42 ஓரெழுத்து ஒருமொழி: TNPSC & TET தேர்வுகளுக்கான முழுமையான விளக்கங்கள் (2026 Updated)

ManiMegala 1

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள TNPSC Group 4, VAO,2, 2A மற்றும் TET தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு "ஓரெழுத்து ஒருமொழி" (Or Eluthu Oru Mozhi) பகுதி மிகவும் முக்கியமானதாகும். நன்னூலார் வகைப்படுத்திய 42 ஓரெழுத்து ஒருமொழிகளையும், அவற்றுக்கான சரியான பொருள்களையும் மிக எளிமையான அட்டவணை மற்றும் நினைவாற்றல் குறிப்புகளுடன் (Study Tips) இந்தப் பதிவில் வழங்கியுள்ளோம். புதிய சமச்சீர் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட இந்தத் தகவல்கள், பொதுத்தமிழ் இலக்கணப் பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெற உங்களுக்குப் பெரிதும் உதவும்.

தமிழ் இலக்கணத்தில் (Tamil Grammar for TNPSC) ஓரெழுத்து ஒருமொழி என்பது மிக முக்கியமான பகுதியாகும். நன்னூலார் குறிப்பிட்ட 42 ஓரெழுத்து ஒருமொழிகளையும், அவற்றின் பொருள்களையும் மாணவர்கள் எளிதில் நினைவில்கொள்ளும் வகையில் இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.

நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.

தமிழில் உள்ள 256 எழுத்துக்களில் ஒரேழுத்து ஒரு மொழி எண்ணிக்கை 42 ஆகும். 

42 எழுத்துக்களுக்கு தனிப்பெயர்கள் உண்டு.

மொத்த ஓரெழுத்து ஒருமொழிகள் 42
நெடில் எழுத்துக்கள் 40
குறில் எழுத்துக்கள் 2 (நொ, து)

பாடத்தின் உள்ளடக்கம்(toc)

TNPSC previous year questions and answers

ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக: CCSE2-2AT/2025
  • (a) து
  • (b) கா
  • (c) கூ
  • (d) மூ
  • 1. உறுதி
  • 2. கொள்ளுகை
  • 3. பறவை
  • 4. தராசு
(a)(b)(c)(d)
(A)4321
(B)4132
(C)3412
(D)3421
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (B) 4 1 3 2
து (4) - தராசு (துலாக்கோல்)
கா (1) - உறுதி (காத்தல்)
கூ (3) - பறவை (கூகை)
மூ (2) - கொள்ளுகை (மூத்தல்)

ஓரெழுத்து ஒருமொழி(Or Ezhuthu Oru Mozhi)

ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.

இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும் பட்டியல்- 42 Tamil Single Letter Words

எண் ஓரெழுத்து  அவற்றின் பொருளும்
1 ஆ  பசு🐄
2 ஈ   கொடு
3 ஊ  இறைச்சி
4 ஏ  அம்பு
5 ஐ  தலைவன்
6 ஓ  மதகுநீர், தாங்கும் பலகை
7 கா  சோலை
8 கூ பூமி🌍
9 கை  ஒழுக்கம்
10 கோ அரசன்
11  சா  இறந்துபோ
12 சீ  இகழ்ச்சி
13  சே  உயர்வு
14  சோ   மதில்
15  தா  கொடு
16 தீ  நெருப்பு🔥
17  தூ  தூய்மை
18 தே  கடவுள்
19  தை  தைத்தல்
20 நா   நாவு👅
21 நீ  முன்னிலை ஒருமை
22  நே  அன்பு
23 நை  இழிவு
24 நோ   வறுமை
25  பா  பாடல்
26 பூ மலர்🌺
27 பே  மேகம்⛅☁
28 பை இளமை
29  போ  செல்
30 மா  மாமரம்
31 மீ  வான்
32  மூ  மூப்பு
33 மே  அன்பு
34  மை  அஞ்சனம்
35 மோ  மோத்தல்
36 யா  அகலம்
37 வா  அழைத்தல்
38 வீ  மலர்🌻
39  வை புல்
40  வெள  கவர்
41 நொ  நோய்
42 து  உண்

நன்னூல்படி, ஒரேழுத்து ஒரு மொழி 42 எழுத்துக்கள் - Nannool Grammar Rules

    ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

    ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

    தமிழ் இலக்கண அறிஞர்களிடையே ஓரெழுத்து ஒருமொழி குறித்த வகைப்பாட்டில் சில வேறுபாடுகள் உள்ளன:

    தொல்காப்பியர் vs பவணந்தி முனிவர்

    தொல்காப்பியர்: 7 நெட்டெழுத்துகள் மட்டுமே ஓரெழுத்து ஒருமொழியாக வரும் என்றும், 5 குற்றெழுத்துகள் தனித்து நின்று பொருள் தராது என்றும் கூறினார்.

    • ஓர் எழுத்து மொழி எவை எனின் நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்பார் தொல்காப்பியர்
    • குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே என்பார்.

    பவணந்தி முனிவர் (நன்னூல்) Pavanandhi Munivar Nannool 42 Letters: இவர் இப்பட்டியலை 42 ஆக விரிவுபடுத்தினார். இதில் 40 நெட்டெழுத்துகளுடன், 'நொ' (நோய்) மற்றும் 'து' (உண்) ஆகிய இரண்டு குற்றெழுத்துகளையும் சேர்த்தார்.

    • தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூலார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி என்பார். 

    நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்றால் உயிர்நெட்டெழுத்துகள் ஏழுமா?

    உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் 126 உண்டே! அவை மொழியாகும் தன்மை இல்லாதனவா என ஐயம் தோன்றும். இந்த ஐயம் தோன்றாமல் இருக்கவே உயிர் நெடில் எழுத்து என்றோ உயிர்மெய் நெட்டெழுத்து என்றோ கூறாமல் நெட்டெழுத்து என்று மட்டும் கூறினார்.

    ஒரேழுத்து ஒரு மொழி யாவை?

    தமிழில் சொல்லின் முதலில் வரும் எழுத்து, இடையில் வரும் எழுத்துஇறுதியில் வரும் எழுத்து, ஒன்றையொன்று அடுத்து வரும் எழுத்து என வரம்பு உண்டு. அதன்படி எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா. சில எழுத்துகள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை மொழிநிலையில் இடம்பெறா. இவற்றைப் போலவே நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் உண்டு. 

    "உயிர், மவில் ஆறும் த, ப, நவில் ஐந்தும் க, வ, சவில் நாலும் யவ்வில் ஒன்றும் ஆகும் நெடில் நொ, து ஆம்குறில் இரண்டோடு ஓரெழுத்து இயல்பதம் ஆறுஏழ் சிறப்பின" - நன்னூல் 129

    ஒரேழுத்து ஒரு மொழி எழுத்துக்கள் (Grouped by Category)

    42 எழுத்துகளையும் எளிதாகப் படிக்க அவை இனங்களாகப் (Groups) பிரிக்கப்பட்டுள்ளன:
    வகை (Category) இனம்
    ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ உயிர் வருக்கத்தில் ஆறு Vowel Family 
    மா, மீ, மூ, மை,மோ, மே
    மகர வருக்கத்தில் ஆறு 'Ma' Family
    தா, தீ, தூ, தே, தை
    தகர வருக்கத்தில் ஐந்து 
    பா, பூ, பே, பை, போ
    பகர வருக்கத்தில் ஐந்து
    நா, நீ, நே , நை, நோ நகர வருக்கத்தில் ஐந்து
    கா,கூ, கை, கோ ககர வருக்கத்தில் நான்கு
    வா, வீ, வை, வௌ வகர வருக்கத்தில் நான்கு
    சா, சீ, சே, சோ சகர வருக்கத்தில் நான்கு
    யா யகர வருக்கத்தில் ஒன்று 'Ya' Family:
    நொ, து தனிக் குறில் பதம் இரண்டு Short Letters

    ஆக ஓரெழுத்து மொழிகள் தமிழில் நாற்பத்திரண்டு. இச்சொற்களின் பொருள்களை கீழே கண்டறிக.

    ஓரெழுத்து சொற்களும் அவற்றின் பொருளும் - Monosyllabic words and their meanings in Tamil Language

    ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் Group by Category (Tamil Grammar Shortcuts for Competitive Exams)

    42 ஓரெழுத்து ஒருமொழிகள் மற்றும் அவற்றின் பொருள்கள் - Tamil Single Letter Words Table and Meanings

    வகை (Category) ஓரெழுத்து ஒருமொழி & பொருள்
    உயிர் இனம் (6) - பசு | - பறக்கும் பூச்சி, கொடு | - இறைச்சி | - அம்பு | - அழகு, தலைவன், வியப்பு | - வியப்பு, வினா❓, மதகுநீர் தாங்கும் பலகை
    'ம்' இனம் (6) மா - பெரிய, சிறந்த உயர்ந்த மாமரம்🌴, அழகு, மேன்மை, விலங்கு | மீ - மேலே, உயர்ச்சி, வான் | மு - மூப்பு, முதுமை | மே - மேன்மை, அன்பு | மை - கண்மை (கருமை), அஞ்சனம் | மோ - முகர்தல், முகத்தல்
    'த்' இனம் (5+1) தா - கொடு, கேட்பது | தீ - நெருப்பு🔥, தீமை | தூ - வெண்மை, தூய்மை | தே - கடவுள் | தை - தமிழ்மாதம், தைத்தல் | து - (குறில்) கெடு, பிரிவு, உண்
    'ப்' இனம் (5) பா - பாட்டு, பாடல் | பூ - மலர்🌺, புவி | பே - நுரை, மேகம் | பை - இளமை, கைப்பை | போ - செல்
    'ந்' இனம் (5+1) நா - நாக்கு, நாவு👅 | நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல் | நே - அன்பு | நை - வருந்து, இழிவு | நோ - வறுமை | நொ - (குறில்) துன்பம், நோய்
    'க்' இனம் (4) கா - காத்தல், சோலை | கூ - பூமி | கை - உறுப்பு, கரம், ஒழுக்கம் | கோ - வேந்தன், அரசன்
    'ச்' இனம் (4) சா - மரணம், பேய், இறந்துபோ | சீ - இகழ்ச்சி | சே - எருது, உயர்வு🐂 | சோ - மதில், அரண்
    'வ்' இனம் (4) வா - வருக, அழைத்தல் | வீ - மலர் | வை - வைத்தல், புல் | வௌ - வவ்வுதல், கெளவுதல், கவர்
    'ய்' இனம் (1) யா - ஒரு வகை மரம், யாவை, அகலம்
    பழங்கால இலக்கணத்திற்கும் இன்றைய நடைமுறைக்கும் சில மாற்றங்கள் உள்ளன: வழக்கொழிந்த சொற்கள்: நன்னூல் குறிப்பிட்ட சில சொற்கள் (உதாரணமாக: வௌ - கவர்) இன்று பேச்சுவழக்கில் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன.
    42 ஓரெழுத்து ஒருமொழி பட்டியல்

    நினைவுகூர்க

    நன்னூலார் போட்ட பட்டியலில் உள்ளவை பற்றிக் கருதாமல் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்தால் சில விளக்கங்கள் கிட்டும். நன்னூலார் கூறிய சில ஓரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லாதவை என்றும், வழக்கிலுள்ள சில ஓரெழுத்து ஒரு மொழிகள் நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லாதவை என்றும் தெளிவு ஏற்படும். 

    தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.

    கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழிகளை எடுத்து எழுதுக.

    (ஏ, தீ, கோ, பூ, ஐ, சோ)

    எண்ஓரெழுத்துஅதன் பொருள்
    1சோஅரண்
    2கோஅரசன்
    3அம்பு
    4தலைவன்
    5தீநெருப்பு
    6பூமலர்

    அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை உரிய கட்டத்தில் நிரப்புக.

    (பாடல், சோலை, வருக, பசு, கொடு, நாக்கு)

    எண் ஓரெழுத்து அதன் பொருள்
    1 கா சோலை
    2 தா கொடு
    3 நா நாக்கு
    4 பா பாடல்
    5 வா வருக
    6 பசு

    கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உணர்த்தும் ஒரெழுத்து ஒருமொழிகளை அறிந்து தொடரை நிரப்புக.

    (வா, கை, ஈ, சீ, போ,ஆ)

    எண் குறிப்பு ஓரெழுத்து
    1 நான் கொடுக்கும் ஓர் எழுத்து கை
    2 நான் அழைக்கும் ஓர் எழுத்து வா
    3 நான் வாயைத்திறக்க வைக்கும் ஓர் எழுத்து
    4 நான் இகழும் ஓர் எழுத்து சீ
    5 நான் பறக்கும் ஓர் எழுத்து
    6 நான் வழி அனுப்பும் ஓர் எழுத்து போ

    தொடர்புடையவை

    பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

    தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை 42 Or Ezhuthu Oru Mozhi with Meanings PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

    TNPSC previous year questions

    1. 'மதில்' என்ற பொருளைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

    A) சோ
    B) சே
    C) கோ
    D) கா
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: A) சோ

    2. 'ஊ' என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்கும் பொருள் யாது?

    A) உணவு
    B) இறைச்சி
    C) ஊன்
    D) உண்
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: B) இறைச்சி

    3. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது யாருடைய கூற்று?

    A) அகத்தியர்
    B) பவணந்தி முனிவர்
    C) தொல்காப்பியர்
    D) திருவள்ளுவர்
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: C) தொல்காப்பியர்

    4. 'அம்பு' என்பதைக் குறிக்கும் சரியான ஓரெழுத்து ஒரு மொழி எது?

    A) ஆ
    B) ஏ
    C) ஐ
    D) ஓ
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: B) ஏ

    5. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் யார்?

    A) சாத்தனார்
    B) தொல்காப்பியர்
    C) பவணந்தி முனிவர்
    D) அகத்தியர்
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: C) பவணந்தி முனிவர்

    6. 'மேகம்' என்ற பொருளை உணர்த்தும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

    A) பே
    B) மே
    C) பு
    D) பெ
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: A) பே

    7. 'மூப்பு' என்ற பொருளுக்குரிய ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டறிக.

    A) மு
    B) மீ
    C) மூ
    D) மோ
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: C) மூ

    8. 'நோய்' என்ற பொருளைக் குறிக்கும் குறில் ஓரெழுத்து ஒரு மொழி எது?

    A) நொ
    B) நே
    C) நை
    D) நெ
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: A) நொ

    9. 'மலர்' என்ற பொருளைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

    A) வி
    B) வீ
    C) வே
    D) பு
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: B) வீ

    10. 'எருது' என்ற பொருளைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

    A) சா
    B) சீ
    C) சே
    D) சோ
    E) விடை தெரியவில்லை
    விடையைக் காட்டு (Show Answer)
    விடை: C) சே

    பொருத்துக - 1 (Matching)

    ஓரெழுத்து அதன் பொருள்
    கா சோலை
    தா கொடு
    நா நாக்கு
    பா பாடல்

    பொருத்துக - 2 (Matching)

    ஓரெழுத்து அதன் பொருள்
    சோ அரண்
    கோ அரசன்
    அம்பு
    தலைவன்

    கருத்துரையிடுக

    1 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Hi Please, Do not Spam in Comments