42 நன்னூல் + 70 அகராதி ஓரெழுத்து ஒருமொழி: TNPSC & TET தேர்வுகளுக்கான முழுமையான விளக்கங்கள் (2026 Updated)

ManiMegala 1

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள TNPSC Group 4, VAO, 2, 2A மற்றும் TET தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தில் (Tamil Grammar) TNPSC General Tamil அலகு II: சொல்லகராதி: "ஓரெழுத்து ஒருமொழி" (Oru Eluthu Oru Mozhi) பகுதி எந்த அளவுக்கு முக்கியமானது தெரியுமா? கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC Group 2/2A பொதுத்தமிழ் வினாத்தாளில் மட்டுமே இப்பகுதியிலிருந்து 3 வினாக்கள் (3 Questions) நேரடியாகக் கேட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது!  

பொதுவாகப் பாடப்புத்தகங்களில் உள்ள தொல்காப்பியர் - 7 நெட்டெழுத்துகள், நன்னூலார் - 42 ஓரெழுத்து ஒருமொழிகள்  படித்துவிட்டுத் தேர்வுக்குச் சென்றால் முழு மதிப்பெண் பெறுவது கடினம். ஏனென்றால், சமீபத்திய டிஎன்பிஎஸ்சி அசல் வினாத்தாள்களில் பாடப்புத்தகங்களைத் தாண்டி வினாக்கள் கேட்கப்படுவதால், இவற்றுடன் சேர்த்து கழகத் தமிழ் அகராதி மற்றும் பவானந்தர் அகராதி நூல்களில் உள்ள மிக முக்கியமான மொத்த 70 ஓரெழுத்து ஒருமொழிகளையும், அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, அசல் பொருள் விளக்கங்களுடன் இந்த ஒரே பதிவில் வழங்கியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், உங்களது வெற்றியை உறுதி செய்ய முந்தைய ஆண்டு வினாக்களின் விரிவான பகுப்பாய்வு (Detailed PYQ Analysis), இலவசப் பாடக் குறிப்பு (Free PDF Download) மற்றும் உங்களில் யாருக்கு 10-க்கு 10 மதிப்பெண்கள் கிடைக்கப்போகிறது என்பதைச் சோதித்துப் பார்க்க 10 மதிப்பெண்களுக்கான நேரடி ஆன்லைன் தேர்வு (10 Marks Live Quiz) ஆகிய அனைத்தும் இதனுள் காத்துக் கொண்டிருக்கின்றன! பொதுத்தமிழ் இலக்கணப் பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெற்று, 10-க்கு 10 எடுக்கத் தயாராக உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்!

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

📕TNPSC previous year questions and answers

1. ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக: CCSE2-2AT/2025
  • (a) க
  • (b) கா
  • (c) தே
  • (d) நி
  • 1. உறுதி
  • 2. கொள்ளுகை
  • 3. பறவை
  • 4. தராசு
(a)(b)(c)(d)
(A)4321
(B)4132
(C)3412
(D)3421
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (D) 3 4 2 1
க (3) - பறவை (கூகை)
கா (4) - தராசு (துலாக்கோல்)
தே (2) - கொள்ளுகை (மூத்தல்/வாங்குதல்)
நி (1) - உறுதி (நிச்சயம்)
2. நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை? CCSEIVGT/2025
(A) 42
(B) 40
(C) 82
(D) 70
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (D) 70
நன்னூல் 42 எழுத்துக்களைக் குறிப்பிட்டாலும், இந்த மூன்று முக்கிய அகராதிகளையும் கொண்டு விரிவாகத் தொகுக்கப்பட்ட மொத்த ஓரெழுத்து ஒரு மொழிகள் 70 ஆகும்.
3. 'ஐ' - எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் CCSE4GT/2024
(A) அரசன்
(B) வீரன்
(C) ஒற்றன்
(D) தலைவன்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (D) தலைவன்
என்பதன் முதன்மைப் பொருள் தலைவன், அழகு, அரசன், வியப்பு என்பதாகும்.
4. 'ம, மா' - பொருள் கண்டறிக: CCSE2T/2024
(A) வண்டு, ஆகாயம்
(B) இயமன், இளமை
(C) மண், மான்
(D) இயமன், வண்டு
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (D) இயமன், வண்டு
- இயமன், மா - வண்டு (அளபெடையில் பொருள் மாறுபாடு கொள்வது).
5. சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க: CCSE2T/2024
(A) தே - தேடுதல்
(B) மீ - வான்
(C) ஏ - ஏற்றம்
(D) நா - நான்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (B) மீ - வான்
மீ என்பதன் சரியான பொருள் வான் (மேலே, ஆகாயம்) என்பதாகும்.
6. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளை அறிந்து பொருத்துக: CCSE2T/2024
  • (a) பை
  • (b) மே
  • (c) வை
  • (d) து
  • 1. உண்
  • 2. புல்
  • 3. அன்பு
  • 4. இளமை
(a)(b)(c)(d)
(A)1342
(B)3412
(C)1234
(D)4321
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (D) 4 3 2 1
பை (4) - இளமை (பசுமை)
மே (3) - அன்பு (மேம்பாடு / உயர்வு)
வை (2) - புல் (வைக்கோல்)
து (1) - உண் (உணவு)

ஓரெழுத்து ஒருமொழி(Or Ezhuthu Oru Mozhi) - Tamil Grammar Shortcuts for Competitive Exams

தமிழில் சொல்லின் முதலில் வரும் எழுத்து, இடையில் வரும் எழுத்து, இறுதியில் வரும் எழுத்து, ஒன்றையொன்று அடுத்து வரும் எழுத்து என வரம்பு உண்டு. அதன்படி எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா. சில எழுத்துகள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை மொழிநிலையில் இடம்பெறா. இவற்றைப் போலவே நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் உண்டு. 

ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.

இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

  • ஆ  - பசு🐄
  • ஈ   - கொடு

தமிழ் இலக்கண அறிஞர்களிடையே ஓரெழுத்து ஒருமொழி குறித்த வகைப்பாட்டில் சில வேறுபாடுகள் உள்ளன:

தொல்காப்பியர்: 7 நெட்டெழுத்துகள் மட்டுமே ஓரெழுத்து ஒருமொழி - Tholkappiyar

7 நெட்டெழுத்துகள் மட்டுமே ஓரெழுத்து ஒருமொழியாக வரும் என்றும், 5 குற்றெழுத்துகள் தனித்து நின்று பொருள் தராது என்றும் கூறினார்.

  • ஓர் எழுத்து மொழி எவை எனின் நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) என்பார் தொல்காப்பியர். தமிழில் உள்ள நெட்டெழுத்துகள் (நெடில் எழுத்துகள்) மட்டுமே தனித்து நின்று ஒரு சொல்லாக மாறிப் பொருள் தரும் தகுதி பெற்றவை என்கிறார் தொல்காப்பியர்.
  • குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே (அ, இ, உ, எ, ஒ) என்பார். 'குற்றெழுத்து' என்றால் குறில் எழுத்துகள் (அ, இ, உ, எ, ஒ). இந்த ஐந்து குறில் எழுத்துகளும் (அவற்றின் உயிர்மெய் வடிவங்களான க, ச, த, ப... உட்பட) தனித்து ஒற்றை எழுத்தாக நின்று ஒரு முழுமையான சொல்லாகப் பொருள் தராது (மொழிநிறைபு இல்லை) என்கிறார்.

❓ ஒரு முக்கியச் சந்தேகம்: தொல்காப்பியர் 'நெட்டெழுத்து ஏழே' என்றது உயிர் நெடிலையா?

இல்லை! "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி" என்று தொல்காப்பியர் கூறும்போது, அவர் வெறும் 7 உயிர் எழுத்துகளை மட்டும் குறிப்பிடவில்லை.

அவர் "உயிர் நெடில்" என்று மட்டும் சொல்லியிருந்தால், 126 உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் (கா, சா, தா...) விடுபட்டிருக்கும். அதேபோல் "உயிர்மெய் நெடில்" என்று மட்டும் சொல்லியிருந்தால், 7 உயிர் நெட்டெழுத்துக்கள் விடுபட்டிருக்கும்.

மாணவர்களுக்கு இந்த ஐயம் (குழப்பம்) வரக்கூடாது என்பதற்காகத்தான் அவர் பொதுவாக "நெட்டெழுத்து" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

💡 இதன் உண்மையான பொருள் என்ன?

தமிழில் உள்ள மொத்த நெட்டெழுத்துர்களில் (உயிர் நெடில் 7 + உயிர்மெய் நெடில் 119 ஆகிய இரண்டையும் சேர்த்து), பொருள் தரக்கூடிய தகுதியுள்ள 7 நெட்டெழுத்து வரிசைகள் (Families) மட்டுமே ஓரெழுத்து ஒருமொழியாக வரும் என்பதுதான் தொல்காப்பியரின் கருத்து. அவையாவன:

  1. ஆ வரிசை (எ.கா: ஆ - பசு, கா - சோலை, தா - கொடு, பா - பாடல், மா - விலங்கு)
  2. ஈ வரிசை (எ.கா: ஈ - கொடு, தீ - நெருப்பு, நீ - நின்னை, மீ - மேலே, வீ - மலர்)
  3. ஊ வரிசை (எ.கா: ஊ - தசை, கூ - பூமி, தூ - வெண்மை, பூ - மலர், மூ - முதுமை)
  4. ஏ வரிசை (எ.கா: ஏ - அம்பு, சே - எருது, தே - தெய்வம், நே - அன்பு, பே - மேகம்)
  5. ஐ வரிசை (எ.கா: ஐ - தலைவன், கை - உறுப்பு, தை - மாதம், பை - பசுமை, மை - இருள்)
  6. ஓ வரிசை (எ.கா: ஓ - மதகு, கோ - அரசன், சோ - மதில், நோ - நோய், மோ - முகர்தல்)
  7. ஔ வரிசை (எ.கா: கௌ - பற்று, வௌ - கவ்வு)
பழங்கால இலக்கணத்திற்கும் இன்றைய நடைமுறைக்கும் சில மாற்றங்கள் உள்ளன: வழக்கொழிந்த சொற்கள்: நன்னூல் குறிப்பிட்ட சில சொற்கள் (உதாரணமாக: வௌ - கவர்) இன்று பேச்சுவழக்கில் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன.

💡 இலக்கணக் குறிப்பு: நெடில் vs நெட்டெழுத்து வித்தியாசம் என்ன?

தமிழ் இலக்கணத்தில் நெடில், நெட்டெழுத்து ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் குறிப்பது போலத் தோன்றினாலும், அவற்றுக்கு இடையே ஒரு நுட்பமான வேறுபாடு உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், நெட்டெழுத்து என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கும் பெயர்; நெடில் என்பது அந்த எழுத்து ஒலிக்கும் கால அளவைக் (மாத்திரை) குறிக்கும் பெயர்.

அம்சம் நெட்டெழுத்து நெடில்
அடிப்படை எழுத்தின் இலக்கண வகை அல்லது வடிவத்தைக் குறிக்கும். எழுத்து ஒலிக்கும் கால அளவை (ஓசை) அடிப்படையாகக் கொண்டது.
மாத்திரை அளவு மாத்திரை அளவை நேரடியாகக் குறிக்காது. எழும்போது எப்போதும் 2 மாத்திரை கால அளவையே குறிக்கும்.
மொத்த எண்ணிக்கை தமிழில் மொத்தம் 126 நெட்டெழுத்துகள் உள்ளன (உயிர் நெடி‌ல் 7 + உயிர்மெய் நெடி‌ல் 119). கால அளவைக் குறிப்பதால் எண்ணிக்கைக்குள் அடங்காது (ஒலி வடிவமே பிரதானம்).
பயன்பாடு எழுத்ததிகாரத்தில் எழுத்துகளைப் பட்டியலிடப் பயன்படும். யாப்பிலக்கணத்தில் செய்யுள் அசை (நேரசை/நிரையசை) பிரிக்கப் பயன்படும்.

📌 உதாரணம்: "ஆ" என்ற எழுத்து தன் வடிவத்தால் ஒரு நெட்டெழுத்து; அது ஒலிக்கும் ஓசையின் கால அளவால் (2 மாத்திரை) ஒரு நெடில் ஆகும்.

நன்னூல்படி, ஓரெழுத்து ஒரு மொழி 42 எழுத்துக்கள் - Nannool Grammar Rules

தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.

தமிழில் உள்ள 256 எழுத்துக்களில் ஒரேழுத்து ஒரு மொழி எண்ணிக்கை நன்னூல்படி, 42 ஆகும். 

42 எழுத்துக்களுக்கு தனிப்பெயர்கள் உண்டு.

மொத்த ஓரெழுத்து ஒருமொழிகள்42
நெடில் எழுத்துக்கள்40
குறில் எழுத்துக்கள்2 (நொ, து)


42 எழுத்துகளையும் எளிதாகப் படிக்க அவை இனங்களாகப் (Groups) பிரிக்கப்பட்டுள்ளன:

42 ஓரெழுத்து ஒருமொழி பட்டியல்

"உயிர்மா வின்ஆறும் தபநா வின்ஐந்தும் கவச வின்நாலும் யவ்வின் ஒன்றும் ஆகும் நெடில்நொ துஆம்குறில் இரண்டோடு ஓரெழுத்து இயல்பதம் ஆறுஏழ் சிறப்பினவே." - நன்னூல் 129
நன்னூலார் பிரித்துக் காட்டிய கணிதப் பகிர்வு இதோ:
வகை (Category)இனம்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓஉயிர் வருக்கத்தில் ஆறு Vowel Family 
மா, மீ, மூ, மை,மோ, மே
மகர வருக்கத்தில் ஆறு 'Ma' Family
தா, தீ, தூ, தே, தை
தகர வருக்கத்தில் ஐந்து 
பா, பூ, பே, பை, போ
பகர வருக்கத்தில் ஐந்து
நா, நீ, நே , நை, நோநகர வருக்கத்தில் ஐந்து
கா,கூ, கை, கோககர வருக்கத்தில் நான்கு
வா, வீ, வை, வௌவகர வருக்கத்தில் நான்கு
சா, சீ, சே, சோசகர வருக்கத்தில் நான்கு
யாயகர வருக்கத்தில் ஒன்று 'Ya' Family:
நொ, துதனிக் குறில் பதம் இரண்டு Short Letters

ஆக ஓரெழுத்து மொழிகள் தமிழில் நாற்பத்திரண்டு

💡 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான முக்கியக் குறிப்பு: பொதுவாகத் தமிழ் இலக்கணத்தில் நன்னூலார் குறிப்பிட்ட 42 ஓரெழுத்து ஒருமொழிகள் மட்டுமே பரவலாகப் படிக்கப்படுகின்றன. ஆனால், அண்மைக்கால டிஎன்பிஎஸ்சி (TNPSC) அசல் வினாத்தாள்களில் பாடப்புத்தகங்களைத் தாண்டி, கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925) மற்றும் வெற்றித் தமிழ் அகராதி (1992) ஆகிய மூன்று முதன்மையான அகராதிகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட மொத்த 70 ஓரெழுத்து ஒருமொழிகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. எனவே, தேர்வில் முழு மதிப்பெண்களைப் பெற 42 எழுத்துக்களுடன் சேர்த்து, இந்த 70 ஓரெழுத்து ஒருமொழிகளையும் அவற்றின் அசல் பொருள் விளக்கங்களுடன் ஆழமாகப் படிப்பது மிக அவசியமாகும்.

இப்பதிவில் வழங்கப்பட்டுள்ள 70 ஓரெழுத்து ஒருமொழிகளையும், அவற்றின் அசல் பொருள் விளக்கங்களையும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கும் பிரத்யேகக் காணொளி (Video) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதர 70 விரிவான அகராதிச் சொற்கள் மற்றும் அதன் விளக்கக் குறிப்புகள் கீழே மாதிரித் தேர்வுக்கு முன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன.

🔍

42 ஓரெழுத்து ஒருமொழிகள் மற்றும் அவற்றின் பொருளும் - Tamil Single Letter Words Table and Meanings Group by Category

வகை (Category) ஓரெழுத்து ஒருமொழி & பொருள்
உயிர் இனம் (6) - பசு🐄 | - பறக்கும் பூச்சி, கொடு | - இறைச்சி | - அம்பு➽ | - அழகு, தலைவன், வியப்பு | - வியப்பு, வினா❓, மதகுநீர் தாங்கும் பலகை
'ம்' இனம் (6) மா - பெரிய, சிறந்த உயர்ந்த மாமரம்🌴, அழகு, மேன்மை, விலங்கு | மீ - மேலே, உயர்ச்சி, வான் | மு - மூப்பு, முதுமை | மே - மேன்மை, அன்பு | மை - கண்மை (கருமை), அஞ்சனம் | மோ - முகர்தல், மோத்தல் முகத்தல்
'த்' இனம் (5+1) தா - கொடு, கேட்பது | தீ - நெருப்பு🔥, தீமை | தூ - வெண்மை, தூய்மை | தே - கடவுள் | தை - தமிழ்மாதம், தைத்தல் | து - (குறில்) கெடு, பிரிவு, உண்
'ப்' இனம் (5) பா - பாட்டு, பாடல் | பூ - மலர்🌺, புவி | பே - நுரை, மேகம்⛅☁  | பை - இளமை, கைப்பை | போ - செல்
'ந்' இனம் (5+1) நா - நாக்கு, நாவு👅 | நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல் | நே - அன்பு | நை - வருந்து, இழிவு | நோ - வறுமை | நொ - (குறில்) துன்பம், நோய்
'க்' இனம் (4) கா - காத்தல், சோலை | கூ - பூமி🌍 | கை - உறுப்பு, கரம், ஒழுக்கம் | கோ - வேந்தன், அரசன்
'ச்' இனம் (4) சா - மரணம், பேய், இறந்துபோ | சீ - இகழ்ச்சி | சே - எருது🐂, உயர்வு | சோ - மதில், அரண்
'வ்' இனம் (4) வா - வருக, அழைத்தல் | வீ - மலர் | வை - வைத்தல், புல் | வௌ - வவ்வுதல், கெளவுதல், கவர்
'ய்' இனம் (1) யா - ஒரு வகை மரம், யாவை, அகலம்

📚 கழகத் தமிழ், பவானந்தர் & வெற்றித் தமிழ் அகராதில உள்ள முக்கிய ஓரெழுத்து ஒருமொழிகள் (70 சொற்கள்)

அண்மைக்கால தேர்வுகளில் இதில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன:

எண் ஓரெழுத்து அகராதி தரும் முழுமையான பொருள் விளக்கம் (கழகத் தமிழ் / பவானந்தர் அகராதி)
1பசு, சிவன், பிரம்மன், விஷ்ணு, எட்டு, அழகு
2பசு, ஆச்சாமரம், இரக்கம், நினைவு, வினா, எருது
3அதிசயம், இங்கிதம், லட்சுமி, உலகமாதா, இந்திரன்
4கொடு, ஈகை, தேனீ, அம்பு, கத்தி, அரைநாள்
5சிவன், பிரம்மன், ஆச்சரியம், சுட்டெழுத்து, உமாதேவி
6இறைச்சி, உணவு, ஊன், தசை, வலிமை, நாவாய்
7வினா, ஏழு, எட்டாம் எண், வியப்பு
8அம்பு, ஏவுதல், உயர்வு, அடுக்கு, பெருமை, கூர்மை
9தலைவன், அழகு, அரசன், வியப்பு, தந்தை, ஐந்து
10ஒப்பற்ற, வினா, மதகுநீர் தாங்கும் பலகை
11மதகுநீர் தாங்கும் பலகை, பிரணவம், வினா, உயர்வு
12பூமி, கடகம், கூச்சல், விஷ்ணு, சாந்தி
13பறவை (கூகை), நெருப்பு, அரசன், காற்று, பிரம்மன், உடல்
14காசோலை, காத்தல், தராசு (துலாக்கோல்), காவடி, சுமை
15கிகிளி, கிண்டல், ஒலிக்குறிப்பு
16குபூமி, குற்றம், சிறுமை, கூவுதல், நரக லோகம்
17கூபூமி, கூக்குரல், கூகை, உலகம், கூவுதல்
18கைஉறுப்பு, ஒழுக்கம், சிறகு, தங்கை, இடம், வரிசை
19கொகொள்ளுதல், வெட்டுதல், வளைவு
20கோஅரசன், பசு, பறவை, தந்தை, மேகம், கண், பூமி, நீர்
21கௌகொள்ளுதல், தீங்கு, பற்றுதல், கௌவுதல்
22சிரிப்பு, சாவு, சிவப்பு, நடத்தல்
23சாஇறப்பு, சாதல், மரணம், பேய், சோர்தல்
24சிஇகழ்ச்சி, திருமகள், கலைமகள், சிரிப்பு, அறிவு
25சீஇகழ்ச்சி, லட்சுமி, சீழ், நிந்தனை, அழகு
26சுஅழகு, மங்களம், சுகம், சுக்கு, வெப்பம்
27சேஎருது, சிவப்பு, அழிவு, மரம், உயர்வு
28சோமதில், அரண், சோலை, ஒளி, நகரம்
29ஞாபொருந்து, கட்டுதல், சூடுதல், உணர்தல்
30தாகொடு, கேட்பது, தாண்டுதல், பகை, அழிவு, குறைவு
31தீநெருப்பு, கோபம், நரகம், தீமை, அறிவு, கொடூரம்
32துஉண், தராசு (துலாக்கோல்), உணவு, அனுபவம், பிரிவு
33தூவெண்மை, தூய்மை, இறைச்சி, பறவை இறகு, வலிமை
34தேகொள்ளுகை (மூத்தல்), உறுதி, தெய்வம், நாயகன், அருள்
35தைமாதம், தையல், தைத்தல், அலங்கரித்தல், பழித்தல்
36தொதொடுதல், பழைமை, வளைவு, வெட்டுதல்
37தோதோள், தோல்வி, அழகு, தோணி
38நன்மை, நாக்கு, வளைவு
39நாநாக்கு, அயலார், நடுநிலை, சொல், பிறப்பு
40நிஉறுதி (நிச்சயம்), நிச்சயம் செய்தல், இல்லாமை
41நீநின்னை, நீக்குதல், இகழ்ச்சி, உயர்நிலை
42நுயானை, நுண்மை, கூர்மை, தோணி
43நெநெல், நெய், திலகம், அன்பு
44நேஅன்பு, அருள், நேயம், சமம், நேராக இருத்தல்
45நைவருந்துதல், நைதல், இகழ்ச்சி, பழமையாதல்
46நொநோய், துன்பம், வருத்தம், வறுமை, நொடித்தல்
47நோநோய், துன்பம், பொறுத்தல், பலவீனம், நோவு
48நௌமரக்கலம், கப்பல், தோணி
49பாடல், பரப்பு, அழகு, காற்று
50பாபாடல், நிழல், அழகு, பரப்பு, தூய்மை, நெசவுப் பா
51பூமலர், பூமி, பிறப்பு, அழகு, தாமரை, சுத்தம்
52பேமேகம், அச்சம், நுரை, பெரிய, பேய்மை
53பைஇளமை, பசுமை, உறை, அழகு, கைப்பை, பாம்புப் படம்
54பொபொன், அழகு, பொலிவு, புள்ளி
55போசெல்லுதல், நீங்குதல், மறைதல், கட்டளைச் சொல்
56மகிழ்ச்சி, காலம், நஞ்சு, இயமன்
57மாபெரிய, விலங்கு, இயமன், மரம், வண்டு, செல்வம், மாமரம்
58மாஅவண்டு (செய்யுளிசை அளபெடையில் வரும் சிறப்பு வடிவம்)
59மீமேலே, வான், ஆகாயம், உயர்வு, உடம்பு
60முமூப்பு, முதிர்ச்சி, முதன்மை, மூக்கு
61மூமூப்பு, முதுமை, மூன்று என்னும் எண், அழிவு
62மேஅன்பு, மேம்பாடு, உயர்வு, மேகம், மேலைத்திசை
63மைஅன்பு, இருள், அஞ்சனம் (கண் மை), மேகம், ஆடு, குற்றம்
64மோமுகர்தல், முகப்பகுதி, மோதல், தொடக்கம்
65யாஒருவகை மரம், அகலம், கட்டுதல், யாவர் என்னும் வினா
66வாவருகை, கட்டளை, அழைத்தல், தாவுதல்
67வீமலர், மரணம், அழிவு, பறவை, மலர்தல், நீங்குதல்
68வேஉளவு, வேவு, மறைவு, வேம்பு, உளவு பார்த்தல்
69வைபுல் (வைக்கோல்), கூர்மை, வைப்பு, வைத்தல், வசைபாடுதல்
70வௌகவ்வுதல், கொள்ளையடித்தல், பற்றுதல், திருடுதல்

நினைவுகூர்க

நன்னூலார் போட்ட பட்டியலில் உள்ளவை பற்றிக் கருதாமல் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்தால் சில விளக்கங்கள் கிட்டும். நன்னூலார் கூறிய சில ஓரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லாதவை என்றும், வழக்கிலுள்ள சில ஓரெழுத்து ஒரு மொழிகள் நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லாதவை என்றும் தெளிவு ஏற்படும். 

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.

என்ன நண்பர்களே! தொல்காப்பியரின் இலக்கண விதிகள் முதல் நன்னூலார் காட்டிய 42 எழுத்துக்கள், மற்றும் நாம் பிரத்தியேகமாகத் தொகுத்த 70 அகராதிச் சொற்கள் வரை "ஓரெழுத்து ஒருமொழி" பகுதியை முழுமையாகப் படித்து முடித்துவிட்டீர்களா?

கடந்த 2024 Group 2 தேர்வில் கேட்ட 3 வினாக்களைப் போல, இனி வரும் 2026 TNPSC & TET தேர்வுகளில் எங்கு இருந்து கேள்வி கேட்டாலும் உங்களால் 100% மிகச் சரியான விடையை அளிக்க முடியும் என்று நம்புகிறேன்!

மறக்காமல் மேலே உள்ள 10 மதிப்பெண்களுக்கான ஆன்லைன் தேர்வை (Live Quiz) எழுதி, உங்களது மதிப்பெண் என்ன என்பதை கீழே கமெண்ட் (Comment) பகுதியில் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். யாருக்கு 10-க்கு 10 முழு மதிப்பெண்கள் கிடைக்கிறது என்று நானும் பார்க்கிறேன்! இந்தத் தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், உங்களைப் போலத் தேர்வுக்குப் படிக்கும் உங்கள் நண்பர்களுக்கும், வாட்ஸ்அப் குழுக்களிலும் உடனே Share செய்து உதவுங்கள். உங்களின் வெற்றிப் பயணத்தில் என்றும் துணையாக... நன்றி, வணக்கம்!

பொருத்துக - 1 (Matching)

ஓரெழுத்து அதன் பொருள்
கா சோலை
தா கொடு
நா நாக்கு
பா பாடல்

பொருத்துக - 2 (Matching)

ஓரெழுத்து அதன் பொருள்
சோ அரண்
கோ அரசன்
அம்பு
தலைவன்

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழிகளை எடுத்து எழுதுக.

(ஏ, தீ, கோ, பூ, ஐ, சோ)

எண்ஓரெழுத்துஅதன் பொருள்
1சோஅரண்
2கோஅரசன்
3அம்பு
4தலைவன்
5தீநெருப்பு
6பூமலர்

அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை உரிய கட்டத்தில் நிரப்புக.

(பாடல், சோலை, வருக, பசு, கொடு, நாக்கு)

எண் ஓரெழுத்து அதன் பொருள்
1 கா சோலை
2 தா கொடு
3 நா நாக்கு
4 பா பாடல்
5 வா வருக
6 பசு

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உணர்த்தும் ஓரெழுத்து ஒருமொழிகளை அறிந்து தொடரை நிரப்புக.

(வா, கை, ஈ, சீ, போ,ஆ)

எண் குறிப்பு ஓரெழுத்து
1 நான் கொடுக்கும் ஓர் எழுத்து கை
2 நான் அழைக்கும் ஓர் எழுத்து வா
3 நான் வாயைத்திறக்க வைக்கும் ஓர் எழுத்து
4 நான் இகழும் ஓர் எழுத்து சீ
5 நான் பறக்கும் ஓர் எழுத்து
6 நான் வழி அனுப்பும் ஓர் எழுத்து போ

தொடர்புடையவை

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை 42 Or Ezhuthu Oru Mozhi with Meanings PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

🎯 ஓரெழுத்து ஒருமொழி - ஆன்லைன் மாதிரித் தேர்வு (10 Questions)

1. 'மதில்' என்ற பொருளைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

2. 'ஊ' என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்கும் பொருள் யாது?

3. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது யாருடைய கூற்று?

4. 'அம்பு' என்பதைக் குறிக்கும் சரியான ஓரெழுத்து ஒரு மொழி எது?

5. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் யார்?

6. 'மேகம்' என்ற பொருளை உணர்த்தும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

7. 'மூப்பு' என்ற பொருளுக்குரிய ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டறிக.

8. 'நோய்' என்ற பொருளைக் குறிக்கும் குறில் ஓரெழுத்து ஒரு மொழி எது?

9. 'மலர்' என்ற பொருளைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

10. 'எருது' என்ற பொருளைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

🎯 உங்கள் மதிப்பெண்: 0 / 10

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hi Please, Do not Spam in Comments

Top Post Ad