நாலடியார் பாடல்கள் - சமணமுனிவர்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். 

பாடத்தலைப்புகள்(toc)

நாலடியார் நூல் குறிப்பு

  • இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துகளைக் கூறுவது. 

நாலடியார் வேறு பெயர்கள்

  •  'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. 
  •  'வேளாண் வேதம்' என்றும் அழைக்கப்படுகிறது.

நாலடியார் தொகுத்தவர் 

  • நாலடியார் ஆசிரியர், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.

நாலடியார் கூறும் நட்பின் சிறப்பு 

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.

-சமணமுனிவர் (code-box)

பாடல் பொருள்

நாயின் கால்விரல்கள் நெருங்கி இருக்கும். அதனைப்போலச் சிலர் நம்மோடு நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஈயின் கால் அளவுக்குக்கூட நமக்கு உதவ மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நட்பால் நமக்கு என்ன பயன் ?

வாய்க்கால், தொலைவிலுள்ள நீரைக் கொண்டுவரும்; அந்நீரை வயலுக்குப் பாய்ச்சி விளைய உதவும். வாய்க்காலைப்போல உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்கள் நட்பை நாம் தேடிக்கொள்ளுதல் வேண்டும்.

சொற்பொருள்

  • நாய்க்கால் - நாயின் கால்; 
  • ஈக்கால் - ஈயின் கால்; 
  • நன்கணியர் - நன்கு + அணியர்; 
  • அணியர் - நெருங்கி இருப்பவர்; 
  • என்னாம் - என்ன பயன் ?; 
  • சேய்(மை) - தொலைவு;
  • செய் - வயல்; 
  • அனையார் - போன்றோர்.

பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்

சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகும். 

பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத் தொகையில் எட்டு நூல்களும் உள்ளன. 

மொத்தம் பதினெட்டு நூல்களின் தொகுப்பு "பதினெண்மேல்கணக்கு" என்று வழங்கப்படுகிறது. இவற்றை "மேல்கணக்கு நூல்கள்” என்று கூறும் வழக்கமும் உண்டு. 

சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு "பதினெண்கீழ்க்கணக்கு" என்று வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.  

  • பதினெண் என்றால் பதினெட்டு என்று பொருள். 

இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.

இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 2.  அறநூல்கள் - நாலடியார் என்ற தொகுப்பிற்காக பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

பொருள் எழுதுக.

1. அணியர் - நெருங்கி இருப்பவர்;
2. செய் - வயல் 
3. சேய்(மை) - தொலைவு 

பிரித்து எழுதுக.

1. நாய்க்கால் =  நாய் + கால்
2. நன்கணியர் =  நன்கு + அணியர்
3. நட்பென்னாம்  =  நட்பு + என்னாம்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நாலடியார்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

2. பதினெண் என்பதற்கு பதினெட்டு என்பது பொருள்.

3. நாலடியார் நூலின் ஆசிரியர் - சமணமுனிவர்

குறுவினாக்கள்

1. நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதனைப் போன்றவர் ?

நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் வாய்க்கால் போன்றவர்.

2. 'வயல்' என்னும் பொருள் தரும் சொல்லை நாலடியார் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

'வயல்' என்னும் பொருள் தரும் நாலடியார் பாடல்  சொல் - செய்

சிறுவினாக்கள்

1. நாலடியார் - நூல் குறிப்புத் தருக.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துகளைக் கூறுவது. 
'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.

2. நாலடியார் கூறும் நட்புக் குறித்து எழுதுக.

நாயின் கால்விரல்கள் நெருங்கி இருக்கும். அதனைப்போலச் சிலர் நம்மோடு நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஈயின் கால் அளவுக்குக்கூட நமக்கு உதவ மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நட்பால் நமக்கு என்ன பயன் ?
வாய்க்கால், தொலைவிலுள்ள நீரைக் கொண்டுவரும்; அந்நீரை வயலுக்குப் பாய்ச்சி விளைய உதவும். வாய்க்காலைப்போல உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்கள் நட்பை நாம் தேடிக்கொள்ளுதல் வேண்டும்.

TNPSC previous year question 

1. ........ நூல்களுள் ஒன்று நாலடியார்

பதினெண்கீழ்க்கணக்கு

2. நாலடியார் ....... பாடல்களைக் கொண்டது.

நானூறு

3. 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. 

நாலடியார்

4. பதினெண் என்பதற்கு .... என்பது பொருள்.

பதினெட்டு

5. நாலடியார் நூலின் ஆசிரியர் 

 சமணமுனிவர்

6. சரியான இணை எது?

செய் - வயல் 

சேய் - தொலைவு 

இரண்டும்

7. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு

நாலடியார்

8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை 

அறநூல்கள்

8. சங்க நூல்கள் எனப்படுபவை 

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்

9. "நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் " என்று குறிப்பிடும் நூல் 

நாலடியார்

10. நாலடியார் வேறு பெயர்கள் யாவை 

 நாலடி நானூறு

 வேளாண் வேதம்

இரண்டும்

11. 'வேளாண் வேதம்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் 

நாலடியார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad