர் இலாத தமிழ் - தண்டியலங்காரம்' முழுமையான இலக்கணக் குறிப்புகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இக்கட்டுரையில், தண்டியலங்காரம் குறிப்புகள், தேர்வுக்கு மிக முக்கியமான இலக்கணக்குறிப்புபுணர்ச்சி விதிகள் (Punarchi Vidhigal) மற்றும் பகுபத உறுப்பிலக்கணம் (Pagupatha Uruppilakkanam) ஆகியவை எளிய அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பாடப்புத்தக வினா-விடைகளை (Book Back Q&A) எளிதில் புரிந்துகொள்ளவும், தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறவும் இந்த வழிகாட்டி பெரிதும் உதவும்.

அதுமட்டுமல்லாமல், உங்களது வெற்றியை உறுதி செய்ய முந்தைய ஆண்டு வினாக்களின் விரிவான பகுப்பாய்வு (Detailed PYQ Analysis), இலவசப் பாடக் குறிப்பு (Free PDF Download) மற்றும் உங்களில் யாருக்கு 10-க்கு 10 மதிப்பெண்கள் கிடைக்கப்போகிறது என்பதைச் சோதித்துப் பார்க்க 10 மதிப்பெண்களுக்கான நேரடி ஆன்லைன் தேர்வு (10 Marks Live Quiz) ஆகிய அனைத்தும் இதனுள் காத்துக் கொண்டிருக்கின்றன! பொதுத்தமிழ் இலக்கணப் பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெற்று, 10-க்கு 10 எடுக்கத் தயாராக உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்!

வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது தண்டி (Thandi) புலவரின் தன்னேர் இலாத தமிழ்(Thanneer Ilatha Tamil) பாடல் ஒன்று.

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

📕TNPSC previous year questions and answers

'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது எது?  CCSE4GT/2024
(A) மாறனலங்காரம்
(B) தண்டியலங்காரம்
(C) திவாகர நிகண்டு
(D) பிங்கல நிகண்டு
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (B) தண்டியலங்காரம்
வடமொழியில் எழுதப்பட்ட 'காவிய தரிசம்' (காவ்ய தரிசனம்) என்ற அணி இலக்கண நூலைத் தழுவி, தமிழில் பொ.ஆ. 12-ஆம் நூற்றாண்டில் தண்டி புலவரால் எழுதப்பட்ட நூலே தண்டியலங்காரம் ஆகும்.

தண்டியலங்காரம்(Thandiyalankaram) நூல் குறிப்பு 12ம் வகுப்பு பொதுத்தமிழ் இயல் ஒன்று 12th Tamil Unit 1 Notes

இலக்கண வகை : அணி இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் (எப்படி ஒரு கவிதையை அழகாக எழுத வேண்டும் என்று கூறும் நூல்) தண்டியலங்காரமும் ஒன்று.
பிரிவுகள்: இந்நூல் பொதுவணியியல்-25, பொருளணியியல்-64, சொல்லணியியல்-35 என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
சிறப்புகள் இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.
பெருங்காப்பியம் இந்த நூலில் அணிகளைப் பற்றி மட்டும் கூறாமல், ஒரு பெருங்காப்பியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தையும் விளக்கியுள்ளார்.
தழுவல் காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது (Kavyadarsam Tamil translation Thandiyalankaram).
ஆசிரியர் author தண்டி
தந்தை பெயர் வீரகாண்டி
சமயம் சமணம்
காலம் period பொ.ஆ ( கி.பி.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
Thandiyalankaram Thanneer Ilatha Tamil Poem Thanneer Ilatha Tamil Poem Meaning Diagram Illustration

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்கள் Ani Ilakkanam books in Tamil அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்
  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • குவலயானந்தம்
  • சந்திராலோகம்
  • தொல்காப்பியம்
  • வீரசோழியம்
  • இலக்கண விளக்கம்
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம்

நூல்வெளி

பாடப்பகுதி, பொருளணியியலில் இடம்பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். 

  • 'தமிழில்' அணியிலக்கணம் கூறும் நூல்களுள் தண்டியலங்காரம் முதல் நூலாகும்.
  • தண்டி என்பவரால் வடமொழியிலுள்ள "காவ்யதர்சம்" என்னும் நூலைக்தழுவி, இந்நூல் எழுதப்பெற்றது.
  • இந்நூல் பொதுவணியியல்-25, பொருளணியியல்-64, சொல்லணியியல்-35 என்னும் மூன்று இயல்களையும், 124 நூற்பாக்களையும் கொண்டுள்ளது.
  • பொதுவணியியலில் செய்யுள் வகை, அதன் இலக்கணம் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
  • பொருளணியியவில், தன்மையணி முதல் பாவிகவணி வரை 35 அணிகளின் இலக்கணமும் கூறப்பட்டுள்ளன:
  • சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரகவிகளின் இலக்கணம், வழு, வழுவமைதி ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
  • பெருங்காப்பியத்தின் இலக்கணமும் இந்நூலுன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலில் அணிகளைப் பற்றி மட்டும் கூறாமல், ஒரு பெருங்காப்பியம் எப்படி இருக்க வேண்டும் (அதன் அமைப்பு, கதைக் கரு, நாயகன் தகுதி போன்றவை) என்பதற்கான இலக்கணத்தையும் தண்டி புலவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
  • இந்நூலுக்குப் பின்னர், சந்திராலோகம், குவலாயனந்தம், மாறனலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.

🎥வீடியோ Class

 தண்டியலங்காரப் பாடலின் பொருளையும், தேர்வுக்கான முக்கிய இலக்கணக் குறிப்புகளையும் மிக எளிமையாகப் புரிந்துகொண்டு, 10-க்கு 10 மதிப்பெண்களை உறுதி செய்ய இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.

 

தன்னேர் இலாத தமிழ் (தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்) - தண்டி - Thanneer Ilatha Tamil Poem Meaning

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்*
- தண்டி

பாடலின் பொருள்:

  • ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, மக்களால் போற்றப்பட்டு, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று.

  • ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்

பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி ஒப்புவமை இல்லாது இருப்பது இன்னொன்று. 

  • மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; 

  • தன்னேர் இலாத தமிழ்*

இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.

பா வகை : இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா

💡 பா வகை விளக்கம் (Exam Tip):

  • நேரிசை வெண்பா: நான்கு அடிகளைக் கொண்டு, இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் (ஒரு குட்டி வார்த்தை - எ.கா: 'இருளகற்றும்-ஆங்கவற்றுள்') பெற்று வருவது நேரிசை வெண்பா ஆகும்.
  • இரு விகற்பம்: 'விகற்பம்' என்றால் எதுகை (இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது) என்று பொருள். இப்பாடலின் முதல் இரண்டு அடிகள் ஒரு வகையான எதுகையையும் (ஓங்கலிடை, ஈங்கொலிநீர் - 'ங்' எதுகை), அடுத்த இரண்டு அடிகள் வேறொரு வகையான எதுகையையும் (மின்னேர், தன்னேர் - 'ன்' எதுகை) பெற்று, இரண்டு வகையான எதுகை அமைப்புகளில் வந்துள்ளதால் இது இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா என அழைக்கப்படுகிறது.

அணி : பொருள் வேற்றுமை அணி(Porul Vetrumai Ani with explanation)

விளக்கம் : இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால், இது, 'பொருள் வேற்றுமை அணி' ஆயிற்று. 

  • ஒற்றுமை: கதிரவனும் தமிழும் இருளைப் போக்குகின்றன.
  • வேற்றுமை: கதிரவன் புற இருளைப் போக்கும்; தமிழ் மக்களின் அக இருளை (அறியாமை) போக்கும், மேலும் தமிழுக்கு நிகரே இல்லை!

இது, வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

அணியிலக்கணம் பற்றி அறிய

அணியிலக்கணம் விளக்கம் 

இலக்கணக்குறிப்பு - 12th Tamil Grammar notes

No. சொல் இலக்கணக்குறிப்பு
1 உயர்ந்தோர் வினையாலணையும் பெயர்
2 வெங்கதிர் பண்புத்தொகை
3 இலாத இல்லாத என்பதன் இடைக்குறை

உறுப்பிலக்கணம் - Thandiyalankaram Ilakkanam Notes

உறுப்பிலக்கணம் விளக்கம் (Pagupatha Uruppilakkanam) 
No. சொல் உறுப்பிலக்கணம்
1 வந்து = வா(வ) + த் (ந்) + த் + உ
2 உயர்ந்தோர் = உயர் + த் (ந்) + த் + ஓர்
  • உயர் - பகுதி
  • த் - சந்தி ; த் (ந்) ஆனது விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை
  • ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி.
  • (ஆர் என்பதன் ஈற்றயலெழுத்தான 'ஆ' 'ஓ' ஆகத் திரியும்-நன். 353)
3 விளங்கி = விளங்கு + இ
  • விளங்கு- பகுதி
  • இ - வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

புணர்ச்சி விளக்கம்
No. சொல் புணர்ச்சி விதி
1 ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
2 தனியாழி = தனி + ஆழி
3 வெங்கதிர் = வெம்மை + கதிர்

கற்பவை கற்றபின் Thandiyalankaram book back questions and answers

'தன்னேர் இலாத தமிழ்' என்னும் தலைப்பில் சொற்பொழிவில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை ஒன்றை உருவாக்குக.

வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் பலர் போற்றுவர். 

நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும், அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது தண்டி புலவரின் 'தன்னேர் இலாத தமிழ்' பாடல் ஒன்று.

'தன்னேர் இலாத தமிழ்' என்பதன் பொருள் 'தனக்கு நிகரில்லாத தமிழ்'.

உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, மக்களால் போற்றப்பட்டு, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது கதிரவன்.

பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி அகற்றுவது தமிழ்

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமை பல. அவற்றுள் மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி அகற்றுவது தமிழ். எனவே 'தன்னேரிலாதது தமிழ்' அதாவது தனக்கு நிகரில்லாத தமிழ்.

Sources & References

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

🎯 தண்டியலங்காரம் - ஆன்லைன் மாதிரித் தேர்வு (10 Questions)

1. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்களில் பொருந்தாதது எது?

2. வெம்மை + கதிர் இவற்றை சேர்த்து எழுதக் கிடைப்பது எது?

3. 'ஆங்கவற்றுள்' - இதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

4. 'உயர்ந்தோர்' - என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

5. 'வெங்கதிர்' - என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

6. 'இல்லாத' என்பதன் இடைக்குறை எது?

7. 'தன்னேர் இலாத தமிழ்' என்று தமிழை சிறப்பித்துக் கூறும் நூல் எது?

8. தண்டி புலவரின் காலம் என்ன?

9. தண்டியலங்காரம் எவ்வகை நூலைத் தழுவி எழுதப்பட்டது?

10. 'தன்னேர் இலாத தமிழ்' இப்பாடலில் பயின்று வரும் அணியைக் குறிப்பிடுக:

🎯 உங்கள் மதிப்பெண்: 0 / 10

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad